உள்ளடக்கத்துக்குச் செல்

தாக்லாக் மாகாணம்

ஆள்கூறுகள்: 12°40′N 108°3′E / 12.667°N 108.050°E / 12.667; 108.050
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாக்லாக் மாகாணம்
Đắk Lắk Province
தின்தாக்லாக்
மூநோங் மக்கள் வாழும் ஊராகிய பூவோன்யுங் அருகில் உள்ள இலாக் ஏரி
மூநோங் மக்கள் வாழும் ஊராகிய பூவோன்யுங் அருகில் உள்ள இலாக் ஏரி
குறிக்கோளுரை: தியேன் நாங்வா திரியேன் வோங்
ஆள்கூறுகள்: 12°40′N 108°3′E / 12.667°N 108.050°E / 12.667; 108.050
நாடு வியட்நாம்
வியட்நாம் வட்டாரம்நடுவண் மேட்டுச் சமவெளி
தலைநகர்புவோன்மா துவோத்
பரப்பளவு
 • மொத்தம்13,125.4 km2 (5,067.7 sq mi)
மக்கள்தொகை
 (2014)[1]
 • மொத்தம்18,33,300
 • அடர்த்தி140/km2 (360/sq mi)
Demographics
 • வியட்நாம் இனக்குழுக்கள்வியட்நாமியர்கள், ஏதே மக்கள், நூங் மக்கள், தாய் மக்கள்
நேர வலயம்ஒசநே 7 (இந்தோசீனா நேரவலயம்)
வியட்நாம் தொலைபேசி பகுதிக் குறிமுறைகள்262 (17 ஜூன்June 2017 இல் இருந்து
500 ( 16 ஜூலை 2017 வரை)
ஐஎசுஓ 3166 குறியீடுVN-33
இணையதளம்www.daklak.gov.vn

தாக்லாக் (Đắk Lắk) என்பது வியட்நாமின் அறுபத்து மூன்று மாகாணங்களில் ஒன்று ஆகும். இதன் பெயர் தார்லாக் என சிலவேளைகளில் வழங்கப்பட்டாலும் அலுவல்முறைப்படி இது தாக்லாக் என்றே அழைக்கப்படுகிறது. இது வியட்நாமின் ஒன்பது வட்டாரங்களில் ஒன்றாகிய நடுவண் மேட்டுச் சமவெளி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இங்கு, வியட்நாமியரோடு வியட்நாமியர் அல்லாத பல சிறுபான்மை இனக்குழுவினர் வாழ்கின்றனர்.

வரலாறு

[தொகு]

இப்போது தாக்லாக் என அழைக்கப்படும் பகுதி, முன்பு சாம்பா அரசு ஆட்சியில் இருந்தது. 15 ஆம் நூற்றாண்டில் வியட்நாம் சாம்பா அரசைக் கைப்பற்றி வியட்நாமோடு இணைத்ததும், இது தளர்வான வியட்நாமிய ஆட்சிக்கு வந்தது. பின்னர், இங்கு 1540 இல் வியட்நாம் ஆட்சியால் பூயிதா கான் எனும் நிலக்கிழார் ஆட்சியாளராக அமர்த்தப்பட்டார். இவர் இப்பகுதியில் வியட்நாம் இனக்குழு மக்களைக் கொண்டு வந்து குடியேற்றினார்; எனவே, இப்பகுதி வியட்நாமின் முழுமையான கட்டுபாட்டுக்குக் வந்தது. மேற்கில் இருந்து வந்து முற்றுகையிடும் பகைவரை எதிர்க்கவும் அங்கே வாழும் பிற இனக்குழு மக்களின் கலகத்தை அடக்கவும் அங்கே வியட்நாம் அரசு படைத்தள முகாம்கள் நிறுவப்பட்டன. பின்னர், இப்பகுதி பிரெஞ்சுக் குடியேற்றம் ஆகிய இந்தோசீனாவின் கட்டுபாட்டுக்கு வந்ததும், பிரெஞ்சு ஆட்சி அங்கே பல தோட்டங்களை அமைத்தது. என்றாலும், தாக்லாக்கில் பிரெஞ்சு ஆட்சிக்கு வலிவான எதிர்ப்பு, பல்வேறு பழங்குடி இனக்குழுக்களிடம் இருந்து கிளம்பியது. அவர்கள் பல கலகங்களைச் செய்தவண்ணம் இருந்தனர். இதில் 23 ஆண்டுகளாக அங்கே தொடர்ந்து நித்திராங்லோங் எனும் மூவோங் பழங்குடி வீர்ரின் பரப்புரை மிகச் சிறப்பானதும் குறிப்பிடத் தக்கதும் ஆகும்.பின்னர், தாக்லாக் தென்வியட்நாமின் பகுதியாக இணைக்கப்பட்டது. தாக்லாக் மாகாணம் வியட்நாம் போரில் கடுமையாக போரிட்டது.

அண்மைவரை, தாக்நோங் தாக்லாக்கின் பகுதியக இருந்தது. இப்போது தாக்நோங் தனி மாகாணமாகப் பிரிக்கப் பட்டுள்ளது.

