தேன் உண்ணுதல்
தேன் உண்ணுதல் (Mellivory) என்பது ஆங்கிலத்தில் மெலிவோரி என்று அழைக்கப்படுகிறது. மெலிவோரி என்பதைத் தேனை உணவாகச் சாப்பிடுவதைக் குறிக்கும் ஒரு சொல். தேன் என்பது சில சமூக பூச்சிகளால் குறிப்பாகத் தேனீக்களால், அவற்றின் கூட்டமைப்புகளின் உறுப்பினர்களால், குறிப்பாக அவற்றின் வளரும் இளம் உயிரிகளின் நுகர்வுக்காக உருவாக்கப்பட்ட ஓர் இனிப்புச் சுவையுடைய பிசுபிசுப்பு பொருள் ஆகும். தேன் மனிதன் உட்பட ஏராளமான விலங்குகளால் உண்ணப்படுகிறது. தேனின் நன்மையினையும் பயனையும் உணர்ந்த மனிதர்கள் தேனீக்களைச் செயற்கையாக வளர்க்கக் கற்றுக்கொண்டான். தேனின் மட்டுப்படுத்தப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருந்தபோதிலும் (அதன் செறிவூட்டப்பட்ட சர்க்கரைகளின் மிக அதிக ஊடுகலப்பு அழுத்தத்தால் ஏற்படுகிறது) பல்வேறு நுண்ணுயிரிகளின் உணவு ஆதாரமாக உள்ளது.
சொற்பிறப்பியல்
[தொகு]மெலிவோரி என்ற ஆங்கிலச் சொல் மெல் (mel) "தேன்" என்ற பொருளிலும் வோரசு (vorous), "-சாப்பிடுதல்" என்று பொருள்படும் இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.[1]
ஊட்டச்சத்து
[தொகு]தேன் என்பது பல ஒற்றைச் சர்க்கரைகள், முதன்மையாக புரக்டோசு மற்றும் குளுக்கோசு ஆகியவற்றைக் கொண்ட ஒரு பாகு ஆகும்.[2] காட்டுத் தேனில் தேனீக்களின் இளம் உயிரிகளின் தடயங்கள் உள்ளன. இதனால் இத்தேன் கொழுப்பு, புரதம், உயிர்ச்சத்துகள் மற்றும் தாதுக்களுடன் காணப்படும்.[3] பல சூழல்களில் தேனை உட்கொள்ளும் உயிரினங்களுக்கு கார்போகைட்ரேட்டுகளின் ஒரே உணவு ஆதாரமாக உள்ளது. பெரிய மூளையினைக் கொண்ட விலங்குகளின் வளர்சிதை மாற்றத்திற்கான சக்தி அதிகம் என்பதால், தேன் வழங்கும் செறிவூட்டப்பட்ட ஆற்றல் தான் மனிதர்களுக்கு இவ்வளவு பெரிய மூளையை உருவாக்க வழிவகுத்தது என்று பரிமாணக் கருத்துக்கள் கூறுகிறது.[3] தேனில் குறைந்த அளவிலான நுண்ணுயிர் எதிர்ப்பண்புகளையும் கொண்டுள்ளன.[4]
மனிதர்களும் தேன் உணவும்
[தொகு]உணவு
[தொகு]வரலாற்றில் தேனின் முக்கிய பயன்பாடுகள் சமையல், அடுமனை பயன்பாடு, மிட்டாய், ரொட்டியுடன் பயன்படுத்தப்படுகிறது. தேநீர் போன்ற பல்வேறு பானம் உள்ளிட்ட சில வணிகப் பானங்களிலும் தேன் இனிப்பாகச் சேர்க்கப்படுகின்றது.[5]
தேனின் ஆற்றல் காரணமாக, சூடான காலநிலை நிலவும் இடங்களில் கிட்டத்தட்ட அனைத்து வேட்டைக்கார-சேகரிப்பாளர் கலாச்சாரங்களிலும் தேன் ஒரு முக்கியமான உணவாகும். ஹாட்சா மக்கள் தேனைத் தங்கள் விருப்பமான உணவாக உட்கொள்கின்றனர்.[6] ஆப்பிரிக்காவில் தேன் வேட்டைக்காரர்கள் சில வகையான பறவைகளுடன் இணை உறவைக் கொண்டுள்ளனர்.[3][7]
நொதித்தல்
[தொகு]உலகின் பழமையான புளிக்கவைக்கப்பட்ட பானம், 9,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மீட்டாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. மீட் (தேன் ஒயின் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது தேனுடன் மதுவம் சேர்த்துப் பல வாரங்கள் அல்லது மாதங்களாகப் புளிக்கவைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் மது ஆகும்.[8][9][10] மதுவம் சாக்கரோமைசசு செரிவிசியா பொதுவாக நவீன மீட் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.[9][10]
