உள்ளடக்கத்துக்குச் செல்

துக்கிராலா

ஆள்கூறுகள்: 16°19′38″N 80°37′41″E / 16.3271°N 80.6280°E / 16.3271; 80.6280
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துக்கிராலா
கிராமம்
துக்கிராலாவில் கொம்மமுரு கால்வாய்
துக்கிராலாவில் கொம்மமுரு கால்வாய்
துக்கிராலா is located in ஆந்திரப் பிரதேசம்
துக்கிராலா
துக்கிராலா
ஆந்திராவில் துக்கிராலாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°19′38″N 80°37′41″E / 16.3271°N 80.6280°E / 16.3271; 80.6280
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்குண்டூர்
வட்டம்Duggirala
அரசு
 • வகைஊராட்சி மன்றம்
 • நிர்வாகம்துக்கிராலா கிராம ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்805 ha (1,989 acres)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்11,098
 • அடர்த்தி1,400/km2 (3,600/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே 5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
522330
இடக் குறியீடு 91–8644
வாகனப் பதிவுஏபி

துக்கிராலா (Duggirala) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். இது தெனாலி வருவாய் பிரிவில் துக்கிராலா மண்டலத்தின் மண்டலத் தலைமையகமும் ஆகும். [3] இது நாட்டின் முக்கிய மஞ்சள் வர்த்தக மையங்களில் ஒன்றாக திகழ்கிறது.

வரலாறு

[தொகு]

இக்கிராமத்திலுள்ள கேசவசாமி கோவிலில் உள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் பொது ஊழி 12ஆம் நூற்றாண்டில் சோழ வம்சம் அதன் இருப்பைக் கொண்டுள்ளது. [4]

நிலவியல்

[தொகு]

துக்கிராலா 16.3271 வடகிலும் 80.6280 கிழக்கிலும் அமைந்துள்ளது. இது 805 ஹெக்டேர் (1,990 ஏக்கர்) பரப்பளவில் பரவியுள்ளது. சீதாநகரத்திலிருந்து ( தாடேபல்லி ) ஒரு கால்வாய் கிராமம் வழியாக செல்கிறது. இது கிருஷ்ணா ஆற்றிலிருந்து தண்ணீரை இழுத்து மேற்கு டெல்டா அமைப்பின் ஒரு பகுதியாக அமைகிறது. இது கொம்மமுரு மற்றும் நிசாம்பட்டிணம் ஆகிய இடங்களின் கால்வாய்களுக்கு ஆதாரமாகவும் இருக்கிறது. [5]

புள்ளிவிவரங்கள்

[தொகு]

2011 இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, இந்த கிராமத்தில் 11,098 என்ற எண்ணிக்கையில் மக்கள் தொகை இருக்கிறது. கிராமம் 3,128 வீடுகளைக் கொண்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் 5,505 ஆண்கள், 5,593 பெண்கள் மற்றும் 1,053 குழந்தைகள் (0–6 வயதுடையவர்கள்) என இருக்கின்றனர். சராசரி கல்வியறிவு விகிதம் 7,759 கல்வியாளர்களுடன் 76.75% ஆக உள்ளது. மொத்தம் 4,860 தொழிலாளர்கள் மற்றும் 6,238 தொழிலாளர்கள் அல்லாதவர்கள் உள்ளனர். உழைக்கும் மக்கள் தொகை 3,932 பிரதான மற்றும் 928 குறு தொழிலாளர்கள்.

