நீலாய்-கேஎல்ஐஏ நெடுஞ்சாலை
மலேசிய கூட்டரசு சாலை 32 Malaysia Federal Route 32 Laluan Persekutuan Malaysia 32 | |
---|---|
நீலாய்-கேஎல்ஐஏ நெடுஞ்சாலை Nilai–KLIA Highway Lebuhraya Nilai–KLIA | |
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 26.0 km (16.2 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
மேற்கு முடிவு: | தஞ்சோங் டுவா பெலாஸ் சிலாங்கூர் |
பந்திங்–டெங்கில் புக்கிட் சங்காங் சாலை | |
கிழக்கு முடிவு: | நீலாய் நெகிரி செம்பிலான் |
அமைவிடம் | |
முக்கிய நகரங்கள்: | பந்திங், டெங்கில், புத்ராஜெயா, சைபர்ஜெயா, சாலாக் திங்கி, பண்டார் பாரு நீலாய் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
நீலாய்-கேஎல்ஐஏ நெடுஞ்சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 32 (ஆங்கிலம்: Malaysia Federal Route 32; அல்லது Nilai–KLIA Highway); மலாய்: Laluan Persekutuan Malaysia 32 அல்லது Lebuhraya Nilai–KLIA) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு கூட்டரசு சாலை ஆகும்.[1]
முன்பு இந்தச் சாலை சிலாங்கூர் மாநிலச் சாலை B20 என்றும்; நெகிரி செம்பிலான் மாநிலச் சாலை N20 என்றும் அறியப்பட்டது. எனினும் தற்போது, மலேசியாவின் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் உள்ள மலேசிய பல்லூடகப் பெருவழி பகுதிக்கு ஒரு முக்கிய நெடுஞ்சாலையாகவும் அமைகிறது.[2]
பொது
[தொகு]நீலாய்-கேஎல்ஐஏ நெடுஞ்சாலை 26.0 கிமீ (16.2 மைல்) நீளம் கொண்டது. இந்தச் சாலை மேற்கில் சிலாங்கூர் மாநிலத்தின் தஞ்சோங் டுவா பெலாஸ் (Tanjung Dua Belas) நகரத்தையும்; கிழக்கில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் நகரத்தையும் இணைக்கிறது.
இந்தச் சாலையின் கிலோமீட்டர் 0; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் நகரத்தில் தொடங்குகிறது. 2010-ஆம் ஆண்டில், இந்த நெடுஞ்சாலை மலேசிய கூட்டரசு சாலை 32 என மலேசிய பொதுப்பணித் துறையினால் உறுதி செய்யப்பட்டு மலேசிய அரசிதழில் வெளியிடப்பட்டது.
மலேசிய பொதுப்பணித் துறை
[தொகு]இந்தச் சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[3]
விளக்கம்
[தொகு]- மலேசிய கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route; மலாய்: Laluan Persekutuan Malaysia)
- மலேசிய நெடுஞ்சாலை: (ஆங்கிலம்: Malaysian Highway; மலாய்: Laluan Malaysia)
- மலேசிய விரைவுச்சாலை: (ஆங்கிலம்: Malaysian Expressway; மலாய்: Lebuhraya Malaysia)
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
- ↑ "Jalan Labohan Dagang-Nilai FT32" (in மலாய்). Blog Jalan Raya Malaysia. 2014-03-20. பார்க்கப்பட்ட நாள் 2014-06-13.
- ↑ "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.