தாரோ மாவட்டம்
தாரோ மாவட்டம் Daro District Daerah Daro | |
---|---|
ஆள்கூறுகள்: 2°31′0″N 111°26′0″E / 2.51667°N 111.43333°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | முக்கா பிரிவு |
மாவட்ட அலுவலகம் | தாரோ |
மக்கள்தொகை (2020)[1] | |
• மொத்தம் | 37,900 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே 08:00 |
இணையதளம் | matu-darodc |
தாரோ மாவட்டம் (மலாய் மொழி: Daerah Daro; ஆங்கிலம்: Daro Sarikei) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; முக்கா பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் தாரோ எனும் பெயரில் ஒரு சிறுநகரம் உள்ளது. தாரோ நகரத்திற்கு மிக அருகில் மாத்து நகரம் உள்ளது.
மாத்து - தாரோ மாவட்ட மன்றத்தின் (Matu-Daro District Council) கீழ் தாரோ மாவட்டம் நிர்வகிக்கப்படுகிறது. 2020-இல் தாரோ மாவட்டத்தின் மக்கள் தொகை 37,900. மெலனாவ் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
சிபுவில் இருந்து இங்கு செல்ல படகு போக்குவரத்துகள் உள்ளன. ரெஜாங் ஆற்றின் வழியாகச் செல்லலாம்; சுமார் இரண்டு மணி நேரம் பிடிக்கும்.
பொது
[தொகு]புராணக் கதைகளின்படி, தாரோ என்ற பெயர் "தாவ் ஆரோ" என்பதிலிருந்து வந்ததாக அறியப்படுகிறது; அதாவது "நன்றாக உள்ளது" என்பது தாரோ என்பதன் சுருக்கமாகும். தற்போது புதிய சந்தைகள்; மற்றும் பல தங்கும் விடுதிகளின் கட்டுமானத்துடன் தாரோ நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது.
தாரோ மாவட்டத்தில் சாய் கிராமம், பெனிபா கிராமம், செபாகோ கிராமம், புரூட் கிராமம், நங்கர் கிராமம் மற்றும் செமோப் கிராமம் போன்ற பல முக்கியமான கிராமங்கள் உள்ளன.
கூட்டுப்பள்ளி
[தொகு]தாரோவில் உள்ள மக்களின் முக்கிய தொழில்கள் வேளாண்மை மற்றும் மீன்பிடித்தல் ஆகும்.
தாரோ நகரம் மலேசியாவில் ஒரு தனித்துவமான பள்ளியைக் கொண்டுள்ளது. இங்குள்ள தாரோ கூட்டுப் பள்ளியில் (Sekolah Kebangsaan Camporan Daro) மலாய் மொழியிலும், சீன மொழியிலும் கற்பித்தல் நடைபெறுகின்றது. ஆனால் அந்த இரு மொழி கற்பித்தல்களும் ஒரே பள்ளியில் ஒரே நிர்வாகத்தின் கீழ் நடைபெறுகின்றன.
காலநிலை
[தொகு]தாரோ மாவட்டம் ஒரு வெப்பமண்டல மழைக்காடுகளின் காலநிலையைக் காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமழை முதல் மிக அதிக மழைப்பொழிவைக் காண்கிறது.
தட்பவெப்ப நிலைத் தகவல், தாரோ | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 30.1 (86.2) |
30.3 (86.5) |
31.3 (88.3) |
32.1 (89.8) |
32.6 (90.7) |
32.3 (90.1) |
32.2 (90) |
31.9 (89.4) |
31.8 (89.2) |
31.5 (88.7) |
31.4 (88.5) |
30.7 (87.3) |
31.52 (88.73) |
தினசரி சராசரி °C (°F) | 26.2 (79.2) |
26.3 (79.3) |
27.0 (80.6) |
27.4 (81.3) |
27.9 (82.2) |
27.5 (81.5) |
27.3 (81.1) |
27.1 (80.8) |
27.2 (81) |
27.0 (80.6) |
27.0 (80.6) |
26.5 (79.7) |
27.03 (80.66) |
தாழ் சராசரி °C (°F) | 22.4 (72.3) |
22.4 (72.3) |
22.8 (73) |
22.8 (73) |
23.2 (73.8) |
22.8 (73) |
22.4 (72.3) |
22.4 (72.3) |
22.6 (72.7) |
22.6 (72.7) |
22.6 (72.7) |
22.4 (72.3) |
22.62 (72.71) |
மழைப்பொழிவுmm (inches) | 432 (17.01) |
252 (9.92) |
215 (8.46) |
179 (7.05) |
165 (6.5) |
204 (8.03) |
164 (6.46) |
162 (6.38) |
153 (6.02) |
244 (9.61) |
288 (11.34) |
360 (14.17) |
2,818 (110.94) |
ஆதாரம்: Climate-Data.org[2] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Official Portal of the Sarawak Government". sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2022-12-27.
- ↑ "Climate: Daro". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Daro District தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Matu & Daro District Council Official Website