பயனர்:TNSE ES PRABAKARAN NGP/மணல்தொட்டி
Appearance
தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா நகரங்களில் ஒன்றாக நாகப்பட்டினம் மாவட்டம் விளங்குகிறது. தமிழகத்தின் வரலாற்றில் நாகப்பட்டினம் தனக்கென்று ஒரு முக்கிய பங்கைக் கொண்டு விளங்குகிறது. தமிழ்நாட்டின் எழில்மிகு துறைமுகமாக விளங்கும் இந்நகரம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் நிலையானதாக விளங்குகிறது.
வருகைக்கான சிறந்த நேரம்
[தொகு]நாகப்பட்டினமானது கடலின் அமைவிடத்தைப் பொறுத்து அதன் வெப்பநிலை மற்றும் வெப்பமான குளிர்காலம் ஆகியவற்றால் அறியப்படுகிறது. இந்நகரத்தின் வெப்பநிலை அதிகப்பட்சமாக 32.0 டிகிாி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 24.6 டிகிாி செல்சியசாக ஆண்டின் பெரும்பாலான நேரங்களில் இருக்கும். நாகப்பட்டினம் நகருக்கு சுற்றுலா செல்லும் போது தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் அழகைக் காண குளிர்காலமும். பருவநிலைக் காலமும் மிக ஏற்றது.[1]
போக்குவரத்து வசதிகள்
[தொகு]தமிழகத்தின் தலைநகரமான சென்னையிலிருந்து நாகப்பட்டினம் செல்வதற்கு நேரடியான சாலை போக்குவரத்து வசதி உள்ளது. சென்னை, திருச்சி, தஞ்சாவூர், நாகூர் வழித்தடங்களிலிருந்து இந்நகரத்திற்கு செல்ல தொடாி வசதியும் உள்ளது. தமிழகத்தின் மத்திய நகரமான திருச்சி வரை வான்வழிப் போக்குவரத்து வசதியும் உள்ளது. திருச்சியிலிருந்து 147 கி.மீ. தொலைவில் நாகப்பட்டினம் அமைந்துள்ளது.[2]
முக்கிய சுற்றுலா இடங்கள்
நாகூர்
[தொகு]நாகப்பட்டினத்தின் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குவது நாகூர். நகரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் நாகூர் அமைந்துள்ளளது. இஸ்லாமிய சமயத்தை போற்றும் தர்கா இங்கு அமைந்துள்ளது. மேலும் மத நல்லிணக்கத்தை போற்றும் இந்து, முஸ்லீம், கிறி்ஸ்துவர்களும் வழிபாடு செய்யும் ஸ்தலமாகவும் உள்ளது.
வேளாங்கண்ணி
[தொகு]வேளாங்கண்ணி கிறிஸ்துவர்களின் புண்ணிய திருதலத்தில் ஒன்றான வேளாங்கண்ணி நாகப்பட்டினம் நகாிலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு உலகம் எங்கும் இருக்கக்கூடிய இந்துக்களும். கிறிஸ்துவர்களும் சாதி சமய வேறுபாடின்றி வருகை புாிகின்றனர். மத நல்லிணக்கத்தைப் போற்றும் திருத்தலமாக வேளாங்கண்ணி விளங்குகிறது. இங்கு குழந்தை வடிவத்தில் மோி மாதவுடன் இயேசு காட்சி தருகிறார்.[3]
எட்டுக்குடி
[தொகு]நாகப்பட்டினம் நகாிலிருந்து 28 கி.மீ தொலைவிலிருந்து எட்டுக்குடி அமைந்து உள்ளது. இங்கு முருகன் கடவுளாக காட்சி தருகிறார். சித்திரை பெளர்ணமி நாட்களிலும், கார்த்திகை தின நாட்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
தரங்கம்பாடி
[தொகு]நாகப்பட்டினம் நகாிலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது. தரங்கம்பாடி வரலாற்று சிறப்புமிக்க இடங்களாக இது விளங்குகிறது. டேனிஸ் காரர்களால் கட்டப்பட்ட கோட்டை இங்கு அமைந்து உள்ளது. மேலும் கடல்வாழ் உயிரின ஆய்வு மையமும் அருங்காட்சியகமும் அமைந்து உள்ளது. கடல் அலைகளின் வேகத்தை குறைக்கக் கூடிய அலையாற்றிக் காடுகள் அமைந்து உள்ளது சிறப்பாகும்.
கோடியக்கரை
[தொகு]நாகப்பட்டினம் நகாிலிருந்து 55 கி.மீ தொலைவில் அமைந்து உள்ள இடம்கோடியக்கரை. நாகப்பட்டி்னத்தின் கடைக் கோடி இடமாக இது விளங்குகிறது. இங்கு வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் பறவைகள் சரணாலயம் அமைந்து உள்ளது. இராமாயணத்தில் அறியப்படும் இராமன் இங்கு வந்து சென்றதற்கான அடையாளமான இராமர் பாதம் இங்கு அமைந்து உள்ளது. உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்கள் இங்கு மிகுதியாக அமைந்து உள்ளது. மேலும் மீன்பிடி தளமாகவும் விளங்குகிறது.[4]