உள்ளடக்கத்துக்குச் செல்

பர்பியூரைல் ஆல்ககால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்பியூரைல் ஆல்க்கால்
Furfuryl alcohol[1]
Structural formula of furfuryl alcohol
Ball-and-stick model of the furfuryl alcohol molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(பியூரான்-2-யைல்)மெத்தனால்l
வேறு பெயர்கள்
பியூரான்-2-யைல்மெத்தனால்
பர்பியூரைல் ஆல்க்கால்
2-பியூரான்மெத்தனால்
2-பியூரான்கார்பினால்
2-(ஐதராக்சிமெத்தில்)பியூரான்
இனங்காட்டிகள்
98-00-0 Y
ChEBI CHEBI:207496 Y
ChEMBL ChEMBL308187 Y
ChemSpider 7083 Y
InChI
  • InChI=1S/C5H6O2/c6-4-5-2-1-3-7-5/h1-3,6H,4H2 Y
    Key: XPFVYQJUAUNWIW-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H6O2/c6-4-5-2-1-3-7-5/h1-3,6H,4H2
    Key: XPFVYQJUAUNWIW-UHFFFAOYAV
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7361
  • c1cc(oc1)CO
UNII D582054MUH Y
பண்புகள்
C5H6O2
வாய்ப்பாட்டு எடை 98.10 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் எரியும் நெடி[2]
அடர்த்தி 1.128 கி/செ.மீ3
உருகுநிலை −29 °C (−20 °F; 244 K)
கொதிநிலை 170 °C (338 °F; 443 K)
கலக்கும்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
தீப்பற்றும் வெப்பநிலை 65 °C; 149 °F; 338 K [2]
வெடிபொருள் வரம்புகள் 1.8% - 16.3%[2]
Lethal dose or concentration (LD, LC):
மில்லியனுக்கு 397 பகுதிகள் (சுண்டெலி, 6 மணி)
மில்லியனுக்கு 85 பகுதிகள் (எலி, 6 மணி)
மில்லியனுக்கு 592 பகுதிகள் (எலி, 1 மணி)[3]
மில்லியனுக்கு597 பகுதிகள் (சுண்டெலி, 6 மணி)[3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
நேர எடை சராசரி மில்லியனுக்கு 50 பகுதிகள் (200 மி.கி/மீ3)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
நேர எடை சராசரி மில்லியனுக்கு 10 பகுதிகள் (40 மி.கி/மீ3) குறைந்தபட்ச வெளிப்பாடு மில்லியனுக்கு 15 பகுதிகள் (60 மி.கி/மீ3) [தோல்][2]
உடனடி அபாயம்
மில்லியனுக்கு 75 பகுதிகள்[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பர்பியூரைல் ஆல்ககால் (Furfuryl alcohol) என்பது C5H6O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பியூரான் சேர்மத்தில் ஐதராக்சி மெத்தில் குழு பதிலீடு செய்யப்பட்ட கரிமச் சேர்மம் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. பர்பியூரைல் ஆல்ககால் ஒரு நிறமற்ற திரவமாகும், ஆனால் நாட்பட்ட மாதிரிகள் பிசின் நிறத்தில் தோன்றும். பர்பியூரைல் ஆல்ககால் 170 பாகை செல்சியசு வெப்பநிலையில் கொதிக்கிறது. மங்கலாக எரியும் வாசனையையும் கசப்பான சுவையையும் இச்சேர்மம் கொண்டுள்ளது. நீரில் நிலைப்புத்தன்மை இல்லாமல் கலக்கும் இயல்புடையதாகவும் ஆனால் பொதுவான கரிம கரைப்பான்களில் கரையக்கூடியதாகவும் உள்ளது [4].

தயாரிப்பு

[தொகு]

பர்பியூராலை ஐதரசனேற்றம் செய்வதன் மூலம் தொழிற்சாலைகளில் பர்பியூரைல் ஆல்ககால் உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்பு சர்க்கரை உற்பத்தியில் உண்டாகும் கழிவு , மக்காளச் சோள எச்சம் போன்ற தேவையில்லாததால் கழிக்கப்பட்ட உயிரினத் தொகுதியிலிருந்து பர்பியூராலும் உற்பத்தி செய்யப்படுகிறது.. எனவே இதன் அடிப்படையில் பர்பியூரைல் ஆல்ககாலை ஒரு பசுமை வேதிப்பொருள் என்று கருதலாம்[5].

வினைகள்

[தொகு]

பர்பியூரைல் ஆல்ககால் ஆல்கின்கள் மற்றும் ஆல்கைன்களுக்குரிய டையீல்சு ஆல்டர் வினை உள்ளிட்ட எலக்ட்ரான் நாட்ட வேதிவினைகளில் பங்கேற்கிறது. ஐதராக்சிமெத்திலேற்ற வினையின் மூலம் இது 1,5-பிசு(ஐதராக்சிமெத்தில்) பியூரான் என்ற சேர்மத்தைக் கொடுக்கிறது. . நீராற்பகுப்பு அடைந்து பர்பியூரைல் ஆல்ககால் லெவலினிக் அமிலத்தை அளிக்கிறது. அமிலங்கள், மற்றும் வினையூக்கிகளுடன் சேர்த்து சூடுபடுத்துவதால் பர்பியூரைல் ஆல்ககால் பலபடியாக மாறி பாலி (பர்பியூரைல் ஆல்ககால்) என்ர பிசினாக மாறுகிறது. பர்பியூரைல் ஆல்ககால் ஐதரசனேற்றம் அடைந்து ஐதராக்சிமெத்தில் வழிப்பெறுதியான டெட்ரா ஐதரோபியூரனையும் 1,5-பெண்டன் டையோலையும் ஃபர்ஃபுரில் ஆல்கஹால் ஹைட்ரஜனேற்றம் டெட்ராஹைட்ரோஃபுரான் மற்றும் 1,5-பென்டேண்டையோலையும் கொடுக்கிறது.

