நைஜர்
குறிக்கோள்: "Fraternité, Travail, Progrès"(பிரெஞ்சு) "சகோதரத்துவம், பணி, முன்னேற்றம்" | |
நாட்டுப்பண்: லா நைஜரியென் | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | நியாமி |
ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு |
மக்கள் | நைஜரியென் |
அரசாங்கம் | ஒருமுக அரசு, குடியரசு |
மகாமதூ யூசுப் | |
• பிரதமர் | பிரிஜி ரபினி |
விடுதலை | |
• கூற்றம் | ஆகஸ்ட் 3 1960 |
பரப்பு | |
• மொத்தம் | 1,267,000 km2 (489,000 sq mi) (22வது) |
• நீர் (%) | 0.02 |
மக்கள் தொகை | |
• ஜூலை 2012 மதிப்பிடு | 16,274,738[1] (63வது) |
• 2001 கணக்கெடுப்பு | 10,790,352 |
• அடர்த்தி | 12.1/km2 (31.3/sq mi) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2011 மதிப்பீடு |
• மொத்தம் | $11.632 billion[2] |
• தலைவிகிதம் | $771 |
ஜினி (1995) | 50.5 உயர் |
மமேசு (2011) | 0.295 Error: Invalid HDI value · 186வது |
நாணயம் | சி.எப்.ஏ. பிரான்க் (XOF) |
நேர வலயம் | ஒ.அ.நே 1 (மேஆநே) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே 1 (இல்லை) |
அழைப்புக்குறி | 227 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | NE |
இணையக் குறி | .ne |
நைஜர் அல்லது நைசர் (பிரெஞ்சு உச்சரிப்பு: [niʒɛʁ], சில வேளைகளில் /niːˈʒɛər/ அல்லது /ˈnaɪdʒər/ (ⓘ) என்றும் அழைக்கப்படுகிறது[3]) என்னும் நைஜர் குடியரசு, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நிலம் சூழ் நாடு ஆகும். நைஜர் ஆற்றின் பெயரையொட்டி இப்பெயர் வந்தது. இந்நாட்டின் தலைநகரம் நியாமி ஆகும். நைஜருக்குத் தெற்கே நைஜீரியாவும் பெனினும், மேற்கே புர்க்கினா பாசோவும் மாலியும், வடக்கே அல்சீரியாவும் லிபியாவும், கிழக்கே சாடும் உள்ளன. ஏறத்தாழ 1,270,000 km2 பரப்பளவுடைய நைஜர், மேற்கு ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடு ஆகும். இதில் 80 விழுக்காடு நிலம் சகாரா பாலைவனத்தில் உள்ளது. 15 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்தொகையில் பெருமளவினர் இசுலாமியர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் நாட்டின் தெற்கு, மேற்கு மூலைகளில் வாழ்கிறார்கள்.
வளர்ந்து வரும் நாடான நைஜர், ஐக்கிய நாடுகளின் மனித வளர்ச்சிச் சுட்டெண்களில் தொடர்ந்து கீழ் நிலையில் இடம்பெற்று வருகிறது. 2011 அளவீட்டின் படி, 187 நாடுகளில் 186ஆவது இடத்தையே பெற்றது. நாட்டின் பாலைவனமல்லா பகுதிகள் பலவும் விட்டு விட்டு வரும் வறட்சியாலும் பாலைவனமாதலாலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. நைஜரின் பொருளாதாரம் வாயுக்கும் வயிற்றுக்குமான வேளாண்மையையும் சிறிதளவு ஏற்றுமதி வேளாண்மையையும் யுரேனியம் உள்ளிட்ட இயற்கை வளங்களின் ஏற்றுமதியையும் நம்பியே உள்ளது. சுற்றி நிலம் சூழ்ந்துள்ள நிலை, பாலை நிலம், மோசமான கல்வி, ஏழ்மை, உள்கட்டமைப்பு வசதியின்மை, மோசமான நலத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு முதலியவற்றால் நைஜர் முடங்கி உள்ளது.
வரலாறு
[தொகு]முன்னர் பிரான்சின் பேரரசுவாத ஆட்சியின் கீழ் இருந்து 1970ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அன்று முதல் நைஜீரியர்கள் ஐந்து அரசியல் அமைப்புகளின் கீழும் மூன்று இராணுவ ஆட்சிகளின் கீழும் வாழ்ந்துள்ளனர். 2010ல் நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து, தற்போது நைஜர் ஒரு பல கட்சி குடியரசாகத் திகழ்கிறது.
புவியியல்
[தொகு]புவி அமைப்பு
[தொகு]மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜர் நாடானது, அதன் எல்லைகள் நிலத்தால் சூழப்பட்டு, சகாரா மற்றும் துணை சகாரா பாலைவனப் பகுதிகளின் இடையே அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவான 1,267,000 சதுர கிலோமீட்டர்கள் (489,191 sq mi)ல், நீர்ப்பரப்பளவு மட்டும் சுமார் 300 சதுர கிலோமீட்டர்கள் (116 sq mi) ஆகும்.
