உள்ளடக்கத்துக்குச் செல்

நடுவர் மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடுவர் மன்றம் அல்லது சான்றாயர் (Jury)என்பது நீதிமன்றத்தின் பணியாளர்கள் அல்லாத சாதாரண மக்களின் குழுவாகும். நடுவர் மன்றத்தின் உறுப்பினர் ஜூரி என்று அழைக்கப்படுகிறார். ஒரு நடுவர் பாரபட்சமற்றவராக, நியாயமாக இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் எந்தப் பக்கத்தை எடுப்பார்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்காமல் வழக்கின் இரு பக்கங்களையும் கேட்க வேண்டும். அவர்கள் நீதிமன்ற அறையில் குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது சாட்சியிடம் கேள்வி கேட்டு, பதிலைத் தீர்மானிக்கிறார்கள். ஒரு நபர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதை நடுவர் மன்றத்தினர் தீர்மானிக்கிறார்கள்..

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கான தண்டனையைத் தீர்மானிப்பதற்கு ஒரு நடுவர் குழுவும் பொறுப்பாக இருக்கும். பொதுவாக நடுவர் மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். சில சமயங்களில், ஒரு சில உறுப்பினர்கள் உடன்படவில்லையென்றாலும் நடுவர் மன்றம் முடிவெடுக்கலாம். இருப்பினும், நடுவர் மன்றத்திலும் பெரும்பான்மை இல்லாவிட்டால், வழக்கு முடிவு செய்யப்படாது.

ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்பட்ட சட்டம் தவறு என்று நடுவர் மன்றத்தினர் நினைத்தால், அந்த நபரை விடுதலை செய்ய நடுவர் மன்றத்திற்கு அதிகாரம் உள்ளது..

நாடுகள் வாரியாக ஜூரிகள்

[தொகு]

ஐக்கிய அமெரிக்கா

[தொகு]

நடுவர் மன்றத்தினரின் (ஜூரிகளின்) வகைகள்

[தொகு]

ஐக்கிய அமெரிக்க நாட்டில் 2 வகையான நடுவர் மன்றங்கள் உள்ளது.

  • 6 முதல் 12 நடுவர்கள் கொண்ட விசாரணை நடுவர் மன்றம் ஒரு விசாரணையில் உண்மைகளைக் கண்டறியும் [1]
  • பெரிய நடுவர் மன்றங்களில் அரசுத்தரப்பு வழக்குரைஞரே நடுவராக (ஜூரி) இருப்பார். [1]

இந்தியா

[தொகு]

நடுவர் மன்ற விசாரணைகளின் போது பெரும்பான்மையான நடுவர் மன்ற (ஜூரி) உறுப்பினர்கள் ஒரு தரப்பினருக்கு பக்கச் சார்பாக இருப்பது கண்டறியப்பட்டது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இது போன்ற ஒரு சம்பவங்கள் அதிகமாக இருந்தது. நடுவர் மன்றத்தின் உறுப்பினர்கள், பிரிட்டிஷ் நாட்டினர் என்பதால், பிரித்தானியர்களுக்கு ஆதரவாக பக்கசார்பான முடிவுகள் எடுக்கப்பட்டது. இதன் விளைவாக நீதி புறக்கணிக்கப்பட்டது மற்றும் போதுமான ஆதாரமும் அனுகூலமும் கொண்ட கட்சி மற்றதை விட சாதகமான நிலையில் காணப்பட்டது.

1947ல் இந்திய விடுதலைக்குப் பின் 1973ல் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின். நீதிமன்றங்களில் நடுவர் மன்றம் (ஜூரி) முறை விலக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Types of Juries". United States Courts. பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
  2. The Jury System in India and its decline

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுவர்_மன்றம்&oldid=4106199" இலிருந்து மீள்விக்கப்பட்டது