உள்ளடக்கத்துக்குச் செல்

பத்ரிபால் போலி இராணுவ மோதல் கொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்ரிபால் போலி காவல்துறை மோதல் கொலைகள் 25ம் தேதி மார்ச் மாதம் 2000ம் ஆம் ஆண்டு இந்திய நாட்டின் வடக்கு மாநிலமான சம்மு காசுமீரில் அனந்தநாக் மாவட்டத்தில் இந்திய இராணுவ வீரர்களால் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சம்மு காசுமீர் மாநிலத்தில்அனந்தநாக் மாவட்டத்தைக் காட்டும் படம்

வழக்கு

[தொகு]

காசுமீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாத் மாவட்டத்தின் ஒரு கிராமமான பத்திரபால்(Pathribal) என்ற இடத்தில் மார்ச் 25, 2000 அன்று சில ராணுவ வீரர்கள் நுழைந்து , சிலரைச் சுட்டனர் . ஒரு குடிசையும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. அடையாளம் காண முடியாத அளவுக்குக் கருகிப் போயிருக்கும் ஐந்து பேரின் உடல், பிரேத பரிசோதனை எதுவும் செய்யப்படாமல் புதைக்கப்பட்டன. பொதுமக்களின் எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து , அந்தப் பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. மத்திய புலன் விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மார்ச் 2012இல் பாத்ரிபலில் நடந்தது போலி மோதல் கொலை என்றும் அந்தப் படுகொலைக்குக் காரணமான ராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நடுவண் புலனாய்வுச் செயலகம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.[1]இச்சம்பவத்தைச் சுட்டிக்காட்டி இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையமும் கண்டனம் தெரிவித்தது. இந்த வழக்கை இந்திய ராணுவம் உள்ளூர் காவல் துறையின் புலனாய்வு தகவலின் பேரில் வெளிநாட்டு தீவிரவாதிகளைத்தான் நாங்கள் தாக்குதல் நடத்தினோம், இத்தாக்குதலின் பொது மக்கள் யாரும் பாதிப்படையவில்லை என வாதாடியது.[2][3][4].[5] [6]

முடிவு

[தொகு]

2000ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் பற்றிய வழக்கு 23ம் தேதி ஜனவரி மாதம் 2014ம் ஆண்டு போதிய ஆதாரம் இல்லை என்று கருதி தள்ளுபடி செய்யப்பட்டது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பாத்ரிபல் அநீதி!". தினமணி. 4 பெப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 5 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. India, Express. "Pathribal encounter 'cold blooded murder', CBI tells SC". பார்க்கப்பட்ட நாள் 20 March 2012.
  3. India, Express. "Pathribal encounter "cold blooded murders," CBI tells SC". Archived from the original on 30 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 20 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Hindu, The. "Pathribal encounter is cold-blooded murder, CBI tells court". Press Trust of India. Archived from the original on 21 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Pathribal fake killing: Army to finally try its men". 29 June 2012. http://www.dnaindia.com/india/report_pathribal-fake-killing-army-to-finally-try-its-men_1708065. 
  6. "Indian Army closes the case of 2000 Pathribal Shootings". IANS. Biharprabha News. பார்க்கப்பட்ட நாள் 23 January 2014.
  7. http://www.dailythanthi.com/2014-01-24-14-years-later-Army-closes-Pathribal-fake-encounter-case தின தந்தி பார்த்த நாள் 23.01.2014