உள்ளடக்கத்துக்குச் செல்

தைலப்புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Cymbopogon|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
தைலப்புல்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Cymbopogon
இனம்:
இருசொற் பெயரீடு
Cymbopogon martinii
(Roxb.) Wats.
வேறு பெயர்கள் [1]
  • Cymbopogon martini (Roxb.) Wats., spelling preferred under ICN[1][2]
  • Andropogon martini Roxb.
  • Cymbopogon martinianus Schult.
  • Gymnanthelia martini (Roxb.) Andersson
  • Andropogon schoenanthus var. martini (Roxb.) Hook.f.
  • Andropogon pachnodes Trin.
  • Andropogon calamus-aromaticus Royle
  • Cymbopogon pachnodes (Trin.) W.Watson
  • Cymbopogon martini var. sofia B.K.Gupta
  • Cymbopogon motia B.K.Gupta

தைலப்புல் (Cymbopogon martinii) என்பது இந்தியா மற்றும் இந்தோசீனாவை பூர்வீகமாகக் கொண்ட எலுமிச்சைப் புல் இனத்தைச் சேர்ந்த ஒரு வகை புல் ஆகும். இதன் நறுமண எண்ணெய்க்காக பல இடங்களில் பரவலாக பயிரிடப்படுகிறது. [3] [4] இது பாம்ரோஸ் ( பாம் ரோஸ் ) என்ற பொதுவான பெயரால் நன்கு அறியப்படுகிறது, ஏனெனில் இதன் மணமானது இனிப்பு மற்றும் ரோஜா மணத்தை ஓத்ததாக இருக்கும்.

பாம்ரோஸ் எண்ணெய்

[தொகு]

ஜெரனியோல் என்ற ரசாயன கலவை கொண்ட இந்த தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் ஆவி எண்ணெய்யானது வாசனைக்காகவும், பல பாரம்பரிய மருத்துவம், பூச்சி விரட்டி போன்றவற்றிற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. தனியங்கள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை சேமித்து வைக்கும் இடத்தில் இந்த எண்ணெய்யை பூச்சி விரட்டியாக பயன்படுத்தும்போது பயனுள்ளதாக இருக்கும் நிரூபிக்கப்பட்டுள்ளது [5] மேலும் இது நூற்புழுக்களுக்கு எதிராக ஒட்டுண்ணிப் புழுவெதிரியாகவும், [6] மற்றும் எதி்ர்பூஞ்சையாகவும் கொசு விரட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது. [7]

ரோஜா பூவை ஒத்த வாசனை கொண்ட தைலப்புல் எண்ணெய்யானது சோப்பு, அழகுசாதனப் பொருட்கள, ஊதுவத்தி போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது. [7]

சாகுபடி

[தொகு]

இந்த புல்லானது 1.3 முதல் 3 மீ (4 அடி 3 முதல் 9 அடி 10 அங்குலம்) வரை மிக உயரமான வெளிர் பச்சை நிறமானதாகவும், வலுவான மெல்லிய தண்டுடன் வளர்கிறது. இந்த பயிர் மெதுவாக வளர்கிறது, பூக்க மூன்று மாதங்கள் ஆகும்; அது பூத்தவுடன், அதை அறுவடை செய்யலாம். இதன் ரோஜா மலர் நறுமணத்தினால் பாம்ரோஸ் என்ற பெயரைப் பெற்றது. இது உலகம் முழுவதும் ரோஜா வாசனை கொண்ட வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கொசு விரட்டி மற்றும் சுவை புகையிலை பொருட்களை தயாரிக்கப் பயன்படுகிறது. இது மருத்துவ தீர்வுகள் மற்றும் நறுமருந்து சிகிச்சை போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது .

எங்கே தயாரிக்கப்படுகிறது / எப்படி வளர்க்கப்படுகிறது, எப்படி, பதப்படுத்தப்படுகிறது

[தொகு]

பாம்ரோஸ் நேபாளத்திலும், இந்தியாவின் வேளாண் நிலங்களில் பெருமளவு வளர்க்கப்படுகிறது. [8] இதன் இலை, தண்டு போன்றவற்றை ஆலைகளில் பிழிந்து பால்மரோசா எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. [9] பாமரோஸிலிருந்து எண்ணெயைப் பிரிக்க, தண்டுகள் மற்றும் இலைகள் இரண்டு முதல் மூன்று மணி நேரம் காய்ச்சி வடிகட்டப்படுகிறது. மீதமுள்ள சக்கையானது எருவாக பயன்படுத்தப்படுகிறது. [10] இது தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் பரவலாக பயிரிடப்படுகின்றது. இந்தப் புல்லை விதைக்க ஒரு ஏக்கருக்கு 30 கிலோவரை விதை தேவைப்படுகிறது. ஒருமுறை விதைத்துவிட்டால் பராமரிப்பைப் பொறுத்து ஆறு ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது. மானாவாரி நிலத்தில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என்று ஆண்டுக்கு மூன்று முறை அறுவடை செய்யலாம். பாசன வசதியுள்ள நிலமாக இருந்தால் ஆண்டுக்கு நான்குமுறைகூட அறுவடை செய்யலாம்.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Kew World Checklist of Selected Plant Families
  2. The International Plant Names Index
  3. Prashar, A.; Hili, P.; Veness, R.; Evans, C. (2003). "Antimicrobial action of palmarosa oil (Cymbopogon martinii) on Saccharomyces cerevisiae". Phytochemistry 63 (5): 569–575. doi:10.1016/S0031-9422(03)00226-7. https://archive.org/details/sim_phytochemistry_2003-07_63_5/page/569. 
  4. Rajeswara Rao, B.; Kaul, P.; Syamasundar, K.; Ramesh, S. (2005). "Chemical profiles of primary and secondary essential oils of palmarosa (Cymbopogon martinii (Roxb.) Wats var. motia Burk.)". IIndustrial Crops and Products 21 (1): 121–127. doi:10.1016/j.indcrop.2004.02.002. 
  5. Kumar, R.; Srivastava, M.; Dubey, N. K. (2007). "Evaluation of Cymbopogon martinii oil extract for control of postharvest insect deterioration in cereals and legumes". Journal of Food Protection 70 (1): 172–78. doi:10.4315/0362-028X-70.1.172. https://archive.org/details/sim_journal-of-food-protection_2007-01_70_1/page/172. 
  6. Kumaran, A. M.; D'souza, P; Agarwal, A (2003). "Geraniol, the putative anthelmintic principle of Cymbopogon martinii". Phytotherapy Research 17 (8). doi:10.1002/ptr.1267. 
  7. 7.0 7.1 Duke, J. A. and J. duCellier. (1993). CRC Handbook of Alternative Cash Crops. Boca Raton: CRC Press. 214.
  8. Guenther, E (1952). "Recent developments in essential oil production". Economic Botany 6 (4): 355–378. doi:10.1007/bf02984884. http://resolver.scholarsportal.info/resolve/001. 
  9. Kumaran, A. (2003). "Geraniol, the putative anthelmintic principle of Cymbopogon martinii". Phytotherapy Research 17 (8): 957. doi:10.1002/ptr.1267. 
  10. Rajeswara Rao, B. (2005). "Chemical profiles of primary and secondary essential oils of palmarosa (Cymbopogon martinii (Roxb.) Wats var. motia Burk.)". Industrial Crops and Products 21 (1): 121–127. doi:10.1016/j.indcrop.2004.02.002. http://journals2.scholarsportal.info/details/09266690/v21i0001/121_cpopaspmwvmb.xml. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைலப்புல்&oldid=3521174" இலிருந்து மீள்விக்கப்பட்டது