பல வகையான மீட் பானங்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றன. இவற்றில் முக்கியமானவை, மெத்தக்லின் (மசாலா அல்லது மூலிகைகள்) மெலோமெல் (திராட்சை போன்ற பழச்சாறுகளுடன், குறிப்பாக பைமென்ட் எனப்படுகிறது), இப்போகிராசு (இலவங்கப்பட்டை), சாக் மீட் (அதிக அடர்வுடைய தேன்) ஆகும்.[10][11] "பிராகோட்" என்று அழைக்கப்படும் மீட் பீர் தயாரிக்கவும் தேன் பயன்படுத்தப்படுகிறது.[12]
பாரம்பரிய மருத்துவம்
[தொகு]தேன் என்பது தீக்காயங்கள் மற்றும் பிற தோல் காயங்களுக்கு நாட்டுப்புறச் சிகிச்சையில் மருந்தாகாப் பயன்படுகிறது. மற்ற மருத்துவ முறைகளை விட 4 முதல் 5 நாட்கள் வேகமாகத் தீக்காயங்களைக் குணப்படுத்த இது உதவுகிறது என்று ஆரம்பச் சான்றுகள் தெரிவிக்கின்றன. மேலும் தேன், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய நோய்த்தொற்றுகள் விரைவாகக் குணமாகவும், கிருமி நாசினியாகவும் பயன்பாடு உடையது என ஆய்வுகள் கூறுகின்றன.[13] பாரம்பரிய மற்றும் மூலிகை மருத்துவத்தின் பயிற்சியாளர்களால் தேன் நீண்ட காலமாக ஒரு மேற்பூச்சு நுண்ணுயிர் எதிர்ப்பாயாக பயன்படுத்தப்படுகிறது.[14][15]
தொன்மங்கள் மற்றும் நாட்டுப்புற மருத்துவத்தில், பண்டைய கிரேக்கர்கள் மற்றும் எகிப்தியர்களால் இரைப்பை தொந்தரவுகள், புண்கள், தோல் காயங்கள் மற்றும் தோல் தீக்காயங்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சையளிக்கத் தேன் வாய்வழியாகவும் மேற்புறமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆயுர்வேதம், பாரம்பரியச் சீன மருத்துவத்திலும் தேன் பயன்படுத்தப்பட்டுள்ளது.[16] தேன் மாற்று மருத்துவத்தின் ஒரு வடிவமாக தேனீச்சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது .[17]
மதத்தில் தேன்
[தொகு]சில மதங்களின் வழிபாட்டு முறைகளின் ஒரு பகுதியாக மனிதர்கள் தேனை உட்கொள்கிறார்கள். யூத மதத்தில் ரோஷ் ஹஷானாவின் போது, ஆப்பிள் தேனில் நனைத்து ஓர் அடையாளமாக ஒரு இனிமையான புத்தாண்டுக்கான சின்னம் கருதப்படுகிறது. இந்த வழக்கம் டானாக் அல்லது தல்முட் ஆகியவற்றில் குறிப்பிடப்படவில்லை. இதன் ஆரம்பக்காலக் குறிப்புகளில் ஒன்று ரப்பி மோசேயின் ஷுல்சன் அருச் இஸ்ஸர்லெஸ் இடைக்கணிப்பில் உள்ளது. இது பீட் மற்றும் லீக் போன்ற பிற ரோஷ் ஹஷானா சிமனிம் போலல்லாமல் ஓர் உலகளாவிய வழக்கமாகக் குறிப்பிடுகிறது.[18] ஆயினும்கூட, இந்த வழக்கம் கிட்டத்தட்ட உலகளாவிய தாக வளர்ந்துள்ளது. இந்த வழக்கத்திற்கு வேறுபட்ட அல்லது மிகவும் பாரம்பரியத் தோற்றம் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். முனைவர் ஜெபெரி கோகன், 40 ஆண்டுகளாகப் பாலைவனத்தில் அலைந்து திரியும் போது இசுரேலியர்களுக்கு கடவுள் வழங்கிய மன்னாவினை இந்த வழக்கம் நினைவூட்டுவதாகத் தெரிவிக்கின்றார்.[19] இந்து மதத்தில், தேன் (மது) என்பது வாழ்க்கையின் ஐந்து அமுதங்களில் ஒன்றாகும் (பஞ்சாமிருத). கோயில்களில், மது அபிசேகம் என்ற சடங்கில் தெய்வங்கள் மீது தேன் ஊற்றப்படுகிறது. வேதங்களும் பிற பண்டைய இலக்கியங்களும் தேனை ஒரு சிறந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய உணவாகப் பயன்படுத்துவதைக் குறிப்பிடுகின்றன.