நிலா வட்டணைக்கலத் திட்டம்
Appearance
நிலா வட்டணைக்கலத் திட்டம் (Lunar Orbiter program) என்பது 1966 இலிருந்து 1967 வரை ஐக்கிய அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லாத ஐந்து நிலா வட்டணைக்கலங்களின் தொடர் ஏவல் திட்டமாகும். இது நிலா மேற்பரப்பில் அப்பல்லோ தரையிறக்கத்துக்கான [1] நிலாக் களங்களைப் படமாக்க உருவாக்கிய திட்டமாகும், இக்கலங்கள் முதன்முதலில் வட்டணைக்கலத்தில் இருந்து பிடித்த ஒளிப்படங்களையும் நிலா, புவி இரண்டன் ஒளிப்படங்களையும் அனுப்பின.