நைஜர் தனது எல்லையாக 7 நாட்டைக் கொண்டுள்ளது. நாட்டின் நீளமான எல்லையாக (1,497 km or 930 mi) அளவைக் கொண்ட நாட்டின் தென்பகுதியான நைஜீரியாவாகும். அதற்கடுத்தாற்போல் கிழக்கு எல்லையாக சாட்(நீளம்: 1,175 km (730 mi)), வடமேற்கு எல்லையாக அல்ஜிரியா (956 km or 863 mi) மற்றும் மாலி (821 km (510 mi)), தென்மேற்கு எல்லையாக பர்கினா (628 km (390 mi)) மறறும் பெனின் (266 km (165 mi)) மற்றும் வடகிழக்கு எல்லையாக லிபியா (354 km (220 mi)).
நாட்டின் உயர்வான பகுதியாக இதுகல்-ந-தாகேஸ் (2,022 m (6,634 அடி)) மற்றும் மிகவும் தாழ்வான பகுதியாக நைஜிரியா ஆறும் (200 மீட்டர்கள் (656 அடி)) உள்ளது.
காலநிலை
[தொகு]நைஜர் நாடு ஒரு வெப்பமண்டலமாதலால், காலநிலையானது பாலைவன பகுதிகளில் மிகவும் சூடாகவும் உலர்வாகவும் இருக்கும். தெற்கிலுள்ள நைஜர் ஆற்றுப்படுகைகளில் வெப்பமண்டலமாகவே இருக்கும். நிலப்பரப்பின் பெரும்பங்கு பாலைவனமாக இருந்தாலும், தெற்கில் பசுமையான நிலப்பரப்பும், வடக்கில் மலைக்குன்றுகளும் அதிகம் காணப்படும்.
சமயம்
[தொகு]நைஜர் அரசியலமைப்பின்படி, நாட்டு மக்கள் யாவருக்கும் மத சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மற்றும் இந்நாட்டு மக்கள் அனைவரும், சமூக அமைதி மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவற்றை பேணிகாத்து மதிக்கின்றனர்[5]. அமெரிக்க அரசாங்கத்தின்படி 2007 ஆம் ஆண்டு, மத நம்பிக்கை அல்லது நடைமுறையில் அடிப்படையில் சமுதாய மீறல்கள் எதுவும் பதிவாகவில்லை[5].
இசுலாம்
[தொகு]இசுலாமியத்தின் 95 விழுக்காடு மக்கள், சன்னி இன வகுப்பைச் சார்ந்தவராகவும், இதர 5 விழுக்காடு மக்கள், சியா இனத்தவராகவும் உள்ளனர்[5]. 15ம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் இங்குள்ள பகுதிகளில் இசுலாமிய மதம் தழைத்தோங்கத் தெடங்கியது. 17ம் நூற்றாண்டில் அசுர வளர்ச்சி பெற்றது, இசுலாமியச் சமயம். மேலும், 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் புலா லெத், சுபி மற்றும் சொகொடா கலிபாத்தே (தற்போதைய நைஜிரியா) ஆகிய பகுதிகளில் நன்கு பரவிற்று[6].
சமய விழுக்காடுகள்
[தொகு]இசுலாம்/முஸ்லிம் - 93%
இதர சமயங்கள் - 7% (mostly animist)
பஹாய் (Bahá'í) நம்பிக்கை
[தொகு]துணை சாகாரா பாலைவனத்தில் மக்கள் தொகை பெருகிய போதுதான் பஹாய் நம்பிக்கை உருவாயிற்று [7]. நாட்டின் முதல் பஹாயின் வருகையானது, 1966ல் நடந்தேறியது[8] 1975ம் ஆண்டு, தேசிய ஆன்மீக சபையின் தேர்தலை நடத்தும் அளவிற்கு அதன் வளர்ச்சி இருமடங்காக பெருகியது[9]. பின்னர், 1970 மற்றும் 1980களில் சில தவறான காரியங்கள் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டதால், 1992ல் மீண்டும் தேர்தல் நடந்தது. நைஜரின் தென்மேற்கு பகுதிகளில் 5600க்கும் (நாட்டின் மக்கள் தொகையில் 0.4 விழுக்காடு மக்கள்) மேற்பட்டோர் பின்பற்றுகின்றனர்.
சான்றுகள்
[தொகு]- ↑ INS Niger (பிரெஞ்சு)
- ↑ "Niger". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் 20 April 2012.
- ↑ How Do You Pronounce "Niger"? from Slate.com, retrieved 04 March, 2012
- ↑ "Niger". Association of Religion Data Archives. பார்க்கப்பட்ட நாள் 3 November 2012.
- ↑ 5.0 5.1 5.2 International Religious Freedom Report 2010: Niger. United States Bureau of Democracy, Human Rights and Labor (November 17, 2010). This article incorporates text from this source, which is in the public domain.
- ↑ James Decalo. Historical Dictionary of Niger. Scarecrow Press/ Metuchen. NJ — London (1979) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8108-1229-0 pp. 156-7, 193-4.
- ↑ "Overview Of World Religions". General Essay on the Religions of Sub-Saharan Africa. Division of Religion and Philosophy, University of Cumbria. Archived from the original on 2007-12-09. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16.
- ↑ House of Justice, Universal (1966). "Ridván Letter, 1966". Ridvan Messages from the Universal House of Justice. Bahá'í Library Online. பார்க்கப்பட்ட நாள் 2008-05-04.
- ↑ Hassall, Graham. "Notes on Research on National Spiritual Assemblies". Asia Pacific Bahá'í Studies. Bahá'í Library Online. பார்க்கப்பட்ட நாள் 2008-05-04.