உள்ளடக்கத்துக்குச் செல்

தெஸ்பியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெஸ்பியா (Thespiae THESP-ee-ee ; பண்டைக் கிரேக்கம்Θεσπιαί Thespiaí ) என்பது போயோட்டியாவில் உள்ள ஒரு பண்டைய கிரேக்க நகர அரசாகும். இது நவீன தெஸ்பீசுக்கு அருகில், ஹெலிகான் மலை அடிவாரத்திலிருந்து தீப்ஸ் வரை கிழக்கு நோக்கி ஓடும் தாழ்வான மலைகளால் கட்டுப்படுத்தபட சமதளத்தில் இருந்தது. [1]

வரலாறு

[தொகு]
தெஸ்பியாவிலிருந்த கிமு 131-424 காலத்திய வெள்ளி ஓபோல் நாணயம். முன்பக்கம்: போயோட்டியன் கேடயம் பின்பக்கம்: பிறை.

பண்டைய கிரேக்க வரலாற்றில், தெஸ்பியே, போயோட்டியன் கூட்டணி என அழைக்கப்படும் பெடரல் கூட்டணி நகரங்களில் ஒன்றாகும். பல மரபுகளின் படி போயோட்டியர்கள் புராண திராயன் போருக்குப் பிறகு தெசலியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் என்றும், பல தலைமுறைகளாக போயோட்டிய சமவெளியில் குடியேற்றங்களை உருவாக்கியவர்கள் என்றும் ஒப்புக்கொள்கிறார்கள், இதில் தெஸ்பியாவின் குடியேற்றம் பிற்காலக் கட்டத்தில் உருவானது. [2] : 76–78 மற்ற மரபுகள் அவர்கள் மைசீனிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றன.

குறிப்புகள்

[தொகு]
  1. Chisholm 1911.
  2. Buck, R.J. (1979). A History of Boeotia.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெஸ்பியா&oldid=3510821" இலிருந்து மீள்விக்கப்பட்டது