தாவுத் கான் பன்னி
தாவுது கான் பானி (- 6 செப்டம்பர் 1715) அக்கா தாத் கான் என்பவர் மொகலாயத் தளபதி மற்றும் ஆற்காடு நவாப் ஆவார். மேலும் இவர் பிற்காலத்தில் தக்காண அரசபிரதினிதியாக இருந்தவர் ஆவார். இவர் பானி இனத்தைச் சார்ந்த பஷ்டூன் பழங்குடி ஆவார். இவர் கர்நாடகத்தின் பிஜாப்பூரில் இருந்து வந்தவராவார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]1703 ஆம் ஆண்டில், தாவுத் கான் ஆற்காடு நவாபாக நியமிக்கப்பட்டார். ஔரங்கசீப் இவரை நவாப்பாக நியமிப்பதற்கு முன், இவரை 1701 ஆம் ஆண்டில் முகலாய இராணுவத்தின் தலைமை தளபதியாக நியமித்தார், அதே நேரத்தில் ஜுல்ப்கார் அலி கான் ஆறாகாடு நவாபாக இருந்தார்.
தாவுத் கான் ஆற்காட்டை தளமாக்க் கொண்டு, தலிகோட்டா மற்றும் கர்நாடக பிரதேசத்தின் பௌஜ்தாரான முதலாம் அசாஃப் ஜாவின் உதவியோடு தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். அவரு தன் காலகட்டத்தில், சாந்தோமுக்கு அடிக்கடி வருகை புரிந்து, அதை மேம்படுத்த முயற்சித்தார். ஆனால் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக இருந்த தாமஸ் பிட்டின் முயற்சிகள் காரணமாக, தாவுத் கான் தனது திட்டங்களை ஒத்திவைத்தார்.
ஜுல்பிகார் அலி கான் போன்று, தாவுத் கானும் பேரரசர் ஔரங்கசீப்பின் நம்பிக்கையைப் பெற்று, கிருஷ்ணா ஆற்றின் தெற்கே உள்ள அனைத்து பகுதிகளிலும் தன் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார். இவர் ஒருமுறை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சென்றபோது, வீரர்கள் வரிசையாக தெருக்களில் நின்றிருந்தனர். இந்த காவல் வீரர்களின் வரிசையானது புனித தாமஸ் வாயிலில் இருந்து,புனித தாமஸ் கோட்டை வரை வரிசையில் இருந்தனர் உள் கோட்டையின் சில பகுதிகள் நவாப்பின் காவற் படைப் பிரிவின் வசம் இருந்தது. ஆளுநர், தாமஸ் பிட், கோட்டையில் அவரது தங்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். கிழக்கு இந்திய கம்பெனி நவாப்புக்கு அளித்த மரியாதை இது.
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன மோதல்கள்
[தொகு]1702 ஆம் ஆண்டில், மொகலாயப் பேரரசின், மன்னரான ஔரங்கசீப்பின் ஆணையின்படி கர்னாடக பிரதேசத்தின் உள்ளூர் சுபேதாரான தாவுத் கான் மூன்று மாதங்களுக்கு மேலாக புனித ஜோர்ஜ் கோட்டையை முற்றுகையிட்டார்,[1] கோட்டையின் கவர்னரான தாமஸ் பிட்டை சமாதானத்திற்கான முயற்சியை மேற்கொள்ள பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்அறிவுறுத்தியது.
பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டைகளை உள்ளூர் இந்து போர் சாதி சிப்பாய்களை பணியமர்த்தியதன் மூலம் தாமஸ் பிட் பாதுகாத்தார், அவர் சிப்பாய்களுக்கு நவீன ஆயுதங்களைக் கொடுத்து, அவர்களை பிரித்தானிய அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் நிலைநிறுத்தி சென்னையைப் பாதுகாத்தார். இவரது நடவடிக்கைகள் முகலாயரின் அலைக்கழிப்புக்கு ஏற்ப இருந்தது.[2]
1708 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதியன்று, தாவுத் கான் ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனிக்கு திருவெற்றியூர், நுங்கம்பாக்கம், வியாசர்படி, கத்திவாக்கம் மற்றும் திருவொற்றியூரின் மேற்குப்பகுதியில் சதங்காடு ஆகிய ஐந்து கிராமங்களுக்கு வழங்கினார்.
1710 ஆம் ஆண்டில், தாவுத் கான் தில்லிக்கு திரும்ப அழைக்கப்பட்டு, முகலாய இராணுவத்தின் தளபதியான தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் அவர் தக்கான இராஜப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
1715 செப்டம்பர் 6 அன்று, தாவுத் கான் ஹுசைன் அலி கானின் எதிர்பாராத தாக்குதலைச் சந்தித்தார். இப்போரில் தீவாய்ப்பாக தாவுத் கான் துரதிருஷ்டவசமாக ஒரு தவறான குண்டால் கொல்லப்பட்டார். அவர் இறக்கும் வரை வெற்றிமுகத்தில் சென்ற போரின் போக்கானது, அவரது மரணத்தால் அவரது படைகள் புர்ஹான்பூருக்கு அருகில் நடந்த இப்போரில் தோற்கடிக்கப்பட்டன.
போர் யானைகள்
[தொகு]1703 ஆம் ஆண்டில் கோரமண்டல முகலாயத் தளபதியான தாவுத் கான் பன்னி 10,500 நாயணங்களை செலவழித்து 30 முதல் 40 வரையிலான போர் யானைகளை இலங்கையில் இருந்து வாங்கினார்.[3] இந்தக் கொள்முதல்களை இரண்டாம் விமலதர்மசூரியன் அங்கீகரித்திருந்தார்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 A Miscellany of Mutinies and Massacres in India, p. 11, கூகுள் புத்தகங்களில்
- ↑ யூடியூபில் நிகழ்படம்
- ↑ Mughal Warfare: Indian Frontiers and Highroads to Empire, 1500-1700 - Jos J. L. Gommans - Google Books. Books.google.com.pk. 2002-10-18. பார்க்கப்பட்ட நாள் 2012-06-02.