2005 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கில விக்கிப்பீடியாவை பாவித்து வருகின்றேன். தேடல் பொறி மூலம் அறிமுகமான இது எனது 2 ஆம் தேடல் பொறியாகவே இருந்து வருகின்றது. ஆங்கில கட்டுரையில் பிறமொழிகளுக்கான இணைப்பிலிருந்த தமிழுக்கான இணைப்பு தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைக்க வைத்தது. யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற வாக்கியமும் ஊடகப் போட்டியும் என்னை எழுதத் தூண்டியன. அதுமட்டுமின்றி, என் தாய்மொழியும் செம்மொழியும் பாவனை அடிப்படையில் 19 ஆம் இடத்திலுள்ள தமிழ், விக்கிப்பீடியா கட்டுரை அடிப்படையில் 60 ஆம் (தற்போது xx) இடத்திலிருப்பதும் என்னை எழுதத் தூண்டிய மற்றுமொரு காரணம். ஆயினும், இந்த கட்டற்ற அமைப்பு கட்டுக்கோப்பற்று இருப்பதாக உணர்வதால், பங்களிப்பு நிலை மாறுகிறது.
பயனர் பெட்டிகள்
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 13 ஆண்டுகள் 18 நாட்கள் ஆகின்றன.