தாமசு பார்துவார்தைன்
தாமசு பார்துவார்தைன் (Thomas Bradwardine) (அண். 1300 – 26 ஆகத்து 1349) ஓர் ஆங்கிலேயப் பாதிரியும் அறிஞரும் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் அரசவை உறுப்பினரும் ஆவார். இவர் கான்ட்டர்பரியின் பேராயராக இருந்தார். இவர் பெயர்பெற்ற புலமைவாத மெய்யியலாளரும் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவரும் ஆவார்; இவர் அடிக்கடி Doctor Profundus (இடைக்கல அடைமொழி) என அழைக்கப்பட்டார். இதற்கு "தகவுறு முனைவர்" என்று பொருள். இவர் பின்வரும் பல பட்டங்களை ஆக்சுபோர்டுவழி பெற்றுள்ளார்: இளங்கலை ( ஆகத்து 1321), முதுகலை (1323), இளம் இறையியல் (1333), இறையியல் முனைவர் (13480. [1]
வாழ்க்கை
[தொகு]பிராதுவார்தைன் சுசெக்சில் உள்ள கார்ட்பீல்டிலோ சிசெசுட்டரிலோ பிறந்துள்ளார். இவரது குடும்பம் அங்கு குடியேறி, நகர நடுத்தட்டு அதிகாரத் தரப்புடன் இணைந்திருந்தது.
இவர் 1321 இல் பட்டம் பெறும் வரையிலான இளமைக்கால வாழ்க்கையைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இவரது பிறந்த நாளும் கூட தெரியாது. ஆனால், 1290 – 1300 இடைவெளியில் அமைந்திருக்கலாம்.[2] இவர் பிறந்த இடமும் சுசெக்சில் உள்ள கார்ட்பீல்டா அல்லது சிசெசுட்டரா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. இவர் பற்றிய பருண்மையான தகவல் வாயில் ஏதும் ஆக்சுபோர்டு பால்லியொல் கல்லூரியில் 1321 இல் பட்டம் பெற்ற காலம் வரை அகப்படவில்லை. இவர் ஆக்சுபோர்டு மெர்ட்டன் கல்லூரியில் ஆய்வுறுப்பினராகியுள்ளார். இவருக்கு 1321 ஆகத்தில் இளங்கலைப் பட்டம் தரப்பட்டது. இவர் 1333 வரை மெர்ட்டன் கல்லூரியில் தங்கியிருந்தார். 1333 இல் இவர் இலிங்கன் திருச்சவைப் பாதிரியாகவும் 1337 இல் இவர் புனித பவுல் கதீடிரல் மதக்குருவாகவும் அமர்த்தப்பட்டுள்ளார். இவரது இறைப்பரப்புரை வாழ்க்கை, இவர் இலிங்கனின் பாதிரியானதும் தொடங்கியுள்ளது. இதோடு இவர் 1335 முதல் 1337 வரை தர்காம் ஆயராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தத் தர்காம் இடப்பெயர்ச்சி மூன்றாம் எடுவார்டுடன் தொடர்பேற்படுத்தி, இலண்டன் புனித பவுல் கதீடிரலுக்கு மதக்குருவாக பணியமர்த்தப்ப்பட வாய்ப்பளித்ததாகவும் கூறப்படுகிறது.[3]
இவர் சிறந்த மாணவனாக இருந்தார். ஆக்சுபோர்டு பல்லியோல் கல்லூரியில் பயின்றார். இவர் 1321 அளவில் இங்கே ஆய்வுறுப்பினரானார். இவர் இறையியல் முனைவர் பட்டம் பெற்று, மிகச் சிறந்த அரிஞரானார்; கணிதத்தில் வல்லமை பெற்றார்; பெயர்பெற்ற இறையியலாளரானார்; இவர் இலையன் முரண்புதிரிலும் தீர்விலிகள் கோட்பாடுகளிலும் புலமைபெற்று, சிறந்த அளவையியலாளர் ஆனார்.
இவர் அடுத்து நிதிநல்கை பெற்ரு ஆக்சுபோர்டு மெர்ட்டான் கல்லூரியில் சேர்ந்தார். இவர் பிறகு அங்கே இறையியல் பேராசிரியராகவும் பல்கலைக்கழக வேந்தராகவும் உயர்வு பெற்றார். இவர் தனது சமகாலத்து வில்லியம் ஒக்காம் போல, பேரறறிவாண்மை இயக்கத்தில் ஆக்சுபோர்டிலலினைந்தார். இந்த இயக்கம் 1240 களிலேயே தோற்றுவிக்கப்பட்டதாகும்.
இவர் இயல்பான சமயஞ்சாரா பாதிரியாராக இருந்தார்; அப்போது அவரால் விடுதலையாக அறிவுலகத்தில் இயங்க முடிந்துள்ளது. ஆனால், மறைப்பரப்பும் ஆயர்களுக்கு கிடைக்கும் செல்வாக்கும் புகழும் கிடைக்காததால், மாறாக அரசு புரவலரை நாடினார்.
அறிவியல்
[தொகு]பாரீசு பல்கலைக்கழக அறிவாண்மையை எதிர்கொள்ள, மெர்ட்டன் கல்லூரி அறிவாளர் குழுவொன்றை இயற்கை அறிவியல், முதன்மையாக,வானியல், கணிதவியல் புலங்களில் வல்லமை பெறவைக்க முயன்றது. பிராதுவார்தைன் ஆக்சுபோர்டு கணிப்பாளர்களில் ஒருவராக, இயக்கவியலில் வில்லியம் கேய்த்தெசுபரி, இரிச்சர்டு சுவைன்சுகுடு, ஜான் தம்பிள்ட்டன் ஆகியோரோடு இணைந்து ஆய்வு செய்தார்ராக்சுபோர்டு கணிப்பாளர்கள் இயங்கியலை இயக்கவோட்ட்டவியலில் இருந்து வேறுபடுத்தினர். இவர்கள் இயக்கவோட்டவியலில் கணநேர விரைவுக்கும்(திசைவேகத்துக்கும்) கவனம் செலுத்தி, ஆய்ந்தனர். இதனால், இவர்கள் நிரல் வேக தேற்றத்தை ம்தன்முதலாக உருவாக்கினர்: இத்தேற்றம், மாறாத விரைவில் செல்லும் பொருள், முடுக்கிய பொருளானது, தன் இறுதி விரைவுபோல அரைமடங்கு விரைவில் செல்லும்போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கடப்பதற்குச் சமமான தொலைவை அடையும் என விளக்குகிறது. இந்தத் தேற்றத்துக்கு இவர்கள் செயல்விளக்கமும் தந்தனர். இது விடுபட்டு(கட்டற்று) வீழும் பொருள்களின் விதியை கலீலியோவுக்கு முன்னரே உருவாக்கியது.
கணிதவியல் இயற்பியலாளரும் அறிவியல் வரலாற்றாசிரியருமான கிளிப்போர்டு துரூசுதெல் பின்வருமாறு எழுதுகஈறார்:[4]
இப்போது வெளியிடப்படும் தகவல் வாயில்களும் இயற்பியல் பாடநூல்களும், மறுப்ப்பே இல்லாமல், சீராக முடுக்கமுறும் இயக்கங்களின் இயக்கவோட்ட இயல்புகள் இன்னமும் கலீலியோஉருவாக்கியதாக நிறுவுதலைக் காண்கிறோம். இவை உண்மையிலேயே மெர்ட்டன் கல்லூரி அறிஞர்களால் கண்டுபிடித்து நிறுவப்பட்டவை.... கொள்கையளவில் மேற்கத்திய அறிவியலை ஆண்டுகொண்டிருந்த கிரேக்க இயற்பியல் தன்மைகள், குறைந்தது இயக்கவியலைப் பொறுத்தவரையில் எண்ணளவிலாவது பதிலீடு செய்யப்பட்டுள்ளன. ந்த ஆய்வு வேகமாக பிரான்சு, இத்தாலி, பிற ஐரோப்பியப் பகுதிகளுக்கும் பரவியுள்ளன. உடனடியாக, ஜியோவன்னி தி காசாலியும் நிக்கோல் ஓரிசுமேவும், மேலைச் சிந்தனையின் இரண்டாம் பான்மையான புற உலகச் சார்புகளை வடிவியல் வரைவுகளால் உருவகிக்கும் முறையைக் கண்டறிந்துள்ளனர் ...