[20] புத்த மதத்தில், இந்தியாவிலும் வங்கதேசத்திலும் கொண்டாடப்படும் மது பூர்ணிமா திருவிழாவில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. புத்தர் வனப்பகுதிக்குள் சென்று தனது சீடர்களிடையே அமைதி ஏற்படுத்தியதை இந்த நாள் நினைவுகூருகிறது. புராணத்தின் படி, அவர் அங்கு இருந்தபோது ஒரு குரங்கு அவருக்குச் சாப்பிடத் தேன் கொண்டு வந்தது. மது பூர்ணிமா அன்று, பௌத்தர்கள் துறவிகளுக்குத் தேன் கொடுப்பதன் மூலம் இந்த செயலை நினைவுகூருகிறார்கள். குரங்கின் பரிசு பௌத் பௌத்த கலையில் அடிக்கடி சித்தரிக்கப்படுகிறது.[20] இசுலாத்தில், ஹதீசின் படி, முகம்மது நபி குணப்படுத்தும் நோக்கங்களுக்காகத் தேனைப் பரிந்துரைத்தார். குர்ஆன் தேனைச் சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவாக ஊக்குவிக்கிறது.[21]
விலங்குகளில் தேன் நுகர்வு
[தொகு]முதுகெலும்பற்ற உயிரினங்களின் தேன் நுகர்வு
[தொகு]தேனீ வளர்ப்பில் தீங்குயிரிகளாக பல வகையான பூச்சிகள் உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், சிறிய தேனடை வண்டு, பெயரிடப்படாத தேனீ பேன் (ஈ). எறும்புகள், குளவிகள் மற்றும் மெழுகு அந்துப்பூச்சிகளான கேலேரியா மெல்லோனெல்லா மற்றும் அக்ரியா கிரிசெல்லா போன்றவை தேனை நேரடியாகச் சாப்பிடுவதன் மூலம் சேதத்தை ஏற்படுத்துகின்றன. , தேனீக்களும் தங்கள் இளம் உயிரிகளுக்குத் தேனை உணவாக வழங்குகின்றன. மேற்கத்திய தேனீக்கள் மற்ற தேனீக்களின் தேனடையிலிருந்து தேனைக் கொள்ளையடிக்கும். அதே போல் மஞ்சள் குளவிகளும் இச்செயலைச் செய்கின்றன.[22] குளெப்டோபராசைட்டுகளின் ஒரு பேரினமான நோமாடாவில், பெண் தனது முட்டைகளை தேனிப் பெட்டியினுள் இடுகின்றது. முட்டையிலிருந்து வளரும் பூச்சிகள் தேனடையின் வளங்களைச் சாப்பிட்டு இறுதியில் தேனடையினை விட்டு வெளியேறும்.[23]
முதுகெலும்புள்ள உயிரினங்களின் தேன் நுகர்வு
[தொகு]தேன் பல வகையான பாலூட்டிகளால் உண்ணப்படுகிறது. குறிப்பாக இசுகங்குகள், ரக்கூன், ஓபோசம்கள், கின்காஜஸ், கரடி மற்றும் தேன் வளைக்கரடி.[24] கரடிகள் தேனடைகளை வேட்டையாடி தேனை உண்ணுகின்றன. கரடிகள் தேன் மட்டுமல்லாமல், கொழுப்பு மற்றும் புரதத்தை வழங்கும் இளம் உயிரிகள் மற்றும் முதிர்ச்சியடையாத தேனீக்களாலும் ஈர்க்கப்படுகின்றன.[25] தேன் வளைக்கரடிகள் தேனீக்களைத் தாக்கி தேன் சாப்பிடுவது குறித்து நன்கு அறியப்பட்டுள்ளன. இவற்றின் உணவின் அடிப்படையில் இவை பெயரிடப்பட்டுள்ளன.[26]
தேன் மற்றும் தேனீ மெழுகு ஆகியவை தேனீ உண்ணிகள் மற்றும் தேனீ வழிகாட்டிகள் உள்ளிட்ட சில பறவைகளால் உண்ணப்படுகின்றன. இவற்றில் பிந்தையது மனிதர்களைத் தேன் கூடுகள் உள்ள இடத்திற்கு வழிநடத்துவதாக அறியப்படுகிறது.[7]
நுண்ணுயிரிகளின் தேன் நுகர்வு