பயன்கள்

[தொகு]

பியூரான் பிசின்கள் தயாரிப்பதற்குப் பயன்படும் ஒருமமாக இருப்பது பர்பியூரைல் ஆல்ககாலின் முதன்மையான பயனாகும்[4][6]. இந்த பலபடிகள் செயற்கைப் பலபடிகள் தயாரிப்பு , சிமென்ட்டுகள், ஒட்டும் பசைப் , பூச்சுகள் மற்றும் வார்ப்பு பிசின்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன . பலபடியாக்கல் என்பது அமிலம் வினையூக்கிய பல்லொடுக்கத்தை உள்ளடக்கியதாகும். பொதுவாக கருப்பு குறுக்கு-இணைப்பான தயாரிப்பை இது அளிக்கிறது. மிகவும் எளிமையான பிரதிநிதித்துவ வினை கீழே காட்டப்பட்டுள்ளது.

கைவினை பயன்பாடுகள்

[தொகு]

பர்பியூரைல் ஆல்ககால் இராக்கெட்டு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது, புகையும் வெள்ளை நைட்ரிக் அமிலம் அல்லது புகையும் சிவப்பு நைட்ரிக் அமிலம் போன்ற ஆக்சிகரணிகளுடன் தொடர்பு கொண்டவுடன் இச்சேர்மம் உடனடியாகவும் ஆற்றலுடனும் பற்றவைக்கிறது[7].இத்தகைய உடனடி தீப்பற்றும் எரிபொருளின் பயன்பாடு இராக்கெட்டுகளில் ஒரு பற்றவைப்பான் தேவையைத் தவிர்க்கிறது. 2012 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சிபெக்ட்ரா, என்ற இராக்கெட் இயந்திரத்தில் புகையும் வெள்ளை நைட்ரிக் அமிலத்தை ஆக்சிகரணியாகப் பயன்படுத்தி பர்பியூரைல் ஆல்ககால் எரிபொருளை கோபன்னேகன் துணை சுற்றுவட்டப்பாதையில் சோதனை செய்யப்பட்டது.

குறைந்த மூலக்கூறு எடை காரணமாக, பர்பியூரைல் ஆல்ககால் சேர்மத்தால் மரத்தின் செல்களை செறிவூட்ட இயலும். அங்கு வெப்பம், கதிர்வீச்சு மற்றும் வினையூக்கிகள் அல்லது கூடுதல் வினைகள் மூலம் இது பலபடியாக்கப்பட்டு மரத்துடன் பிணைக்கப்படலாம்.. வினைக்குட்பட்ட மரம், ஈரப்பதம்-பரிமாண நிலைத்தன்மை, கடினத்தன்மை மற்றும் சிதைவு மற்றும் பூச்சி எதிர்ப்பு போன்ற செயல்களில் மேம்படுத்தப்படுகிறது. வினையூக்கிகளில் துத்தநாக குளோரைடு, சிட்ரிக், பார்மிக் அமிலம் மற்றும் போரேட்டுகள் ஆகியவை அடங்கும்[8][9].

மேலும் படிக்க

[தொகு]
  • Choura, Mekki; Belgacem, Naceur M.; Gandini, Alessandro (January 1996). "Acid-Catalyzed Polycondensation of Furfuryl Alcohol: Mechanisms of Chromophore Formation and Cross-Linking". Macromolecules 29 (11): 3839–3850. doi:10.1021/ma951522f. 

மேற்கோள்கள்

[தொகு]
  1. Merck Index, 11th Edition, 4215.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0298". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. 3.0 3.1 "Furfuryl alcohol". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  4. 4.0 4.1 Hoydonckx, H. E.; Van Rhijn, W. M.; Van Rhijn, W.; De Vos, D. E.; Jacobs, P. A. (2005), "Furfural and Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a12_119.pub2
  5. Mariscal, R.; Maireles-Torres, P.; Ojeda, M.; Sádaba, I.; López Granados, M. (2016). "Furfural: a renewable and versatile platform molecule for the synthesis of chemicals and fuels". Energy Environ. Sci. 9 (4): 1144–1189. doi:10.1039/C5EE02666K. பன்னாட்டுத் தர தொடர் எண்:1754-5692. https://digital.csic.es/bitstream/10261/184700/1/Mariscal_Furfural-A renewable_versatile_2016_postprint.pdf. 
  6. Brydson, J. A. (1999). "Furan Resins". In J. A. Brydson (ed.). Plastics Materials (Seventh Edition). Oxford: Butterworth-Heinemann. pp. 810–813. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/B978-075064132-6/50069-3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780750641326.
  7. MUNJAL, N. L. (May 1970). "Ignition catalysts for furfuryl alcohol - Red fuming nitric acid bipropellant". AIAA Journal 8 (5): 980–981. doi:10.2514/3.5816. https://archive.org/details/sim_american-institute-aeronautics-astronautics-jo_aiaa-journal_1970-05_8_5/page/980. 
  8. Alfred J., Stamm (1977). "Chapter 9". Wood Technology: Chemical Aspects. ACS Symposium Series. Vol. 43. Washington: American Chemical Society. pp. 141–149. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/bk-1977-0043.ch009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780841203730.
  9. Baysal, Ergun; Ozaki, S.Kiyoka; Yalinkilic, MustafaKemal (21 August 2004). "Dimensional stabilization of wood treated with furfuryl alcohol catalysed by borates". Wood Science and Technology. doi:10.1007/s00226-004-0248-2. 

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்பியூரைல்_ஆல்ககால்&oldid=4095299" இலிருந்து மீள்விக்கப்பட்டது