உள்ளடக்கத்துக்குச் செல்

நுகர்விய எதிர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுகர்விய எதிர்ப்பு என்பது நுகர்வியத்தை, தொடர்ச்சியான கொள்முதலை, மீதமான உடைமையாக்கத்தை எதிர்த்த ஒரு சமூக அரசியல் பொருளாதாரக் கருத்தியலும் சமூக இயக்கமும் ஆகும்.[மேற்கோள் தேவை] தனி நபர்கள், வணிகங்கள் பொது நலத்தைப் பாதிக்கும் வண்ணம் மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பாக, குறிப்பாக சூழல், சமூக ஏற்ற தாழ்வு, அறம் போன்றவற்றை முறையாகக் கருத்தில் கொள்ளாமல் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாக அக்கறை கொண்டுள்ளது. அரசியல் தளத்தில், நுகர்விய எதிர்ப்பு, சூழலியம், உலகமயமாதல் எதிர்ப்பு, விலங்கு உரிமைகள் செயற்பாடுகள் ஆகியவற்றுடன் பல முனைகளில் ஒன்றுபடுகின்றது. நுகர்விய எதிர்ப்பு நுகர்விய மாற்றுக்களையும் முன்வைக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுகர்விய_எதிர்ப்பு&oldid=1881812" இலிருந்து மீள்விக்கப்பட்டது