[தொகு]தேன், குறைந்த நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருந்தாலும், சில நுண்ணுயிரிகளால், குறிப்பாக ஈஸ்ட் மற்றும் வித்தியை உருவாக்கும் பாக்டீரியாக்களால் உட்கொள்ளப்படுகிறது.[4][27] தேனில் காணப்படும் குறிப்பிடத்தக்கப் பூஞ்சைகள் ஆல்டர்னேரியா ஆல்டர்னாட்டா, அசுபெர்ஜிலசு நைஜர், அசுபெர்ஜிலசு புரோலிபெரான்சு, அசுபெர்ஜிலசு இசுபேலுன்சியசு, சேட்டோமியம் குளோபோசம், கிளாடோசுபோரியம் கிளாடோசுபோர்சியோயிட்சு, தால்டினியா கான்சன்ட்ரிகா, எமெரிகெல்லா திசுகோபோரா, எமெரிக்கெல்லா கின்கிக்சியனி, பென்சிலியம் கொரிலோபிலம், பென்சிலியம் டெகம்பன்சு, பென்சிலிம் பொலோனிகம், பென்சிலியம் வினுலட்டம் ஆகியன.[28]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Definition of MELLIVOROUS". www.merriam-webster.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-26.
- ↑ "What is Honey?". Food Insight (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-12-23. பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.
- ↑ 3.0 3.1 3.2 Wayman, Erin. "Humans, the Honey Hunters". Smithsonian Magazine (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-26.
- ↑ 4.0 4.1 Mandal, Manisha Deb; Mandal, Shyamapada (2011). "Honey: its medicinal property and antibacterial activity". Asian Pacific Journal of Tropical Biomedicine 1 (2): 154–160. doi:10.1016/S2221-1691(11)60016-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:2221-1691. பப்மெட்:23569748.
- ↑ White, Jonathan W. (1978), Chichester, C. O. (ed.), Honey, Advances in Food Research, vol. 24, Academic Press, pp. 287–374, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/s0065-2628(08)60160-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780120164240, PMID 367113
- ↑ Marlowe, Frank W.; Berbesque, J. Colette; Wood, Brian; Crittenden, Alyssa; Porter, Claire; Mabulla, Audax (1 June 2014). "Honey, Hadza, hunter-gatherers, and human evolution". Journal of Human Evolution 71: 119–128. doi:10.1016/j.jhevol.2014.03.006. பப்மெட்:24746602. Bibcode: 2014JHumE..71..119M.
- ↑ 7.0 7.1 Spottiswoode, Claire N.; Begg, Keith S.; Begg, Colleen M. (2016-07-22). "Reciprocal signaling in honeyguide-human mutualism". Science (American Association for the Advancement of Science) 353 (6297): 387–389. doi:10.1126/science.aaf4885. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:27463674. Bibcode: 2016Sci...353..387S. https://www.science.org/doi/10.1126/science.aaf4885.
- ↑ McGovern, Patrick E.; Zhang, Juzhong; Tang, Jigen; Zhang, Zhiqing; Hall, Gretchen R.; Moreau, Robert A.; Nuñez, Alberto; Butrym, Eric D. et al. (21 December 2004). "Fermented beverages of pre- and proto-historic China". Proceedings of the National Academy of Sciences 101 (51): 17593–17598. doi:10.1073/pnas.0407921102. பப்மெட்:15590771. Bibcode: 2004PNAS..10117593M.
- ↑ 9.0 9.1 Pereira, Ana Paula; Mendes-Ferreira, Ana; Estevinho, Leticia M.; Mendes-Faia, Arlete (2015). "Improvement of mead fermentation by honey-must supplementation". Journal of the Institute of Brewing 121 (3): 405–410. doi:10.1002/jib.239.
