நரேஷ் கோயல்
நரேஷ் கோயல் | |
---|---|
பிறப்பு | 29 சூலை 1949[1] சங்கரூர், பஞ்சாப், இந்தியா |
தேசியம் | வெளிநாடு வாழ் இந்தியர் |
பணி | தலைவர், ஜெட் ஏர்வேஸ்[2] |
செயற்பாட்டுக் காலம் | 1967 – 2019 |
பிள்ளைகள் | 2[3] |
நரேஷ் கோயல் (Naresh Goyal) (பிறப்பு:29 சூலை 1949) வெளிநாடு வாழ் இந்தியரும், தொழிலதிபரும், 2005ல் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார்.[4] இவர் 1993ம் ஆண்டில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை நிறுவியவர் ஆவார். இவர் ஐக்கிய இராச்சியத்தின் மாண் தீவில் வாழ்கிறார்.[5]ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நட்டம் அடைந்துள்ளதால், அதன் தலைவர் பதவியிலிருந்து விடுபட்டுள்ளார்.[6][7]
தொழில்
[தொகு]நரேஷ் கோயல் 1967ல் தனது உறவினரின் சுற்றுலா & பயண நிறுவனத்தில் காசாளராக பணியாற்றினார். வணிகப் படிப்பில் இளநிலை பட்டம் நரேஷ் கோயல் லெபனான் பன்னாட்டு வானூர்தி நிறுவனத்தில் பணியாற்றினார்.[8]1967 முதல் 1974 வரை இராக், ஜோர்டான், ஏர் பிரான்சு, பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் போன்ற பன்னாட்டு வானூர்தி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றார். 1975ல் பிலிப்பைன்ஸ் ஏர் லைன்ஸ் நிறுவனத்தில் மண்டல அதிகாரியாக பணியாற்றினார். [9]
2005ல் ஜெட் ஏர்வேஸ் பன்னாட்டு வானூர்தி நிறுவனத்தை நிறுவினார். 25 மார்ச் 2019 அன்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்த்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி ஏற்பட்டதால், அதன் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.[10] [11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Joseph, Josy (2 October 2016). A Feast of Vultures—The Hidden Business of Democracy in India. Mumbai: Harper Collins.
- ↑ "Naresh Goyal".
- ↑ Sanjai, P.R. (7 March 2013). "Companies".
- ↑ Joseph, Josy (21 July 2016). "A jet propelled by Don Ibrahim". Outlook India. https://www.outlookindia.com/magazine/story/a-jet-propelled-by-don-ibrahim/297557. பார்த்த நாள்: 26 October 2018.
- ↑ "Jet Airways chief Goyal denies tax evasion". Business Standard. 20 January 2013. https://www.business-standard.com/article/companies/jet-airways-chief-goyal-denies-tax-evasion-111122800004_1.html. பார்த்த நாள்: 26 October 2018.
- ↑ "#16 Naresh Goyal". Forbes.com. பார்க்கப்பட்ட நாள் 25 July 2013.
- ↑ "The World's Billionaires - India". Forbes. https://www.forbes.com/billionaires/list/#version:static_country:India. பார்த்த நாள்: 2016-09-07.
- ↑ "Chairman's Profile at Jet Airways". Archived from the original on 29 May 2016. பார்க்கப்பட்ட நாள் 7 February 2016.
- ↑ "Jet-Etihad deal; why Naresh Goyal and Rahul Bhatia must work together - The Economic Times". The Economic Times. http://economictimes.indiatimes.com/opinion/comments-analysis/jet-etihad-deal-why-naresh-goyal-and-rahul-bhatia-must-work-together/articleshow/21322661.cms.
- ↑ "Jet Airways founder Naresh Goyal steps down amid crisis" (in en-GB). BBC News. 2019-03-25. https://www.bbc.com/news/world-asia-india-47693075.
- ↑ "Jet Airways Chairman Resigns After Two-Thirds of Fleet Grounded" (in en). Bloomberg.com. 2019-03-25. https://www.bloomberg.com/news/articles/2019-03-25/founder-naresh-goyal-resigns-from-debt-laden-jet-airways.