நாராயண் சதோபா கஜ்ரோல்கர்
நாராயண் சதோபா கஜ்ரோல்கர் | |
---|---|
பிறப்பு | மகாராட்டிரம், இந்தியா |
பணி | சமூக சேவகர் இந்திய சுதந்திர ஆர்வலர் |
விருதுகள் | பத்ம பூசண் |
நாராயண் சடோபா கஜ்ரோல்கர் (Narayan Sadoba Kajrolkar) இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும், காந்தியவாதியும் மற்றும் சமூக சேவகரும் ஆவார். பொதுத் தேர்தலில் பி.ஆர்.அம்பேத்கரை தோற்கடித்தவர் என்று நன்கு அறியப்பட்டவர். [1] பிறப்பால் ஒரு மராத்தியான இவர் அம்பேத்கரின் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றினார். [2] 1952இல் மும்பை வட மத்திய தொகுதியில் இருந்து நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் அம்பேத்கருக்கு எதிராக போட்டியிட்டு 15000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 1962 தேர்தலில் இரண்டாவது முறையாக அதே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]
மகர் சமூகத்தில் பிறந்த நாராயண், 1953ஆம் ஆண்டின் முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆணையத்தில் உறுப்பினராக இருந்தார். இவர் பட்டியல் சாதி சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தினார். [4][5] பின்தங்கிய வர்க்க மக்களின் அமைப்பான தலித் வர்க சங்கத்தின் உறுப்பினராகவும், குழுவின் செயலாளராகவும் பணியாற்றும்போது 1953 ஏப்ரல் 5 ஆம் தேதி ஜெகசீவன்ராமின் பிறந்த நாளைக் கொண்டாட முடிவு செய்தார். [6] சமுதாயத்திற்கு இவர் செய்த பங்களிப்பிற்காக இந்திய அரசு 1970 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை கௌரவாமான பத்ம பூசண் விருதினை இவருக்கு வழங்கியது. [7]
1983இல் இவர் இறந்தார்.[8]
மேலும் காண்க
[தொகு]- மும்பை வட மத்திய (மக்களவைத் தொகுதி)
- காலேல்கர் கமிஷன்
குறிப்புகள்
[தொகு]- ↑ "The first Lok Sabha elections (1951–52)". Indian Express. 27 March 2014. பார்க்கப்பட்ட நாள் 26 March 2016.
- ↑ "B. R. Ambedkar". Times of Maharashtra. 14 November 2014. Archived from the original on 5 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 March 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Members of the Third Lok Sabha". Empowering India. 2016. Archived from the original on 3 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 26 March 2016.
- ↑ Christophe Jaffrelot (2003). India's Silent Revolution: The Rise of the Lower Castes in North India. C. Hurst & Co. Publishers. p. 505. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781850656708.
- ↑ Sankar Ghose (1993). Jawaharlal Nehru, a Biography. Allied Publishers. p. 353. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170233695.
- ↑ Indrani Jagjivan Ram (2010). Milestones: A Memoir. Penguin Books India. p. 297. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780670081875.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
- ↑ Lok Sabha, India. Parliament (2003). "Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha".