உள்ளடக்கத்துக்குச் செல்

நாரி முக்தி சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாரி முக்தி சங்கம்
சுருக்கம்NMS
உருவாக்கம்மார்ச்சு 1990; 34 ஆண்டுகளுக்கு முன்னர் (1990-03)
கலைக்கப்பட்டதுn/a
வகைதன்னார்வ சங்கம்
நோக்கம்பெண்கள் எதிர்கொள்ளும் சுரண்டல், அடக்குமுறை மற்றும் கொடுமைகளுக்கு எதிராக போராடுதல்
சேவை பகுதி
பீகார், சத்தீசுகர், தில்லி, சார்க்கண்டு மற்றும் மேற்கு வங்காளம்

நாரி முக்தி சங்கம்Nari Mukti Sangh ) என்பது இந்தியாவில் இயங்கி வரும் ஒரு பெண்கள் அமைப்பாகும்.[1] பீகார் மற்றும் சார்க்கண்டில் இந்த அமைப்பின் ஆதரவாளர்களின் தளம் உள்ளது.[2] இந்த அமைப்பு மார்ச் 1990 இல், கிரீதிக்கிலுள்ள தலேகோச்சாவில் நடந்த பெண்கள் மாநாட்டின் போது நிறுவப்பட்டது. மாநாட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் சுரண்டல், அடக்குமுறை மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக போராட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. மாநாட்டில் அமைப்பின் செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உட்பட ஏழு உறுப்பினர்கள் அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[3] தற்போது, நாரி முக்தி சங்கம் பீகார், சத்தீசுகர், சார்க்கண்டு, மேற்கு வங்காளம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களிலிருந்து கணிசமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[3]

கருத்தியல்

[தொகு]

இந்த அமைப்பு "(அறிவியல்) மார்க்சியம், லெனினிசம் மற்றும் மாவோவியம்" ஆகியவற்றிலிருந்து செல்வாக்கு செலுத்துகிறது. மேலும் "தேசியப் பிரச்சனைகளை மக்கள் போராட்டம் மற்றும் சுதந்திரம், சனநாயகம், சமத்துவம், பெண்கள் விடுதலை மற்றும் சோசலிசம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்க்க முடியும் என்று நம்புகிறது." [4] மேலும் இது இந்தியாவை "அரை நிலப்பிரபுத்துவ " நாடு என்று விவரிக்கிறது.[5] " அரசின் தீவிரமான மாற்றம் இல்லாமல், பெண் விடுதலை சாத்தியமில்லை" என்றும் கூறுகிறது.[6]

நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள்

[தொகு]

இந்த அமைப்பு "பெண்களின் குரலுக்கான இடத்தை" உருவாக்க பாடுபடுகிறது மற்றும் " பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக செயல்பாடு மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் " பங்கேற்க அவர்களை ஊக்குவிக்கிறது.[2] அமைப்பின் தன்னார்வலர்கள் பீகார் மற்றும் சார்க்கண்டில் கிராமம் கிராமமாகச் சென்று, உள்ளூர் பெண்களின் ஒத்துழைப்புடன், "பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் நீதிமன்றங்கள் மூலம்" தண்டனை வழங்க முயல்கின்றனர். மேலும் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உள்ள சண்டைகளை மனப்பூர்வமாக பேசி நிவர்த்தி செய்ய முயல்கின்றனர். இது பெண்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக "கிராந்தி கா பாத்சாலா" ( புரட்சியின் பள்ளி) என்ற ஒரு பயிற்சிப் பட்டறையையும் ஏற்பாடு செய்கிறது. இதன் மூலம்மேலும் இதுவரை ஆயிரக்கணக்கான பெண்களுக்கு எழுதவும் படிக்கவும் உதவியுள்ளது [2]

நாரி முக்தி சங்கம் சார்க்கண்டின் கிரீதிக் மாவட்டத்தின் பிர்டாண்ட் காடுகளில் மரங்களைக் காப்பாற்றுவதற்காக பிரச்சாரம் செய்ததற்காக அனைவராலும் கவனிக்கப்பட்டது. மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு மரங்களின் முக்கியத்துவம் குறித்து கிராம மக்களுக்கு கல்வி கற்பிப்பதோடு, மரங்கள் தொடர்ந்து அறியாமையால் வெட்டப்பட்டால் எதிர்கால இயற்கை பேரழிவுகளின் சாத்தியக்கூறுகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. குற்றவாளிகளுக்கு இந்திய ரூபாய் 1,000 அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.[7]

இந்த அமைப்பு இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மாவோயிஸ்ட்) "முன்னணி அமைப்பு" என உள்துறை அமைச்சகத்தால் நம்பப்படுகிறது. மேலும் மாவோயிச ஒருங்கிணைப்பு மையத்தின் ஓர் அங்கமாகவும் பார்க்கப்படுகிறது.[8]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rout S; Iyengar S (January 2008). "Review of existing and emerging patterns of sex work in Bangladesh in the context of HIV and AIDS" (PDF). AIDS Data Hub.
  2. 2.0 2.1 2.2 Sen, Shoma (3 November 2010). "Contemporary anti-displacement struggles and women's resistance: a commentary". Sanhati. பார்க்கப்பட்ட நாள் 19 February 2014.
  3. 3.0 3.1 Sheela (October 2013). "Unas palabras sobre la historia de mi vida política" (in ஸ்பானிஷ்). Marxists Internet Archive. பார்க்கப்பட்ட நாள் 20 February 2014.
  4. Singh, Mahendra Prasad; Raj, Subhendu Ranjan, eds. (2012). The Indian Political System. Pearson Education (Dorling Kindersley). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-31761-24-3.
  5. Singh, Mahendra Prasad; Raj, Subhendu Ranjan, eds. (2012). The Indian Political System. Pearson Education (Dorling Kindersley). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-31761-24-3. In a similar vein, on the eve of International Women's Day on 8 March 1997, the Nari Mukti Sangh, Bihar, argued that India is a semi-feudal nation.
  6. Sachchidananda; Niraj Kumar (2005). Dalit Women on the Move: The Bihar Scenario. New Delhi: Serials. p. 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86771-94-5. இணையக் கணினி நூலக மைய எண் 62733085. Nari Mukti Sangh recognizes 'State Patriarchy' as the prime contradiction and argues that without a radical transformation of the State, Women Liberation is not possible.
  7. Jaipuriar, Vishvendu (31 August 2011). "Red women on green rampage". The Telegraph இம் மூலத்தில் இருந்து February 24, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140224135746/http://www.telegraphindia.com/1110831/jsp/jharkhand/story_14445998.jsp. 
  8. Louis, Prakash (2008). "Empowerment of Women in Bihar". In Sinha, Ajit Kumar (ed.). New Dimensions of Women Empowerment. New Delhi: Deep and Deep. p. 444. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-84500-89-9. இணையக் கணினி நூலக மைய எண் 271833282.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரி_முக்தி_சங்கம்&oldid=3949807" இலிருந்து மீள்விக்கப்பட்டது