திருநகரங்கண்ட படலம்
Appearance
திருநகரங்கண்ட படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற மூன்றாவது படலமாகும்.
படலச் சுருக்கம்
[தொகு]இப்படலத்தில் தனஞ்செயன் எனும் வணிகன் கடம்பவனத்தில் இருந்த சொக்கநாதருக்கு தேவர்கள் செய்யும் பூசைகளைக் காணுதலும், அதனை குலசேகரப் பாண்டியனிடம் எடுத்துரைப்பதும் சொல்லப்படுகிறது. குலசேகரப் பாண்டியன் கனவில் வந்த சிவபெருமான் சொக்கநாத சன்னிதியைச் சுற்றி நகரம் அமைக்க கட்டளையிடுவதும், குலசேகரப் பாண்டியன் உருவாக்கிய நகருக்கு வந்து சந்திரனின் கலைகளில் ஒன்றினை அந்த நகருக்கு அளித்து மதுரை என்ற நகரத்திற்கு பெயரிட்டதையும் இப்படலம் விளக்குகிறது.