திரிவெனிக் வெலி
டிரிவெனிக் வெலியின் செயற்கைக்கோள் படம் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | அட்ரியாடிக் கடல் |
ஆள்கூறுகள் | 43°26′39″N 16°08′44″E / 43.444226°N 16.145439°E |
பரப்பளவு | 12.07 km2 (4.66 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 178 m (584 ft) |
நிர்வாகம் | |
குரொவேசிய மாவட்டங்கள் | டால்மேசிய மாவட்டம் |
மக்கள் | |
மக்கள்தொகை | 150 (2011 கணக்கீட்டின் படி) |
திரிவெனிக் வெலி (Drvenik Veli, Дрвеник-Вели) என்பது ஏதிரியாத்திக்குக் கடலில் குரோவாசிய பகுதியில் உள்ள ஒரு தீவு ஆகும். இத்தீவு தல்மாசியத் தீவுக்கூட்டத்தின் நடுவே, சோல்ட்டாவின் வடமேற்கே, பெருந்தரையில் இருந்து 1.8 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.[1] இதன் பரப்பளவு 12.07 சதுரகிமீ ஆகும்.[2][3] இத்தீவின் அதியுயர் புள்ளி 178 மீட்டர்கள் ஆகும்.[3]
இத்தீவின் ஒரேயொரு குடியிருப்பு திரேவ்னிக் விலீக்கி ஆகும், இதன் மக்கள்தொகை 150 (2011 தரவு) ஆகும்.[4] இவர்களின் முக்கிய தொழில்கள் வேளாண்மை, மீன்பிடித்தல் மற்றும் சுற்றுலா.[5] இத்தீவின் கரையோரங்களில் பல மணல் மற்றும் கூழாங்கல் கடற்கரைகள் உள்ளன.
இந்தத் தீவில் பதினைந்து அல்லது பதினாறாம் நூற்றாண்டு முதலே மக்கள் வாழ்ந்துவருகின்றனர். பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த குரோஷிய ஆவணங்கள், இத்தீவை "கெரோனா" அல்லது "கிருனா" என்று குறிப்பிட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Basic facts about Drvenik". Archived from the original on 2007-02-11. பார்க்கப்பட்ட நாள் 2022-07-15.
- ↑ Duplančić Leder, Tea; Ujević, Tin; Čala, Mendi (June 2004). "Coastline lengths and areas of islands in the Croatian part of the Adriatic Sea determined from the topographic maps at the scale of 1 : 25 000" (PDF). Geoadria (Zadar) 9 (1): 5–32. doi:10.15291/geoadria.127. https://hrcak.srce.hr/9636. பார்த்த நாள்: 2019-12-26.
- ↑ 3.0 3.1 Statistical Yearbook of the Republic of Croatia, Vol. 47
- ↑ Census of Population, Households and Dwellings 2011, Zagreb: Croatian Bureau of Statistics. December 2012
- ↑ First Croatian online peljar
வெளியிணைப்புகள்
[தொகு]- Web site dedicated to Drvenik veliki பரணிடப்பட்டது 2012-11-11 at the வந்தவழி இயந்திரம்