உள்ளடக்கத்துக்குச் செல்

திபெந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


திபெந்திர வீர விக்ரம் ஷா
நேபாள மன்னர்
ஆட்சிக்காலம்1 – 4 சூன் 2001
முன்னையவர்பிரேந்திரா
பின்னையவர்ஞானேந்திரா
பிறப்பு(1971-06-27)27 சூன் 1971
நாராயணன்ஹிட்டி அரண்மனை, நேபாளம் Narayanhity
இறப்பு4 சூன் 2001(2001-06-04) (அகவை 29)
மன்னர் பிரேந்திரா இராணுவ மருத்துவமனை, சௌனி, நேபாளம்
மரபுஷா வம்சம்
தந்தைபிரேந்திரா
தாய்ஐஸ்வர்யா
மதம்இந்து சமயம்

திபெந்திரா வீர விக்ரம் ஷா (Dipendra Bir Bikram Shah) (நேபாளி: दीपेन्द्र वीर विक्रम शाह) (27 சூன் 1971 – 4 சூன் 2001) நேபாளத்தை 1 சூன் 2001 முதல் 4 சூன் 2001 முடிய ஆண்ட மன்னராவர். அரச குடும்ப படுகொலைகளின் போது, இளவரசர் திபெந்திரா தன்னைதானே சுட்டுக் கொண்டு, கோமா நிலையில் மருத்துவமனையில், நேபாள மன்னராக 1 சூன் 2001ல் பதவி சூட்டப்பட்டப்பட்டார். பின்னர் கோமா நிலையிலே 4 சூன் 2001ல் மரணமடைந்தார். இவருக்குப் பின் நேபாள மன்னராக பதவியேற்ற, இவரது சித்தப்பா ஞானேந்திரா, நேபாளத்தில் 2008ல் முடியாட்சி முறை ஒழிக்கப்படும் வரை, நேபாள மன்னராக இருந்தவர்.

கல்வி

[தொகு]

மன்னர் திபெந்திரா பள்ளிக் கல்வியை காட்மாண்டுவிலும்; கல்லூரிக் கல்வியை இங்கிலாந்து நாட்டின் ஈடன் கல்லூரியிலும் படித்தவர். பின்னர் நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்திலும், நேபாள இராணுவப் பயிற்சி கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை முடித்தவர்.

நேபாள அரச குடும்பப் படுகொலைகள், 2001

[தொகு]

1 சூன் 2001 அன்று காட்மாண்டு நகரத்தில் உள்ள நாராயணன்ஹிட்டி அரண்மனையில் மன்னர் பிரேந்திரா தலைமையில் அரச குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியில், இளவரசர் திபெந்திரா கையில் துப்பாக்கியுடன் தோன்றி, அரண்மனையில் உள்ளவர்களை கண்மூடித்தனமாக சுட்டார். இத்துப்பாக்கிச் சூட்டில் மன்னர் பிரேந்திரா, ராணி ஐஸ்வரியா மற்றும் ஏழு அரச குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். பின்னர் இளவரசர் திபெந்திரா தன்னைத் தானே தலையில் சுட்டுக் கொண்டு, நான்கு நாட்களுக்குப் பின்னர் இறந்தார்.[1]

இளவரசர் திபெந்திராவின் இப்படுகொலையின் நோக்கம் இதுவரை அறியப்படவில்லை. இளவரசர் திபெந்திராவின் காதலை, மன்னர் ஏற்காததால், வெகுண்ட திபெந்திரா இப்படுகொலை நிகழ்த்தினார் என்ற கருத்தியல் நேபாளத்தில் பேசப்படுகிறது. [1]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Mullins, Lisa (1 Jun 2011). "Why Nepal's Crown Prince Went on a Killing Spree". PRI. https://www.pri.org/stories/2011-06-01/why-nepals-crown-prince-went-killing-spree. பார்த்த நாள்: 17 October 2017. 

வெளி இணைப்புகள்

[தொகு]
திபெந்திரா
பிறப்பு: 27 சூன் 1971 இறப்பு: 4 சூன் 2001
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் நேபாள மன்னர்
1– 4 சூன் 2001
பின்னர்
நேபாள மன்னராட்சி
முன்னர் நேபாள இளவரசர்
1971–2001
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபெந்திரா&oldid=2626085" இலிருந்து மீள்விக்கப்பட்டது