நோபல் பரிசு பெற்ற ஆசியர்களின் பட்டியல்
நோபல் பரிசு என்பது இயற்பியல், வேதியியல், உடலியல் அல்லது மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளின் சாதனைகளுக்காக 1901ஆம் ஆண்டில் முதன்முதலில் வழங்கப்படும் சர்வதேச பரிசாகும். பொருளாதாரத்தில் தொடர்புடைய பரிசு 1969 முதல் வழங்கப்படுகிறது.[1] இதுவரை சுமார் 800க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.[2]
இயற்பியல், வேதியியல், உடலியல் அல்லது மருத்துவம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய ஆறு விருது பிரிவுகளிலும் ஆசியாவினைச் சார்ந்தவர்கள் பெற்றுள்ளனர். இரவீந்திரநாத் தாகூர் முதன் முதலாக நோபல் பரிசு பெறும் ஆசியக் கண்டத்தினைச் சாந்தவர் ஆவார். இவருக்கு 1913 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒரே ஆண்டில் அதிக அளவில் ஆசியர்களுக்கு 2014இல் விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் ஐந்து ஆசியர்கள் நோபல் பரிசு பெற்றனர். அண்மையில் பரிசு பெற்ற ஆசியர்கள், இசுப்பானிய ஆராய்ச்சியாளர் அக்கிரா யோசினோ மற்றும் இந்தியப் பொருளாதார நிபுணர் அபிஜித் பேனர்ஜி. இவர்கள் 2019ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றனர்.
இன்று வரை (2020), ஐம்பத்தேழு ஆசியர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இவர்களில் இருபத்தெட்டு பேர் ஜப்பானியர்கள், பன்னிரண்டு பேர் இஸ்ரேலியர்கள், ஒன்பது இந்தியர்கள் (இந்தியாவில் பிறந்த இந்தியரல்லாத பரிசு பெற்றவர்கள் உட்பட) மற்றும் எட்டு சீனர்கள் (சீனரல்லாதவர்கள் உட்பட) சீனாவில் பிறந்த பரிசு பெற்றவர்கள்).
இயற்பியல்
[தொகு]2018ஆம் ஆண்டு நிலவரப்படி, இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற 20 ஆசியர்கள் அல்லது ஆசிய அமெரிக்கர்கள் உள்ளனர். இதில் அதிகமானோர் ஜப்பானியர்கள் (11 பரிசு) பெற்றவர்களில் அதிகம்.
வேதியியல்
[தொகு]2019ஆம் ஆண்டு நிலவரப்படி, வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற 19 ஆசியர்கள் அல்லது ஆசிய அமெரிக்கர்கள் உள்ளனர், ஜப்பானியர்கள் 8 பரிசு பெற்றவர்களில் அதிகம்.
உடலியல் அல்லது மருத்துவம்
[தொகு]2018ஆம் ஆண்டு நிலவரப்படி, உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு வென்ற 7 ஆசியர்கள் உள்ளனர். இவர்களில் ஜப்பானியர்கள் 5 பரிசு பெற்று முதலிடத்தில் உள்ளனர்.
ஆண்டு | படம் | பரிசு பெற்றவர் | விருது வழங்கப்பட்ட நாடு | வகை | கருத்து |
---|---|---|---|---|---|
1968 | ஹர் கோவிந்த் கோரானா | ஐக்கிய அமெரிக்கா | உடலியல் அல்லது மருத்துவம் | பிறப்பு இந்தியா | |
1987 | சுசுமு டோனெகாவா | சப்பான் | உடலியல் அல்லது மருத்துவம் | உடலியல் அல்லது மருத்துவத்தில் முதல் ஆசிய மற்றும் ஜப்பானிய நோபல் பரிசு பெற்றவர் | |
2012 | ஷின்யா யமனக்கா | சப்பான் | உடலியல் அல்லது மருத்துவம் | ||
2015 | சடோஷி Ōmura | சப்பான் | உடலியல் அல்லது மருத்துவம் | ||
2015 | து யூயோ | l சீனா | உடலியல் அல்லது மருத்துவம் | முதல் சீனப் பெண் நோபல் | |
2016 | யோஷினோரி ஓசுமி | சப்பான் | உடலியல் அல்லது மருத்துவம் | ||
2018 | தாசுகு ஹான்ஜோ | l சப்பான் | உடலியல் அல்லது மருத்துவம் |
இலக்கியம்
[தொகு]2018ஆம் ஆண்டு நிலவரப்படி, இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற 8 ஆசியர்கள் உள்ளனர். இவர்களில் ஜப்பானியர்கள் 3 பரிசுகளுடன் அதிகம் பரிசு பெற்றவர்களாக உள்ளனர்.
ஆண்டு | படம் | பரிசு பெற்றவர் | விருது வழங்கப்பட்ட நாடு | வகை | கருத்து |
---|---|---|---|---|---|
1913 | ரவீந்திரநாத் தாகூர் | இந்தியா | இலக்கியம் | முதல் ஆசிய மற்றும் இந்திய நோபல் பரிசு பெற்றவர் | |
1968 | யசுனாரி கவாபதா | சப்பான் | இலக்கியம் | ||
1994 | கென்சாபுரே | சப்பான் | இலக்கியம் | ||
2000 | காவ் சிங்ஜியன் | பிரான்சு | இலக்கியம் | சீனாவில் பிறந்தவர் | |
2001 | வி.எஸ்.நைபால் | ஐக்கிய இராச்சியம் | இலக்கியம் | இந்திய வம்சாவளி. டிரினிடாட் மற்றும் டொபாகோவில் பிறந்தார். | |
2006 | ஒர்ஹான் பாமுக் | துருக்கி | இலக்கியம் | முதல் துருக்கிய நோபல் பரிசு பெற்றவர் | |
2012 | மோ யான் | சீனா | இலக்கியம் | ||
2017 | கசுவோ இஷிகுரோ | ஐக்கிய இராச்சியம் | இலக்கியம் | பிறப்பு சப்பான் |
சமாதானம்
[தொகு]2018ஆம் ஆண்டு நிலவரப்படி, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற 20 ஆசியர்கள் உள்ளனர். இசுரேலியரும் இந்தியரும் தலா 3 பரிசுகள் பெற்றுள்ளனர்.
