உள்ளடக்கத்துக்குச் செல்

தெப்பக்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில்
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், மதுரை

இந்து சமயக் கோயில்களின் உள்ளேயோ அல்லது வெளியிலோ தெப்பக்குளம் அமைக்கப்படுகிறது. தெப்பக்குளங்கள் இந்து சமய விழாக்களுடன் தொடர்புடையதாய் இருக்கிறது. இலங்கையில் தெப்பக்குளத்தை கேணி என அழைக்கிறார்கள். வட இந்தியாவில் புஷ்கரணி, சரோவர், கல்யாணி, தீர்த்தம், குண்டம், தலாப், புக்கர் என்று அழைக்கிறார்கள்.

தெப்பக்குளம் அமைப்பு

[தொகு]

தெப்பங்குளங்கள் பொதுவாக சதுர வடிவிலான அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. சில கோயில்களில் அறுகோண அமைப்பிலும், ஸ்வஸ்திகா அமைப்பிலும் கூட தெப்பக்குளம் அமைக்கப்பட்டிருக்கின்றன. திருமெய்யம் சத்தியகிரீசுவரர் கோயில் மற்றும் சத்தியகிரிநாதப் பெருமாள் கோயில்களில் அறுகோண அமைப்பிலான தெப்பக்குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மிகப்பெரிய தெப்பக்குளம்

[தொகு]

மதுரையிலுள்ள மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் தென்னிந்தியக் கோயில் தெப்பக்குளங்களிலேயே மிகப்பெரியது. இதை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்கின்றனர். மதுரை மன்னராக இருந்த திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இந்த தெப்பக்குளம் 304.8 மீட்டர் நீள அகலம் கொண்டது.[1] தெப்பக்குளத்தின் நான்குபுறமும் சுமார் 15 அடி உயரத்துக்கு கல்லினால் சுவர் கட்டப்பட்டிருக்கிறது. இதன் நடுவில் நீராழி மண்டபம் ஒன்று உள்ளது. இங்கு நடைபெறும் தெப்பத் திருவிழா சிறப்புடையது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mariamman Temple : Mariamman Mariamman Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெப்பக்குளம்&oldid=3600310" இலிருந்து மீள்விக்கப்பட்டது