உள்ளடக்கத்துக்குச் செல்

பரூச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரூச்
ભરૂચ
நகரம்
சுவாமி நாராயண் மந்திர், சதேஸ்வர், பரூச்
சுவாமி நாராயண் மந்திர், சதேஸ்வர், பரூச்
அடைபெயர்(கள்): உரங்களின் நகரம் & நிலக்கடலை நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்பரூச்
ஏற்றம்
15 m (49 ft)
மக்கள்தொகை
 (2011)
 • நகரம்1,68,729
 • பெருநகர்
2,24,210
இனம்பரூச்சி
மொழிகள்
 • அலுவலக மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே 5:30 (IST)
அஞ்சலக சுட்டு எண்
392001
தொலைபேசிக் குறியீடு02642
வாகனப் பதிவுGJ16

பரூச் (Bharuch) (குஜராத்தி: ભરૂચ; listen), இந்தியாவின் , குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆறு காம்பத் வளைகுடாவில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்நகர் பரூச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பரூச் நகரம் பரூச் மாவட்டத்தின் தலைமையகமாக விளங்குகிறது. வரலாற்றில் மிகவும் தொன்மை வாய்ந்தது

பரூச் நகரத்தில் சமண தீர்த்தாங்கரர் கோயில்கள் மற்றும் பௌத்த மடாலயங்கள் அதிகம் இருப்பதால் சமணர்கள் மற்றும் பௌத்தர்களுக்கும் இந்நகரம் முக்கியத்துவம் வாய்ந்தது. பருத்தி மற்றும் செயற்கை நூல் ஆலைகள், துணி ஆலைகள், வேதியியல் தொழிற்சாலைகள், நீள இழை பருத்தி நூல்கள், பால் பொருட்கள் தயாரிக்கும் பண்ணைகள் அதிகம் கொண்ட நகரம்.

புராண வரலாறு

[தொகு]

ஸ்கந்த புராணத்தின்படி, பிருகு முனிவர் பரூச் நகரத்திற்கு வந்த போது, அங்கிருந்த ஒரு ஆமை மீது அமர்ந்து தவமியற்றினார். சமஸ்கிருத மொழியில் ஆமைக்கு கச்சா (Kachchha (कच्छ) என்று பொருள். எனவே இவ்விடத்திற்கு பிருகு கச்சா என்று அழைக்கப்பட்டது.

துறைமுகம்

[தொகு]
சீனா, எகிப்து, ரோம், அரோபியா, பாரசீகம், இலங்கை போன்ற நாடுகளுடன் உலக அளவில் கடல் வணிகத்தில் முக்கியத்துவம் பெற்ற பரூச் துறைமுகம்

.

பண்டைய காலத்தில் பரூச் துறைமுக வாயிலாக சீனா, எகிப்து, ரோம், இலங்கை, மதுரை, சுமத்திரா, அரேபியா, பாரசீகம் போன்ற நாடுகளுடன், தங்கம், நவரத்தினங்கள், யாணை தந்தம், வாசனை திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள், பட்டு பருத்தி துணிகள் வணிகம் செழிப்பாக இருந்தது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 168,391.[1] எழுத்தறிவு விகிதம் 94%.

பரூச் நகர சமயங்கள்
இந்து சமயம்
38%
இசுலாம்
60%
ஏனையோர்
2%
Distribution of religions

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரூச்&oldid=3575523" இலிருந்து மீள்விக்கப்பட்டது