Year | Image | Laureate | விருது வழங்கப்பட்ட நாடு | பிரிவு | குறிப்பு |
---|---|---|---|---|---|
1973 | லீ டக் தோ (மறுப்பு தெரிவித்தார்) |
வட வியட்நாம் | அமைதி | முதல் ஆசிய, வியட்நாம் அமைதிக்கான பரிசு | |
1974 | ஈசாகு சட்டோ | சப்பான் | அமைதி | ||
1978 | மென்செம் பெகின் | இசுரேல் | அமைதி | ||
1979 | அன்னை தெராசா | இந்தியா | அமைதி | முதல் ஆசிய பெண் | |
1989 | டென்சி கியாட்சோ (14வது தலாய்லமா) | இந்தியா | அமைதி | முதல் திபெத்தியன் பரிசு | |
1991 | ஆங் சான் சூச்சி | Burma | அமைதி | முதல் மியான்மர் பரிசு | |
1994 | யாசிர் அராபாத் | பலத்தீன் | அமைதி | முதல் பாலஸ்தீன பரிசு | |
1994 | சிமோன் பெரஸ் | இசுரேல் | அமைதி | ||
1994 | இட்சாக் ரபீன் | இசுரேல் | அமைதி | ||
1996 | கரோலசு பிலிப்பி சிமென்சு பெலோ | கிழக்குத் திமோர் | அமைதி | முதல் திமோர் நாட்டு பரிசு | |
1996 | ஜோசு ரமோசு ஹொர்டா | கிழக்குத் திமோர் | அமைதி | அமைதிக்கான முதலாவது திமோர் நோபல் பரிசு | |
2000 | கிம் டாய் ஜூங் | தென் கொரியா | அமைதி | முதல் கொரிய நோபல் பரிசு | |
2003 | சீரின் இபாதி | ஈரான் | அமைதி | முதல் ஈரானியன் | |
2006 | முகமது யூனுஸ் | வங்காளதேசம் | அமைதி | அமைதிக்கான முதல் வங்கதேச பரிசு | |
2007 | ஜோசு ரமோன் விலாரின் | பிலிப்பீன்சு | அமைதி | கூட்டாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி அல் கோர் காலநிலை மாற்ற ஆய்விற்காக"[3] | |
2010 | லியூ சியாபோ | சீனா | அமைதி | சிறையிலிருந்து பெறப்பட்ட முதல் நோபல் பரிசு | |
2011 | தவக்குல் கர்மான் | யேமன் | அமைதி | முதல் அரேபிய, யேமன் நாட்டு நோபல் பரிசு | |
2014 | கைலாசு சத்தியார்த்தி | இந்தியா | அமைதி | அமைதிக்கான முதல் இந்திய நோபல் பரிசு | |
2014 | மலாலா யூசப்சையி | பாக்கித்தான் | அமைதி | முதல், பாக்கித்தானிய இளம் பெண் | |
2018 | நாதியா முராது | ஈராக் | அமைதி | முதல் ஈராக் நோபல் பரிசு | |
2021 | மரியா இரேசா | பிலிப்பீன்சு | அமைதி | அமைதிக்கான முதலாவது பிலிப்பீன்சு நோபல் பரிசு |
பொருளாதாரம்
[தொகு]2019ஆம் ஆண்டு நிலவரப்படி, நான்கு ஆசியர்கள் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.
ஆண்டு | படம் | பரிசு பெற்றவர் | விருது வழங்கப்பட்ட நாடு | வகை | கருத்து |
---|---|---|---|---|---|
1998 | அமர்த்தியா சென் | இந்தியா | பொருளாதாரம் | பொருளாதாரத்தில் முதல் ஆசிய மற்றும் இந்திய நோபல் பரிசு பெற்றவர். | |
2002 | டேனியல் கான்மேன் | இசுரேல் மற்றும் ஐக்கிய அமெரிக்கா | பொருளாதாரம் | ||
2005 | ராபர்ட் ஆமான் | இசுரேல் மற்றும் ஐக்கிய அமெரிக்கா | பொருளாதாரம் | ||
2019 | அபிஜித் பானர்ஜி | இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா | பொருளாதாரம் | [4] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nobel Prize" (2007), in Encyclopædia Britannica, accessed 14 November 2007, from Encyclopædia Britannica Online:
An additional award, the Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel, was established in 1968 by the Bank of Sweden and was first awarded in 1969
- ↑ "All Nobel Laureates". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2010-03-01.
- ↑ "The Nobel Peace Prize for 2007". Oslo: The Norwegian Nobel Committee. 12 October 2007. Archived from the original on 2010-11-28. பார்க்கப்பட்ட நாள் 20 November 2018.
- ↑ Hannon, Dominic Chopping and Paul. "Nobel Prize in Economics Awarded for Work Alleviating Poverty". WSJ. பார்க்கப்பட்ட நாள் 14 October 2019.