தோப்பூர் போர்
தோப்பூர் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
|
|||||||
போரிட்டவர்கள் | |||||||
விஜயநகரப் பேரரசின் படைகள் | கோபுரி ஜெகதேவ ராயாரின் தமைமையிலான விஜயநகர பேரரசின் இரண்டாவது பிரிவினர்
|
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
யச்சம்ம நாயக்குடு | கோபுரி ஜக ராயர்
|
தோப்பூர் போர் (Battle of Toppur) என்பது தெற்காசிய வரலாற்றில் மிகப்பெரிய போர்களில் ஒன்றாகும். இந்த போரில்தான், தென்னிந்தியாவில் முதன்முறையாக பீரங்கிகள் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டன. இந்தப் போரானது ஏற்கனவே வீழ்ச்சியடைந்து வந்த விஜயநகரப் பேரரசுக்கு முழுமையான அழிவை ஏற்படுத்தியது. இது விஜயநகரப் பேரரசின் அரசாட்சிக்காக உரிமைகோருபவர்கள் நடத்திய உள்நாட்டுப் போர் ஆகும். ஜக்க ராயான் தனது மருமகன் சார்பாக ஸ்ரீரங்கா அணிக்கு சவாலாக மாறினார்.
பின்னணி
[தொகு]விஜயநகரப் பேரரசின் ஆட்சியாளர் வெங்கடபதி ராயன் . அரவீடு வம்சத்தைச் சேர்ந்தவர் இவர் நேரடி வாரிசுகள் இல்லாமல் இறந்தார். எனவே அவர் தனது மருமகன் இரண்டாம் ஸ்ரீரங்காவை தனது வாரிசாக அறிவித்தார். ஆனால், செங்க ராயா என்ற பிராமண சிறுவனை தத்தெடுத்த வெங்கடபதியின் இராணி பயம்மா, அச்சிறுவனை அரியணையில் ஏற்ற விரும்பினார். அவரது இந்த இலட்சியம் பேரரசின் அணிகளுக்கிடையில் உள்நாட்டுப் போர் ஏற்பட காரணமாயிற்று. பயம்மாவின் சகோதரர் கொபுரி ஜாக ராயன் மன்னரையும் அவரது குடும்பத்தினரையும் கடத்தி கொலை செய்தார். மன்னரின் ஒரே மகனான சிறுவன் மட்டுமே உயிர் பிழைத்தான். இந்தக் கொடூரமான கொலைகள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி மற்ற நாயக தளபதிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. அமைச்சரும் தளபதியுமாகிய யச்சம நாயுடு என்பவர் தலைமை தாங்கிய குழுவினர் கிளர்ச்சி செய்து, ஸ்ரீரங்காவின் இரண்டாம் மகன் ராம தேவ ராயனுக்கு ஆதரவளித்தனர்.
போர்
[தொகு]நடந்த போர் நடந்த இடமானது பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் தோப்பூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது காவிரி ஆற்றின் கரையில் கல்லணைக்கு ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ளது. இது இன்றைய தோகூர் ஆகும். [2]
பின்விளைவு
[தொகு]இந்த போரில் யச்சாம நாயுடு அணியினரும், இரண்டாம் ஸ்ரீரங்காவின் மகன் ராம தேவ ராயணின் அணியினர் வென்றனர். இதன்பிறகு 13 வயது மட்டுமே ஆன ராம தேவ ராயன் பேரரசராக முடிசூட்டப்பட்டார்.
விஜயநகர் சாம்ராஜ்யத்தின் முழுமையான சிதைவுக்கு அடித்தளத்தை அமைத்த போர் இது ஆகும். சில சுயநல சக்திகளால் ஏற்பட்ட இந்த உள்நாட்டுப் போர் விஜயநகர் சாம்ராஜ்யத்திற்கு கடுமையான சிக்ககல்களை ஏற்படுத்தியது
குறிப்புகள்
[தொகு]- ↑ SATHYANATHA AIYAR, R. (1924). History of the Nayaks Of Madura (2nd ed.). Madras: Humphrey Milford, Oxford University Press. p. 103.
- ↑ Srinivasachari, C. S. (1943). History of Gingee and Its Rulers (2nd ed.). The Annamalai University. p. 135.
- Rao, V. N. Hari. "Thiruvarangam - History". History Of Srirangam Temple. Archived from the original on 30 September 2007. பார்க்கப்பட்ட நாள் 23 August 2019 – via thiruvarangam.com.
- ராவ், வெல்செரு நாராயணா, மற்றும் டேவிட் சுல்மான், சஞ்சய் சுப்ரமண்யம். பொருளின் சின்னங்கள் : நாயக்கர் காலத்தில் தமிழ்நாடு (டெல்லி) நீதிமன்றம் மற்றும் மாநிலம் ; ஆக்ஸ்போர்டு : ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், 1998) ; xix, 349 பக்., [16] பக். தட்டுகளின் : நோய்வாய்ப்பட்டது., வரைபடங்கள் ; 22 செ.மீ. ; ஆக்ஸ்போர்டு இந்தியா பேப்பர்பேக்குகள் ; நூலியல் குறிப்புகள் மற்றும் குறியீட்டை உள்ளடக்கியது ;பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564399-2 .
- சத்தியநாதையர், ஆர். மதுரை நாயக்கர்களின் வரலாறு [மைக்ரோஃபார்ம்] ஆர். சத்தியநாத அய்யர் ; எஸ். கிருஷ்ணசாமி அயங்கர் ([மெட்ராஸ்]) அறிமுகம் மற்றும் குறிப்புகளுடன் பல்கலைக்கழகத்திற்காக திருத்தப்பட்டது : ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், 1924) ; மேலும் காண்க ([லண்டன்] : எச். மில்ஃபோர்ட், ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டி பிரஸ், 1924) ; xvi, 403 ப. ; 21 செ.மீ. ; SAMP 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய புத்தகங்கள் திட்ட உருப்படி 10819.
- கே. ஏ. நிலகண்ட சாஸ்திரி, தென்னிந்தியாவின் வரலாறு, வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து விஜயநகரின் வீழ்ச்சி வரை, 1955, OUP, (மறுபதிப்பு 2002)பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-560686-8 .