தோலேரா பன்னாட்டு வானூர்தி நிலையம்
தோலேரா பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||
சேவை புரிவது | அகமதாபாத், தோலேரா,சூரத் | ||||||||||||||
அமைவிடம் | நவகாம், தோலேரா பகுதி, குசராத்து, இந்தியா | ||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
|
'தோலேரா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Dholera International Airport ) இந்திய மாநிலம் குசராத்தில் ஏற்பளிக்கப்பட்ட ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். இது அகமதாபாத் மாவட்டத்தின் தோலேரா வட்டத்தில் நவகாம் அருகே கட்டமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக 1,426 எகெடேர் நிலம் நவகாம் சிற்றூரருகே ஒதுக்கப்பட்டுள்ளது.[1] அகமதாபாத்திலிருந்து 80 கிமீ தொலைவிலும் தோலேரா சிறப்பு முதலீட்டு மண்டலத்திலிருந்து 20 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.[2] இத்திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசு தோலேரா பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனம் (DIACL) என்ற சிறப்பு நோக்கு அமைப்பை (SPV) உருவாக்கியுள்ளது. 2018ஆம் ஆண்டின் முதற் காற்பகுதியில் வானூர்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.[1]
கட்டுமான நிலத்தை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் (AAI) சனவரி 2010இல் பார்வையிட்டு தொழிற்நுட்ப-பொருளியல் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தது;[3] பெப்ரவரி,2010இல் தொழில்நுட்ப ஒப்புமை வழங்கியது.[4] நடுவண் அரசு இத்திட்டத்திற்கான ஒப்புமையை சூலை 2014இல் வழங்கியது.[5] இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி நவம்பர் 2015இல் வழங்கப்பட்டது.[1]
முன்மொழியப்பட்டுள்ள தோலேரா வானூர்திநிலையத் திட்டம் தோலேரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றும். அகமதாபாத்தின் கூடுதல் வழியல் போக்குவரத்தையும் இந்த வானூர்தி நிலையம் கையாளும். அண்மையிலுள்ள சூரத், இராச்கோட், பாவ்நகர், நடியாடு, கேடா, ஆனந்து நகரங்களின் பன்னாட்டுப் போக்குவரத்துத் தேவைகளையும் நிறைவேற்றும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Dholera airport work to take off in Q3 of FY’16". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 June 2015. http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Dholera-airport-work-to-take-off-in-Q3-of-FY16/articleshow/47807868.cms. பார்த்த நாள்: 25 June 2015.
- ↑ "PM Narendra Modi-govt grants 'site clearance' to Gujarat's Dholera airport". தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ். 21 July 2013. http://www.financialexpress.com/news/pm-narendra-modigovt-grants-site-clearance-to-gujarats-dholera-airport/1272163. பார்த்த நாள்: 28 July 2014.
- ↑ "AAI team inspects site for greenfield airport in Ahmedabad". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ். 23 January 2010. http://www.dnaindia.com/india/report-aai-team-inspects-site-for-greenfield-airport-in-ahmedabad-1338455. பார்த்த நாள்: 28 July 2014.
- ↑ "Federa airport gets AAI nod". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ். 11 February 2010. http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Federa-airport-gets-AAI-nod/articleshow/5558624.cms. பார்த்த நாள்: 28 July 2014.
- ↑ "Site Clearance for Dholera Airport Project". Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 28 July 2014.