பசங்க (திரைப்படம்)
பசங்க | |
---|---|
இயக்கம் | பாண்டிராஜ் |
தயாரிப்பு | சசிகுமார் |
கதை | பாண்டிராஜ் |
இசை | ஜேம்ஸ் வசந்தன் |
நடிப்பு | விமல், வேகா |
ஒளிப்பதிவு | பிரேம் குமார் |
படத்தொகுப்பு | யோகா பாஸ்கர் |
வெளியீடு | மே 1 2009 |
மொழி | தமிழ் |
பசங்க, 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை சசிகுமார் தயாரிக்க, அறிமுக இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தின் கதாநாயகன் விமல் ஒரு புதுமுகம். கதாநாயகி வேகா. இவர் சரோஜா என்ற படத்தில் நடித்தவர். இவர்கள் தவிர சில குழந்தைகள் முக்கிய வேடங்களிலும் மற்றும் துணை கதாபாத்திரங்களில் சிலரும் நடித்து உள்ளனர். இந்த திரைப்படம் மே 1, 2009 அன்று வெளியானது.
கதாப்பாத்திரங்கள்
[தொகு]- விமல் — மீனாட்சி சுந்தரம்
- வேகா - சோபிகண்ணு சொக்கலிங்கம்
- கிஷோர் - அன்புக்கரசு வெள்ளைச்சாமி
- ஸ்ரீ ராம் - ஜீவா நித்தியானந்தம் சொக்கலிங்கம்
- பாண்டியன் - குழந்தைவேலு (பக்கடா)
- தாரணி - மனோன்மணி
- முருகேஷ் - குட்டிமணி
- கார்த்திக் ராஜா - கௌதம் வெள்ளைச்சாமி (புஜ்ஜிமா)
- யோகநாதன் - அகிலா
- ஜெயபிரகாஷ் - சொக்கலிங்கம்
- சிவகுமார் - வெள்ளைச்சாமி
- சுஜாதா - முத்தடக்கி சொக்கலிங்கம்
- செந்திகுமாரி - போதும்பொண்ணு வெள்ளைச்சாமி
பாடல்கள்
[தொகு]இந்த திரைப்படத்தில் 4 பாடல்கள் இடம் பெற்று உள்ளன. சசிகுமாரின் சுப்ரமணியபுரம் திரைப்படத்திற்கு இசையமைத்த ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்திற்கும் இசை அமைத்து உள்ளார். பாடல்களை தாமரை, யுகபாரதி மற்றும் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் எழுதி உள்ளனர். ஒரு பாடலை புகழ் பெற்ற இசை மேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடி உள்ளார். கமல்ஹாசன் அவர்கள் இந்த படத்தின் பாடல்களை வெளியிட்டது சிறப்பம்சம்.
வரிசை | பாடல் | பாடகர்கள் | படமாக்கம் | நீளம் (நி:நொ) | எழுதியது | குறிப்பு |
1 | நான்தான் | சத்யநாராயணன், லார்சன் சிரில் | 4:32 | யுகபாரதி | ||
2 | ஒரு வெட்கம் வருதே | நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல் | 6:00 | தாமரை | ||
3 | Who is that guy | பென்னி தயாள் | 2:02 | ஜேம்ஸ் வசந்தன் | ||
4 | அன்பாலே அழகாகும் | பாலமுரளி கிருஷ்ணா, பேபி K. சிவாங்கி | 6:06 | யுகபாரதி |
விருதுகள்
[தொகு]- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (முதற் பரிசு)