முதன்மை நிகழ்ச்சிகளின் காலநிரல்

  • 19 ஆம் நூற்றாண்டு முடிவில், தாக்லாக் இலாவோசின் கொன் தும் பகுதியாக இருந்தது.
  • 1904 நவம்பர் 22 1904 இல் தாக்லாக் மாகாணம் உருவாக்கப்பட்டு ஆன்னம் ஆட்சியின் கீழ் இருந்தது.
  • 1913 பிப்ரவ்ரி 9 இல் தாக்லாக் மூளவும் கொன் தும் பகுதியானது.
  • 1923 ஜூலை 2 இல் புது தாக்லாக் உருவாக்கப்பட்டது. இதில் சில ஊற்கள் மட்டுமே இருந்தன.
  • 1931 இல் இதில் ஐந்து மாகாணங்கள் இருந்தன: பான்மே துவோத், புவான் கோ, தாக்சோங், இலாக், மிதிராக்
  • 1958 ஜூலை 2 இல் தாக்லாக் (தார்லாக்) பகுதியில் புவான்மே துவோத், இலாக் தியேன், மிதிராக், தாக்சோங், புவான் கோ ஆகியன இருந்தன.
  • 1959 ஜனவரி 23 இல் குவாங் துக் மாகாணம் உருவாக்கப்பட்டது. தாக்சோங் பிரிக்கப்பட்டது. மிதிரக்கின் பகுதி காங்கோவா மாகாணத்தில் சேர்க்கப்பட்டது.
  • 1963 திசம்பர் 20 இல் பூவோசு திராக்கைத் தலைநகராகக் கொண்டு பூவோசு மாவட்டம் உருவாக்கப்பட்டது. பீன்னர், தலைநகர் துவான் கியேயுக்கு 1965 செப்டம்பர் 1 இல் மாற்றப்பட்டது.
  • 1976 இல் புது தாக்லாக் தாக்லாக், குவாங்துக் இரண்டின் சில பகுதிகளைச் சேர்த்து உருவாக்கப்பட்டது.
  • 2003 நவம்பர் 26 இல், தாக்லாக் தாக்லாக், தாகநோங் எனும் இரு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.

புவிப்பரப்பியல்

[தொகு]

தாக்லாக் மாகாணம், தாக்லாக் மேட்டுநிலச் சமவெளியில் கடல்மட்டத்தில் இருந்து அறுநூறு மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

தாக்லாக் மாகாணத்தில் புவோன்மா துவோத்துக்கு 60 கிமீ தெற்கே இலாக் ஏரி அமைந்துள்ளது. இங்கு முந்தைய பேரரசராகிய பாவோதாயின் உறைவிடம் ஏரியைப் பார்த்தபடி அமைந்து உள்ளது. பேரரசரின் உறைவிடம் இப்போது உணவகமாக மற்றப்பட்டுள்ளதுl. இதைச் சுற்றிலும் யுன் மக்கள் வாழும் யுன் எனும் ஊர் உள்ளது. இவர்கள் தனிவகைப்பட்ட மீன்பிடித்தல் முறையைக் கடைபிடிக்கின்றனர். இவர்கள் இம்முறையில், ஒரு சீருந்து மின்கல அடுக்கிற்கு பொன்மத் தண்டு ஒன்றை இணைத்து நீரில் அத்தண்டை ஓடவிட்டு மீன்களுக்கு அதிர்ச்சி உண்டாக்கி அவற்றைத் திரட்டி, ஊரருகில் அமையும் தனியான குளத்தில் பிடித்து விட்டுவைப்பர். பின்னர், தேவைப்படும்போது அவற்றைப் பயன்படுத்துவர்.

புவிசார் இருப்பும் எல்லைகளும்

[தொகு]

தாக்லாக் மாகாணத்தின் வடக்கில் கியாலை மாகாணம் அமைகிறது; வடகிழக்கில் பூயேன் மாகாணம் அமைகிறது; கிழக்கில் காங்கோவா மாகாணம் அமைகிறது; தெற்கில் இலாம் தோங் மாகாணம் அமைகிறது; தென்மேற்கில் தாங்நாங் மாகாணம் மேற்கில் கம்போடியாவைச் சார்ந்த மண்டோல்கிரி மாகாணமும்  கம்போடியா அமைந்துள்ளது.

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]

தாக்லாக் 15 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

  • 13 மாவட்டங்கள்:
    • புவோந்தோன் மாவட்டம்
    • சூகுயின் மாவட்டம்
    • சூமிகார் மாவட்டம்
    • இயாக்கிளியோ மாவட்டம்
    • இயாக்கார் மாவட்டம்
    • இயாசூப் மாவட்டம்
    • குறோங்கானா மாவட்டம்
    • குறோங்போங் மாவட்டம்
    • குறோங்புக் மாவட்டம்
    • குறோங்நாங் மாவட்டம்
    • குறோங்பாக் மாவட்டம்
    • இலாக் மாவட்டம்
    • மிதிராக் மாவட்டம்
  • 1 மாவட்ட மட்ட நகரியம்:
    • புவோன் கோ
  • 1 மாகாண மாநகரம்:
    • புவோன்மா துவோத் (தலைநகர்)

இவை மேலும் 12 குமுக மட்ட நகரியங்களாகவும் (அல்லதுசிறுநகரங்களாகவும்), 152 குமுகங்களாகவும், 20 சிறகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

பொருளியல்

[தொகு]

இப்பகுதியின் பொருள்வளத்தில் காஃபி, பழங்கள், தொய்வத் தொழில்கள் பெரும்பங்கு ஆற்றுகின்றன. அண்மையில், இப்ப்குதி நீர்வளம் வாய்ப்பு மிக்குள்ளதால் புனல்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.யுன் மக்கள் சுற்றுலா வணிகத்தில் வெற்றியுடன் ஈடுபடுகின்றனர். மேலும், யானையேற்றத்தை ஊரிலும் ஏரியிலும் நடாத்திப் பணம் ஈட்டுகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Statistical Handbook of Vietnam 2014, General Statistics Office Of Vietnam

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாக்லாக்_மாகாணம்&oldid=3358816" இலிருந்து மீள்விக்கப்பட்டது