பர்குந்தா
பர்குந்தா மாலிக்ஜாதாவின் கொலை | |
---|---|
மதவாத வன்முறை | |
இடம் | காபுல், அப்கானிஸ்தான் |
ஆள்கூறுகள் | 34°31′31″N 69°10′42″E / 34.52528°N 69.17833°E |
நாள் | 19 மார்ச்சு 2015 |
தாக்குதல் வகை | கூட்டத்தினரால் அடித்துக் கொல்லப்படுதல் |
இறப்பு(கள்) | 1 (பர்குந்தா மாலிக்ஜாதா) |
பர்குந்தா (Farkhunda) என்பவர் ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலைச் சேர்ந்த 27 வயது பெண் ஆவார். 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19 ஆம் திகதி அங்குள்ள ஷா-டோ ஷாம்சிரா மசூதிக்குள் தொழுகைக்குச்சென்ற போது குரானை எரித்துவிட்டதாக எழுந்த தவறான தகவலால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.[1]
நிகழ்வு
[தொகு]காபூலில் அமைந்துள்ள ஷா-டோ ஷாம்சிரா மசூதிக்கு பர்குந்தா தொழுகைக்குச் சென்றபோது, அவர் குரானை எரித்துவிட்டதாகச் சிலர் வெளியில் ஒரு தகவலைச் சொன்னார்கள். அது நகர் முழுவதும் பரவியதால் ஏராளமான ஆட்கள் கூடி அவளை மசூதிக்கு வெளியில் இழுத்துவந்து அடித்துக் கொன்றனர்.[2] அவரின் உயிர் பிரிவதற்குள் அந்த நகரில் ஓடும் ஆற்றங்கரைக்கு எடுத்துச்சென்று எரித்தனர். ஆனால் இதை ஆயிரக்கணக்கானோர் சுற்றி நின்று வேடிக்கை மட்டும் பார்த்தனர். அப்போது தீயணைப்பு வீரர்கள் அப்பெண்ணின் உடலை மீட்டுச்சென்றனர்.
விசாரணை
[தொகு]ஆப்கானிஸ்தான் காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இவர் நிரபராதி என்று தெரிய வந்துள்ளது. அதனால் இவரின் சாவுக்கு நியாயம் கேட்டு ஏராளமான பெண்கள் காபூல் நகரில் ஊர்வலம் சென்றனர்.[3]