நீறணிதல்
நீறணிதல் அல்லது விபூதிதாரணம் என்பது சைவர்கள் திருநீறு அணிந்துகொள்ளும் முறையாகும். இவ்வாறு நீறணிதலில் திரிபுண்டரம், உத்தூளனம் என்ற இருவகைகள் உள்ளன. அத்துடன் திருநீறு தரித்தலுக்கான வழிமுறைகள் தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின் சைவ வினாவிடை விபூதி இயலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரிபுண்டரம்
[தொகு]திரிபுண்டரம் என்பது சைவர்களின் விபூதிதாரண முறைகளுள் ஒன்றாகும். இம்முறையில் திருநீறு, நீர் குழைத்துப் பூசப்படுவதோடு முவ்வரிக் கோடாகவும் இட்டுக்கொள்ளப்படுகிறது. [1]
சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள், புயங்கள், முழங்கைகள், மணிக்கட்டுகள், விலாப் புறம், முதுகு, கழுத்து என பதினாறு இடங்களில் திரிபுண்டரம் தரிக்கலாம். சிலர் விலாப்புறங்களை நீக்கிக் காதுகளை கொள்வர்.
வரிசை எண் | இட எண்ணிக்கை | இடங்கள் |
---|---|---|
1 | 32 | தலை, நெற்றி, காதுகள், கண்கள், மூக்கு, வாய், கழுத்து, தோள்கள், முழங்கைகள், மணிகட்டை, மார்பின் ஒவ்வொரு பக்கத்திலும், தொப்புள், பிட்டத்தின் இருபுறம், விதைப்பையில், தொடைகள், முழங்கால்கள், கணுக்கால், காலில், இடுப்பு, விலா. |
2 | 16 | தலை, நெற்றி, காதுகள், கழுத்து, தோள்கள், முழங்கைகள், மணிகட்டை, மார்பு பக்கங்கள், விலா. |
3 | 8 | தலை, நெற்றி, காதுகள், தோள்கள், மார்பு, வயிறு. |
4 | 5 | நெற்றியில், தோள்கள், மார்பு, வயிறு. |
சொல்லிலக்கணம்
[தொகு]திரிபுண்டரம் எனும் வடமொழி சொல்லிற்கு திருநீறால் சைவர்கள் நெற்றியில் இடும் மூவரி கோடு என்று பொருளாகும்.
உத்தூளனம்
[தொகு]உத்தூளனம் என்பது சைவர்களின் விபூதிதாரண முறைகளுள் ஒன்றாகும். இம்முறையில் திருநீறு கையில் எடுக்கப்பெற்று பரவலாகப் பூசப்படுகிறது. நீர் குழைத்துப் பூசப்படுவதில்லை. [2]
ஆதாரங்களும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின் சைவ வினாவிடை 3. விபூதி இயல் 14. விபூதி தாரணம் எத்தனை வகைப்படும்?
- ↑ http://www.sivankovil.ch/?pn=siva_vina_vidai