உள்ளடக்கத்துக்குச் செல்

நபாத்தியா

ஆள்கூறுகள்: 33°21′50″N 35°29′15″E / 33.36389°N 35.48750°E / 33.36389; 35.48750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நபாத்தியா
النبطية
நகரம்
2006ல் நபாத்தியா நகரம்
2006ல் நபாத்தியா நகரம்
Map showing the location of Nabatieh within Lebanon
Map showing the location of Nabatieh within Lebanon
நபாத்தியா
தெற்கு லெபனானில் நபாத்தியா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 33°21′50″N 35°29′15″E / 33.36389°N 35.48750°E / 33.36389; 35.48750
Grid position125/160 L
நாடு லெபனான்
ஆளுநரகம்நபாத்தியா
மாவட்டம்நபாத்தியா
பரப்பளவு
 • நகரம்8 km2 (3 sq mi)
 • மாநகரம்
21 km2 (8 sq mi)
ஏற்றம்
418 m (1,371 ft)
மக்கள்தொகை
 • நகரம்40,000
 • பெருநகர்
85,000
நேர வலயம்ஒசநே 2 (கிழக்கு ஐரோப்பிய குளிர்கால நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே 3 (கிழக்கு ஐரோப்பிய கோடைக்கால நேரம்)
தொலைபேசி குறியீடு 961
rugged rocky peak with stones and the remains of a tower
நபாத்திய அருகில் கோட்டையுடன் கூடிய அரண்மனை
நபாத்தியா நீர்க்குவளை

நபாத்தியா (Nabatieh), தெற்கு லெபனான் பகுதியில் அமைந்த நபாத்தியா ஆளுநரகத்தின் தலைமையிட நகரம் ஆகும். நபாத்திய நகரத்தில் சியா இசுலாம் முஸ்லீம்கள் அதிகம் வாழ்கின்றனர். 2006ஆம் ஆண்டின் இதன் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை 1,00,541 ஆகும்.[1]2013ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள் தொகை குறைந்து 36,593 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. [2]

நபாத்தியா பகுதியை நபாத்தியன் இராச்சியத்தினர் கிமு 3ஆம் நூற்றாண்டு முதல் கிபி 106 வரை ஆண்டனர்.[3]மார்ச் 1978ல் இஸ்ரேலிய இராணுவம் நபாத்தியாவை தாக்கியதால், இப்பகுதி மக்கள், வடக்கு நோக்கி புலம் பெயர்ந்தனர். [4]அக்டோபர் 1983ல் நபாத்திய முஸ்லீம்கள் அசுரா நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது, இஸ்ரேலிய இராணுவத்தினர் நபாத்தியா மீது குண்டுகள் பொழிந்து, நபாத்திய நகரத்தை கைப்பற்றினர்..[5]1985ஆம் ஆண்டில் நபாத்திய நகரத்திலிருந்து இஸ்ரேலிய இராணுவத்தினர் வெளியேறிய பின், நபாத்தியா பகுதி பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது

16-17 ஆகஸ்டு 2024ல் இஸ்ரேலிய வான் படையினர் நபாத்திய நகரத்தின் மீது குண்டுகள் மழை பொழிந்ததில், 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "World Gazetteer: Lebanon - largest cities (Per geographical entity)". Archived from the original on 2006-03-16. பார்க்கப்பட்ட நாள் 2006-03-16.
  2. "World Gazetteer: Lebanon - largest cities (Per geographical entity)". Archived from the original on 2013-06-25. பார்க்கப்பட்ட நாள் 2015-08-03.
  3. Nabataean Kingdom
  4. Ajami, Fouad (1986) The vanished Imam : Musa al Sadr and the Shia of Lebanon. I.B. Tauris. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85043-025-X pp. 179-180 quoting 21 March 1978 edition
  5. Hirst, David (2010) Beware of Small States. Lebanon, battleground of the Middle East. Faber and Faber. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-571-23741-8 pp.200-201
  6. "At least six killed in latest Israeli strike on Southern Lebanon". Al Jazeera. 17 August 2024.

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நபாத்தியா&oldid=4107611" இலிருந்து மீள்விக்கப்பட்டது