பரத்பூர், ராஜஸ்தான்
பரத்பூர்
லோகாகர் | |
---|---|
அடைபெயர்(கள்): லோகாகர் | |
ஆள்கூறுகள்: 27°13′N 77°29′E / 27.22°N 77.48°E | |
நாடு | India |
மாநிலம் | ராஜஸ்தான் |
மாவட்டம் | பரத்பூர் |
பெயர்ச்சூட்டு | பாரத்- இப்பகுதியில் பிரபலமான ஒரு வரலாற்று வீரர் |
அரசு | |
• வகை | நகராட்சி அமைப்பு |
• நிர்வாகம் | பரத்பூர் மாநகராட்சி |
ஏற்றம் | 183 m (600 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,54,846 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, ஆங்கிலம் |
• பிற | பிராஜ் பாஷா, மேவதி |
நேர வலயம் | ஒசநே 5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 321001 |
இடக் குறியீடு | ( 91) 5644 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
வாகனப் பதிவு | ஆர்ஜே-05 |
இணையதளம் | http://bharatpur.rajasthan.gov.in |
பரத்பூர் (Bharatpur) என்பது இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரம் இந்தியாவின் தலைநகரான புது தில்லிக்கு தெற்கே 180 கி.மீ தொலைவிலும், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 178 கி.மீ தொலைவிலும், உத்தரபிரதேசத்தின் ஆக்ராவிலிருந்து மேற்கே 55 கி.மீ தொலைவிலும், உத்தரபிரதேசத்தின் மதுராவிலிருந்து38 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பரத்பூர் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமும் ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் பிரிவின் தலைமையகமும் ஆகும். பாரத்பூர் இந்தியாவின் தேசிய தலை நகரப் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும் . [1] இந்த நகரம் முந்தைய, பரத்பூர் மாநிலத்தின் தலைநகராக இருந்தது. இது 2014 இல் 65 வார்டுகளைக் கொண்ட ஒரு மாநகராட்சியாக மாறியது. [2] [3] [4]
இந்த நகரம் சராசரியாக 183 மீட்டர் (600 அடி) உயரத்தில் உள்ளது. இது "ராஜஸ்தானின் கிழக்கு நுழைவாயில்" என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் பரத்பூர் கோட்டை "லோகாகர்" என்று அழைக்கப்படுகிறது.
வரலாறு
[தொகு]பரத்பூர் சுதேச மாநிலமான பரத்பூரின் தலைநகராக இருந்தது. பரத்பூர் நகரம் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களால் முற்றுகையிடப்பட்டது. இராஜபுதனத்திலிருந்து ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் செய்த முதல் மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும்.
புள்ளிவிவரங்கள்
[தொகு]2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,[5] பரத்பூர் மாவட்டத்தில் 2,548,462 மக்கள் தொகை இருக்கின்றனர். இதில் ஆண்கள் 1,355,726 பேரும், பெண்கள் 1,192,736 பேரும் உள்ளனர். பரத்பூரின் சராசரி கல்வியறிவு விகிதம் 82.13% ஆகும். இது தேசிய சராசரியான 74.04% ஐ விட அதிகமாகும்; ஆண்களின் கல்வியறிவு 90.41% மற்றும் பெண் கல்வியறிவு 72.80% என இருக்கிறது.
மேலும் காண்க
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Imperial Gazetteer of India Vol 8, P-73 Bharatpur State
- ரமேஷ் சந்திர மஜும்தார், H. C. Raychaudhury, Kalikaranjan Datta: An Advanced History of India, fourth edition, 1978, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-90298-X, p. 535-36
- Female infanticide and child marriage
குறிப்புகள்
[தொகு]- ↑ . 2 July 2013.
- ↑ . 19 Feb 2014.
- ↑ . 19 Feb 2014.
- ↑ . 19 Feb 2014.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.