துளு நாட்காட்டி
Appearance
துளு நாட்காட்டி (Tulu Calendar) (துளு: ವೊರ್ಸೊ) கேரளா மாநிலத்தின் காசர்கோடு மாவட்டம் மற்றும் கர்நாடகா மாநிலத்தின் தட்சின கன்னடம் மற்றும் உடுப்பி மாவட்டப் பகுதியில் வாழும் துளு மொழி பேசும் துளு மக்கள் சூரிய நாட்காட்டியின் தங்கள் நாட்காட்டியை வகுத்துள்ளனர்.
துளு நாட்காட்டியின் படி, ஆண்டின் முதல் நாளை விசு பார்பா என அழைக்கின்றனர். (ஆங்கில நாட்காட்டியின் படி ஏப்ரல் மாதத்தின் நடுவில் வரும்) . துளு நாட்காட்டியின் முதல் நாளை திங்கடே/சிங்கடே என்றும், இறுதி நாளை சங்கராந்தி என்றும் அழைப்பர்.
துளுநாட்காட்டியின் 12 மாதங்களின் பெயர்கள்:
- பாக்கு (Paggu) (எப்ரல்-மே)
- பேஷ்யா (Beshya) (மே-சூன்)
- கார்தெல் (Kaartel) (சூன்_சூலை)
- ஆடி (சூலை-ஆகஸ்டு)
- சோனா (Sona) (ஆகஸ்டு-செப்டம்பர்)
- நிர்னாளா/கன்யா (Nirnaala/ Kanya) (செப்டம்பர்-அக்டோபர்)
- போந்தியோலு (Bontyolu) (அக்டோபர்-நவமபர்)
- ஜார்தே (Jaarde) (நவம்பர்-டிசம்பர்)
- பெராதே (Peraarde) (டிசம்பர்-ஜனவரி)
- பொன்னி/புயுன்தேல் Ponny/Puyinthel (ஜனவர்-பிப்ரவரி)
- மாயி (Maayi) (பிப்ரவரி-மார்ச்)
- சுக்கி (Suggi) (மார்ச்-ஏப்ரல்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Arthur Coke Burnell (1878). Elements of South-Indian Palæography, from the Fourth to the Seventeenth Century, A. D.: Being an Introduction to the Study of South-Indian Inscriptions and Mss. Trübner & Company, 1878. pp. 76/147.