மேலும்,போயர் " பிராதுவார்தைனின் ஆய்வுகளில் முசுலிம் தகவல் வாயில்களின் தொடர்பால் முக்கோணவியலின் சில அடிப்படைகள் உள்ளன" எனக் கூறுகிறார்.[5] இருந்தாலும், "பிராதுவார்தைனும் அவரது சமகால ஆக்சுபோர்டு ஆய்வாளர்களும் புத்தறிவியலுக்குப் பெறுமதி ஏதும் அளிக்கவில்லை" (Cantor 2001, p. 122). இவர் குறிப்பாக, அல்-கிண்டியால் தாக்கம் உற்றுள்ளார். என்றாலும், இத்தாக்கம் நேரடியானதா அல்லது மறைமுகமானதா என்பது தெளிவாகவில்லை. இருந்தபோதும், பிராதுவார்தைனின் பணி அல்-கின்டியின் ஆய்வோடு பல ஒப்புமைகளை கொண்டுள்ளது. இது அல்-கிண்டியின், Quia primos எனும் நூல்வழியா (அல்லது De Gradibus எனும் நூல்வழியா) என்பதும் தெளிவாகவில்லை.[6] அப்போது இல்லாத கணிதமுறை கலனக்கணிதமே.
அல்-கிண்டியின் தாக்கம்
[தொகு]இவர் குறிப்பாக, அல்-கிண்டியால் தாக்கம் உற்றுள்ளார். என்றாலும், இத்தாக்கம் நேரடியானதா அல்லது மறைமுகமானதா என்பது தெளிவாகவில்லை.[7] பிராதுவார்தைனுக்கு கிரிமோனா நகர ஜெரார்டு மொழிபெயர்த்த Quia primos எனும் நூலோ (அல்லது De Gradibus எனும் நூலோ) கிடைத்திருக்கலாம். ஆனால், உரோஜர் பென்ரோசு மட்டுமே இந்நூலோடு நேரடியாகத் தொடர்புள்ள ஐரோப்பிய மெய்யியலாளர் ஆவார், என்றாலும் , இத்தொடர்பும் வில்லனோவா நகர ஆர்னால்டு அளவுக்கல்ல எனலாம்.[8] இருந்தபோதும், பிராதுவார்தனின் பணி அல்-கின்டியின் ஆய்வோடு பல ஒப்புமைகளை கொண்டுள்ளது.[9]
நினைவாற்றல் கலை
[தொகு]பிராதுவார்தைன், நினைவாற்றல் கலையை நடப்பில் பயன்படுத்துவதோடு அதைப் பரப்பவும் செய்கிறார். இந்த நினைவாற்றல் கலை, நினைவுப் பதிவுகளை ஒருங்கிணைத்து, நினைவுகூர்தலை மேம்படுத்திடப் பயன்படும் உளப்பதிலீட்டு நெறிகளையும் நுட்பங்களையும் இணைக்கும் தொடராக அமைகிறது. இத்தொடர் எண்னக்கருக்களைப் புதுவதாகப் புனையவும் அவற்றை இணைத்திடவும் உதவுகிறது. இவரது De Memoria Artificiali (c. 1335) எனும் இலத்தீன நூல், சமகால நடப்பு நினைவாற்றல் பயிற்சியைப் பற்றி விவாதிக்கிறது.[10][11]
மேரி சாருதெர்சு மொழிபெயர்த்த பிராதுவார்தைனின் பயிற்சியால் நினைவாற்றலை அடைதல் பற்றி(On Acquiring a Trained Memory) எனும் நூல், அதை மொழிபெயர்த்தவரே கூறுவதுபோல, சிசெரோவின் நினைவாற்றல் கலை நூலை ஒத்து அமைகிறது.[12] மேலும், மேரி, " குறிபிட்ட நினைவை நினைவுகூரவும் பொருத்தவும் பல்வேறு நுட்பங்களின் விவரிப்புக்காக பிராத்வார்தைனின் கலை குறிப்பிடத் தகுந்த தனித்தன்மை கொண்டதாகும். இந்த விவரிப்பு, தன் உள்ளொழுங்கால் தன் உள்ளடக்கத்தை மட்டுமன்றி, அதன் கூறுகளின் உறவையும் நினைவுகூரவல்லதாக உள்ளது. இந்த நினைவுகூரலுக்கு இக்கலை பல படங்களையும் ஒழுங்கமைத்த காட்சிகளையும் ஒன்றாக இணைத்து நிரல்பட காட்ட, சீரிய மனப்படிமக் காட்சிகளை வண்ணமயமாகவும் விரிவான வரைபட நேர்த்தியுடனும் பயன்படுத்துகிறது " எனக் கூறுகிறார். [13] மேலும் அவர், இது சிசெரோ கவிதைமொழியில் பொருளையும் சொல்லையும் நினைவுக் கருவிகளால் விவரிக்கும் முனைப்பான மனப்படிமக்காட்சியை ஒத்துள்ளது என அறிவிக்கிறார். ஆனால், பிராதுவார்தைனின் மனப்படிமக் காட்சி இடைக்காலத்தைச் சார்ந்திருப்பதால் தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது என்கிறார்.[14]