பொருளாதாரம்

[தொகு]

வேளாண்மை

கிராமத்தில் உள்ள துக்கிராலா வேளாண் கிடங்கு விவசாய பொருட்களின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்படுகிறது. [6] முக்கிய பயிர்களாக நெல், மஞ்சள் போன்றவை பயிரிடப்படுகிறது. [7] [8] துக்கிராலா மஞ்சள் கிடங்கு மாநிலத்தின் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. இது 30,000 க்கும் மேற்பட்ட பைகள் மஞ்சளைக் கையாளுகிறது. [9] இது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மஞ்சளில் 10% உற்பத்தி செய்கிறது. மேலும்,உருசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய இராச்சியம், யப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. [10]

தொழில்கள்

சி.சி.எல் தயாரிப்புகள் (இந்தியா) நிறுவனம் துக்கிராலாவில் ஒரு உடனடியாக கரையக்கூடிய காப்பி உற்பத்தி ஆலையைக் கொண்டுள்ளது. [11]

போக்குவரத்து

[தொகு]

உள்ளூர் போக்குவரத்தில், தெனாலி பேருந்து நிலையத்திலிருந்து மங்களகிரி மற்றும் விசயவாடா வரை ஆந்திர மாநில போக்குவரத்துப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தெனாலி - மங்களகிரி சாலை துக்கிராலா வழியாக செல்கிறது. [12] கிராமப்புற சாலைகள் கிராமத்தை சிந்தலபுடி, இமானி, கே.ஆர்.கொண்டுரு, மஞ்சிகாலபுடி, மொராம்புடி, நம்பூரு, பெனுமுலி மற்றும் பெத்தபலேம் ஆகியவற்றுடன் இணைக்கின்றன. [13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District Census Hand Book : Guntur (Part B)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 14, 396. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
  2. "Population". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
  3. "District Census Handbook : Guntur (Part A)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 5, 626–627. பார்க்கப்பட்ட நாள் 4 June 2019.
  4. A Manual of the Kistna District, in the Presidency of Madras: Compiled for the Government of Madras (in ஆங்கிலம்). Lawrence Asylum Press. 1883. p. 213. பார்க்கப்பட்ட நாள் 4 July 2016.
  5. A Manual of the Kistna District, in the Presidency of Madras: Compiled for the Government of Madras (in ஆங்கிலம்). Lawrence Asylum Press. 1883. p. 263. பார்க்கப்பட்ட நாள் 30 June 2016.
  6. "Turmeric trading begins at Duggirala". தி இந்து (Guntur). 17 June 2004. http://www.thehindu.com/2004/06/17/stories/2004061708590300.htm. பார்த்த நாள்: 9 March 2016. 
  7. "Helen causes extensive damage to crops". The New Indian Express (Vijayawada). 25 November 2013. http://www.newindianexpress.com/states/andhra_pradesh/Helen-causes-extensive-damage-to-crops/2013/11/25/article1909627.ece. பார்த்த நாள்: 26 February 2016. 
  8. "New turmeric variants to flood Telangana farms". The Hindu. 5 June 2018. https://www.thehindu.com/news/cities/Hyderabad/new-turmeric-variants-to-flood-telangana-farms/article24090297.ece. பார்த்த நாள்: 15 May 2019. 
  9. "Duggirala turmeric yard receives a record quantity of 30,000 bags". www.thehansindia.com. 12 May 2017. https://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2017-05-12/Duggirala-turmeric-yard-receives-a-record-quantity-of-30000-bags/299376. பார்த்த நாள்: 15 May 2019. 
  10. "Turmeric farmers get a raw deal". Times of India (Tenali). 10 December 2011. http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Turmeric-farmers-get-a-raw-deal/articleshow/11052600.cms. பார்த்த நாள்: 22 September 2015. 
  11. "About us". CCL Products (India) Limited. Archived from the original on 30 September 2015. பார்க்கப்பட்ட நாள் 22 September 2015.
  12. "Existing State Highways" (PDF). Andhra Pradesh Road Development Corporation. Government of Andhra Pradesh. p. 10. Archived from the original (PDF) on 20 September 2018. பார்க்கப்பட்ட நாள் 10 May 2019.
  13. "Computerization of PR-Engineering Dept". predmis.ap.nic.in. Panchayati Raj Engineering Department, Andhra Pradesh. 11 May 2019. பார்க்கப்பட்ட நாள் 10 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துக்கிராலா&oldid=3150108" இலிருந்து மீள்விக்கப்பட்டது