தேரு மல்லேசுவரர் கோயில், ஹிரியூர்
தேரு மல்லேசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: 13°57′N 76°37′E / 13.95°N 76.62°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | சித்திரதுர்க்கா |
ஏற்றம் | 630 m (2,070 ft) |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே 5:30 (இந்திய சீர் நேரம்) |
தேரு மல்லேசுவரர் கோயில் (Teru Malleshvara Temple) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சித்ரதுர்கா நகரத்திற்கு அருகிலுள்ள ஹிரியூர் நகரில் உள்ள ஒரு விஜயநகர காலக் கோயில் ஆகும். ஹிரியூர் வேதவதி ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. [1] "தேரு மல்லேஸ்வரர்" திருவிழா, ஆண்டுதோறும் சனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் பௌர்ணமியில் தொடங்கி ஒரு வாரத்திற்கு கொண்டாடப்படுகிறது. இந்தியத் தொல்பொருள் ஆய்வகத்தின் கர்நாடக மாநில பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக இக்கோயில் உள்ளது [2]
கட்டிடக்கலை
[தொகு]இந்த கோயில் திராவிடக் கட்டிடக்கலை பாணியிலான கட்டிடக்கலைகளுடன் உயரமான கோபுரத்துடன் காணப்படுகிறது. நுழைவு மண்டபத்தின் மேற்கூரையில் "சிவபுராணம்" (இந்து சைவ காவியம்) மற்றும் இராமாயணம் (இந்து வைணவ காவியம்) ஆகியவற்றின் காட்சிகளை சித்தரிக்கும் சுவரோவியங்கள் உள்ளன. [1] விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோயில் பொ.ச. சுமார் 1466இல் கட்டப்பட்டுள்ளன. [3]
புகைப்படங்கள்
[தொகு]-
கோயிலின் நுழைவு மண்டபம்
-
கோவிலில் காணப்படும் கன்னடக் கல்வெட்டு
-
அழகுபடுத்தப்பட்ட திராவிட பாணி விமானம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Hiriyur". Department of Tourism, Government of Karnataka, Fort Road, Chitradurga. Archived from the original on 29 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 June 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Protected Monuments in Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 3 June 2015.
- ↑ "Temples of Karnataka". Kamat's Potpourri. பார்க்கப்பட்ட நாள் 3 June 2015.