பெறுமதி
[தொகு]பிராதுவார்தைனின் insolubilia பற்றிய கோட்பாடுகளும் இலையர் முரண்புதிரும் ழீன் புரிதான்மீது பெருந்தாக்கத்தை விளைவித்தன.[15] இவரது இயக்கவோட்டவியல்( kinematics) ஆய்வும் ழீன் புரிதான்பால் அரிய தாக்கத்தை விளைவித்துள்ளது.[16] மரபைப் புறந்தள்ளாத இவர், மார்ட்டின் உலூதருக்கும் ஜான் கால்வினுக்கும் முன்பே சீர்திருத இறையியல் கண்ணோட்டத்தைத் தழுவியுள்ளார்.[17]
இவரது De Causa Dei எனும் இலத்தின நூல் ஜான் வைக்கிளிப்பேவின் அருள், கடவுள்(முன்தீர்வு(முன்எழுதிய)விதி) சார்ந்த இறையியல் போக்கிற்கு வித்திட்டுள்ளது.[18]
பணிகள்
[தொகு]- Preclarissimum mathematicarum opus (in லத்தின்). Valencia: Jeronimo Amiquet. 1503.
இலத்தீன நூல்களும் ஆங்கில மொழிபெயர்ப்புகளும்
[தொகு]- Insolubilia (Insolubles), Latin text and English translation by Stephen Read, Leuven, Peeters Editions (Dallas Medieval Texts and Translations, 10), 2010.
- De insolubilibus (On Insolubles), edited by Marie Louise Roure in 'La problématique des propositions insolubles du XIIIe siècle et du début du XIVe, suivie de l'édition des traités de William Shyreswood, Walter Burleigh et Thomas Bradwardine', Archives d'histoire doctrinale et littéraire du moyen Age 37, 1970: 205–326.
- De incipit et desinit (On 'It Begins' and 'It Ceases'), ed. Lauge O. Nielsen, Cahiers de l'Institut du moyen Age grec et Latin 42, 1982: 1–83.
- Geometria speculativa (Speculative Geometry), Latin text and English translation with an introduction and a commentary by George Molland, Stuttgart: Steiner Verlag, 1989.
- Arithmetica speculativa (Speculative Arithmetic) Parisiis: G. Marchant, 1495
- De proportionibus velocitatum in motibus (On the Ratios of Velocities in Motions) Latin text and English translation by H. Lamar Crosby, Jr. in: 'Thomas of Bradwardine: His Tractatus de Proportionibus: Its Significance for the Development of Mathematical Physics', Madison, WI: University of Wisconsin Press, 1955.
- De continuo (On the Continuum), edited by John Emery Murdoch in 'Geometry and the Continuum in the Fourteenth Century: A Philosophical Analysis of Thomas Bradwardine's Tractatus de continuo', PhD thesis, University of Wisconsin, 1957.
