தொப்புள் கொடி இரத்தம்
குழந்தை பிறந்ததும் அதன் வயிற்றில் தொங்கும் சிறு தொப்புள் கொடியில் இருக்கும் சுமார் 80 மி.லி இரத்தம் தொப்புள் கொடி இரத்தம் (Umblical cord blood) எனப்படுகின்றது. இந்த இரத்தத்தில் அதிக அளவு ஆதார செல்கள் (ஸ்டெம் செல்கள்) உள்ளன. இந்த ஆதார செல்களிலிருந்து உடலின் உறுப்புக்களை உருவாக்கலாம். இந்த இரத்த ஆதார செல்களை குழந்தை பிறக்கும் போது தொப்புள் கொடியிலிருந்து பிரித்தெடுத்து சேமித்து வைத்தால் இரத்த சம்பந்தமாக ஏற்படும் 80 க்கும் மேற்பட்ட நோய்களை இந்த சேமித்த ஆதார செல்களை பயன்படுத்தி அந்த குழந்தையையோ அல்லது இது பொருந்தக்கூடிய மற்ற குழந்தையையோ குணமாக்கலாம். தொப்புள் கொடி இரத்தத்தை சேமிக்க பல தொப்புள் கொடி இரத்த வங்கிகள் இருக்கின்றன.
இரத்தம் சேமிக்கும் முறை
[தொகு]குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியிலிருந்து பாதுகாப்பான முறையில் சராசரியாக 80 மி.லி. இரத்தம் இரத்தப்பைகளில் சேகரிக்கப்பட்டு உடனடியாக சேமிப்பு நிலையாங்களுகில் கொண்டு செல்லப்பட்டு திரவ நைட்ரசனைப் பயன்படுத்தி -196 டிகிரியில் பாதுகாக்கப்படுகின்றன. சராசரியாக 21 ஆண்டுகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த காலங்களில் இரத்தம் பெறப்பட்ட குழந்தைகளுக்கு இரத்த சம்பந்தமான நோய்கள் கண்டறியப்பட்டால் அந்த குழந்தையின் உடலில் இந்த ஆதார செல்கள் செலுத்தப்பட்டு அவை உடனடியாக அந்த குறைபாடுள்ள செல்களை உற்பத்தி செய்து நோயை குணமாக்கும்.
இரத்தம் பாதுகாத்தல்
[தொகு]வளர்ந்த நாடுகள் பலவற்றில் அரசாங்கமே பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தொப்புள் கொடி இரத்தத்தையும் சேமித்து வைக்கின்றன. இந்தியாவில் தனியார் நிறுவனங்களே தற்போது சேமித்து வருகின்றன. இதற்காக வருடத்திற்கு 2000 முதல் 3000 வரை வசூலிக்கின்றனர். குழந்தை பிறப்பதற்கு முன்பே இவர்களிடம் தெரிவித்தால் பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் வழியாக அவர்கள் தொப்புள் கொடி இரத்தத்தை எடுத்து சென்று பாதுகாப்பார்கள். இந்தியாவிலும் குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் தற்போது இரத்த வங்கிகளை தொடங்கி வருகின்றன.