- ↑ 10.0 10.1 10.2 Iglesias, A; Pascoal, A; Choupina, A. B.; Carvalho, C. A.; Feás, X; Estevinho, L. M. (2014). "Developments in the fermentation process and quality improvement strategies for mead production". Molecules 19 (8): 12577–90. doi:10.3390/molecules190812577. பப்மெட்:25153872.
- ↑ Tierney, John (21 October 2014). "Making Mead in a Space-Age World". The Atlantic. பார்க்கப்பட்ட நாள் 20 June 2017.
- ↑ "Braggot: The Best of Mead and Beer". American Home Brewers Association. 2017. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.
- ↑ Jull, Andrew B.; Cullum, Nicky; Dumville, Jo C.; Westby, Maggie J.; Deshpande, Sohan; Walker, Natalie (2015). "Honey as a topical treatment for wounds". Cochrane Database of Systematic Reviews 2015 (3): CD005083. doi:10.1002/14651858.cd005083.pub4. பப்மெட்:25742878. பப்மெட் சென்ட்ரல்:9719456. https://espace.library.uq.edu.au/view/UQ:370288/UQ370288_OA.pdf. "Honey appears to heal partial thickness burns more quickly than conventional treatment (which included polyurethane film, paraffin gauze, soframycin-impregnated gauze, sterile linen and leaving the burns exposed) and infected post-operative wounds more quickly than antiseptics and gauze.".
- ↑ Buhner, Stephen Harrod (2012). Herbal Antibiotics: Natural Alternatives for Treating Drug-Resistant Bacteria (2nd ed.). Storey Publishing. pp. 188–196. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1603429870.
- ↑ Boukraâ, Laïd, ed. (2014). Honey in Traditional and Modern Medicine. CRC Press. p. 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781439840160.
- ↑ "Burns treatment in ancient times". Med Pregl 66 (5–6): 263–7. 2013. doi:10.1016/s0264-410x(02)00603-5. பப்மெட்:23888738.
- ↑ Barry R., Cassileth (2011). "Chapter 36: Apitherapy". The Complete Guide to Complementary Therapies in Cancer Care: Essential Information for Patients, Survivors and Health Professionals. World Scientific. pp. 221–224. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-4335-66-9.
- ↑ Rema, Orach Chaim 583:1.
- ↑ Bramen, Lisa. "Why Honey Is Eaten for Rosh Hashanah, and Other Burning Questions". Smithsonian Magazine (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-26.
- ↑ 20.0 20.1 A Meaningful Story of Buddha, Elephant and Monkey பரணிடப்பட்டது 19 மார்ச்சு 2008 at the வந்தவழி இயந்திரம் by Marguerite Theophil, United Press International, 16 November 2006, accessed 9 August 2008
- ↑ Yusuf 'Ali, 'Abdullah. An Nahl, Al-Quran Chapter 16 (The Bee) quoted from "The Holy Qur'an: Original Arabic Text with English Translation & Selected Commentaries". Saba Islamic Media. Archived from the original on 26 பெப்பிரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 20 மே 2013.
{{cite book}}
: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "ENY-163/IN1064: Robbing Behavior in Honey Bees". edis.ifas.ufl.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-22.
- ↑ "About The Nomad Bee - Species, Life Cycles And Hosts". BuzzAboutBees.net. பார்க்கப்பட்ட நாள் 2022-09-22.
- ↑ "5 Animals That Love Raw Honey". Manuka Honey USA (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-05-28. பார்க்கப்பட்ட நாள் 2022-09-20.
- ↑ Manning, Elizabeth. "ASK A WILDLIFE BIOLOGIST, Alaska Department of Fish and Game". www.adfg.alaska.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.
- ↑ Zielinski, Sarah. "Honey Badgers Are Real". Smithsonian Magazine (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-23.
- ↑ Snowdon, Jill A; Cliver, Dean O (1996-08-01). "Microorganisms in honey" (in en). International Journal of Food Microbiology 31 (1): 1–26. doi:10.1016/0168-1605(96)00970-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0168-1605. பப்மெட்:8880294. https://dx.doi.org/10.1016/0168-1605(96)00970-1.
- ↑ Toledo, Vagner De Alencar Arnaut De (2017-03-15). Honey Analysis (in ஆங்கிலம்). BoD – Books on Demand. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-953-51-2879-3.