- De futuris contingentibus (On Future Contingents): edited by Genest, Jean-François (1979). "Le De futuris contingentibus de Thomas Bradwardine". Recherches Augustiniennes et Patristiques 14: 249–336. doi:10.1484/J.RA.5.102303. பன்னாட்டுத் தர தொடர் எண்:0484-0887.''De futuris contingentibus'' de Thomas Bradwardine&rft.jtitle=Recherches Augustiniennes et Patristiques&rft.aulast=Genest&rft.aufirst=Jean-François&rft.au=Genest, Jean-François&rft.date=1979&rft.volume=14&rft.pages=249–336&rft_id=info:doi/10.1484/J.RA.5.102303&rft.issn=0484-0887&rfr_id=info:sid/en.wikipedia.org:தாமசு_பார்துவார்தைன்">
- De causa Dei contra Pelagium et de virtute causarum ad suos Mertonenses, libri tres (In Defense of God Against the Pelagians and on the Power of Causes, in three books), edited by Henry Savile, London: 1618; reprinted at Frankfurt: Minerva, 1964.
- Commentary on the Sentences of Peter Lombard: some questions found in a manuscript at the Bibliothèque Nationale de Paris are published in: J.-F. Genest and Katherine Tachau, 'La lecture de Thomas Bradwardine sur les Sentences', Archives d'histoire doctrinale et littéraire du Moyen Age 57, 1990: 301–6.
- De memoria artificiali adquirenda (On Acquiring a Trained Memory), ed. Mary Carruthers, Journal of Medieval Latin, 2, (1992): 25–43; translated in Carruthers M., The Book of Memory: A Study of Memory in Medieval Culture, New York: Cambridge Univ. Press. 1990, pp. 281–8; Carruthers M. and Ziolkowski J., The Medieval Craft of Memory, Philadelphia: Univ. of Pennsylvania Press, 2002, pp. 205–14.
- Gillmeister H. (ed.), "An intriguing fourteenth-century document: Thomas Bradwardine's De arte memorativa". Archiv für das Studium der neueren Sprachen und Literaturen 220, 1983, pp. 111–4.
- Green-Pedersen N.-J. (ed.), "Bradwardine (?) on Ockham’s doctrine of consequences: an edition". Cahiers de l’Institute de moyen age grec et latin, 42, 1982, pp. 85–150.
- Lamar Crosby H. (ed.), Thomas of Bradwardine: his Tractatus de Proportionibus: its significance for the development of mathematical physics. Madison, University of Wisconsin Press, 1955.
சான்றுகள்
[தொகு]- ↑ Murdoch, John (1970). Dictionary of Scientific biography. Charles Scribner's Sons. pp. 390–397. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780684101149.
- ↑ Bradwardine, Thomas (1344). De Causa Dei.
- ↑ Murdoch, John (1970). Dictionary of Scientific biography. Charles Scribner's Sons. pp. 390–397. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780684101149.
- ↑ Clifford Truesdell, Essays in The History of Mechanics, (Springer-Verlag, New York, 1968), p. 30
- ↑ Boyer, Carl B. (1991). A History of Mathematics. Uta C. Merzbach (2nd ed. [rev.] ed.). New York: Wiley. p. 274. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-54397-7. இணையக் கணினி நூலக மைய எண் 23823042.
- ↑ McVaugh, Michael (1967). "Arnald of Villanova and Bradwardine's Law". Isis 58 (1): 56–64. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-1753. https://www.jstor.org/stable/228386.
- ↑ McVaugh, Michael (1967). "Arnald of Villanova and Bradwardine's Law". Isis 58 (1): 56–64. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-1753. https://www.jstor.org/stable/228386.
- ↑ McVaugh, Michael (1967). "Arnald of Villanova and Bradwardine's Law". Isis 58 (1): 56–64. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-1753. https://www.jstor.org/stable/228386.
- ↑ McVaugh, Michael (1967). "Arnald of Villanova and Bradwardine's Law". Isis 58 (1): 56–64. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-1753. https://www.jstor.org/stable/228386.
- ↑ Mary Carruthers, The Book of Memory, Cambridge, 1990, p. 130
- ↑ Edith Wilks Dolnikowski, "De Memoria Artificiali: Time and Memory in the Thought of Thomas Bradwardine." In: Constructions of Time in the Late Middle Ages. Ed. Carol Poster and Richard Utz. Evanston, IL: Northwestern University Press, 1997. Pp. 197–203.
