நிம்பர்க்கர்
Appearance
நிம்பர்க்கர் தென்னிந்தியாவில்[1] கோதாவரி நதிக் கரையில் சிறு கிராமத்தில் பிறந்தார். வட இந்தியாவில் மதுராவிற்கருகேயுள்ள பிரஜா என்ற இடத்தில் வாழ்ந்தார். இவரது பக்தி நெறியைச் சேர்ந்தோர் இராதா கிருஷ்ண வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தனர். இவரும் ‘சரணாகதி’ நெறியை வலியுறுத்தினார். இவரது கொள்கை பேதா அபேதம் என்றழைக்கப்படுகிறது. தத்துவமசி என்ற மகாவாக்கியத்திற்கு பேதா அபேதம் (துவைதாத்வைதம்) கொள்கைப்படி விளக்கம் அளித்துள்ளார்.