- ↑ Carruthers, Mary J. (2002). The Medieval Craft of Memory: An Anthology of Texts and Pictures. Jan M. Ziolkowski. Philadelphia, Pa.: University of Pennsylvania Press. pp. 205–214. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8122-3676-9. இணையக் கணினி நூலக மைய எண் 49627682.
- ↑ Carruthers, Mary J. (2002). The Medieval Craft of Memory: An Anthology of Texts and Pictures. Jan M. Ziolkowski. Philadelphia, Pa.: University of Pennsylvania Press. pp. 205–214. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8122-3676-9. இணையக் கணினி நூலக மைய எண் 49627682.
- ↑ Carruthers, Mary J. (2002). The Medieval Craft of Memory: An Anthology of Texts and Pictures. Jan M. Ziolkowski. Philadelphia, Pa.: University of Pennsylvania Press. pp. 205–214. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8122-3676-9. இணையக் கணினி நூலக மைய எண் 49627682. Archived from the original on 2022-03-12. பார்க்கப்பட்ட நாள் 2022-12-01.
- ↑ Medieval work on the liar paradox has been most recently studied by Paul Spade and Stephen Read (for which see Spade's entry, "Insolubles," in the Stanford Encyclopedia of Philosophy, which offers a brief exposition).
- ↑ Marshall Clagett, The Science of Mechanics in the Middle Ages. Madison. 1959. p. 331.
- ↑ dePrater, William A. (2015-03-25). God Hovered Over the Waters: The Emergence of the Protestant Reformation (in ஆங்கிலம்). Wipf and Stock Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4982-0454-5.
(Chapter name: Forerunners of the Protestant reformation) Bradwardine in his study of Augustinian theology came to an understanding of the doctrine of predestination as a positive affirmation of Gd's benevolent grace unto us.
- ↑ Thomas F. Glick; Steven Livesey; Faith Wallis (27 January 2014). Medieval Science, Technology and Medicine. Routledge. p. 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1135459321. பார்க்கப்பட்ட நாள் 20 March 2014.
மேற்கோள்கள்
[தொகு]- A History of Mathematics (pp. 288, 302), Carl O. Boyer, Princeton University Press, Princeton, 1984.
- The Science of Mechanics in the Middle Ages, Marshall Claggett, University of Wisconsin Press, Madison, 1960.
- Tractatus de Proportionibus, Its Significance for the Development of Mathematical Physics, H. L. Crosby, University of Wisconsin Press, Madison, 1955.
- Fryde, E. B.; Greenway, D. E.; Porter, S.; Roy, I. (1996). Handbook of British Chronology (Third revised ed.). Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-56350-5.
- Essays in The History of Mechanics, Clifford Truesdell, Springer-Verlag, New York, 1968, QC122.T7.
- See Quétif–Échard, Script. Praedic. (1719), i. 744
- W. F. Hook, Lives of the Archbishops of Canterbury, vol. iv.
- In the Wake of the Plague, Norman F. Cantor, Simon & Schuster, 2001. "Death comes to the Archbishop": a chapter sets Bradwardine's political and intellectual career in his Oxford milieu, in the context of the Black Death.
- This article incorporates text from a publication now in the public domain: John William Cousin (1910). A Short Biographical Dictionary of English Literature. London: J. M. Dent & Sons. Wikisource
மேலும் படிக்க
[தொகு]- Heiko Oberman, Archbishop Thomas Bradwardine, a Fourteenth Century Augustinian: A Study of His Theology in Its Historical Perspective, Utrecht: Kemink & Zoon, 1957.
- Gordon Leff, Bradwardine and the Pelagians: A Study of His "De Causa Dei" and Its Opponents, Cambridge, England: Cambridge University Press, 1957.
- Read, Stephen, "Paradox, Closure and Indirect Speech Reports", Logica Universalis, 2015. எஆசு:10.1007/s11787-014-0115-3
வெளி இணைப்புகள்
[தொகு]- Thomas Bradwardine at The MacTutor History of Mathematics archive
- Thomas Bradwardine. Geometria speculativa at Somni