உள்ளடக்கத்துக்குச் செல்

தலிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செப்பாடிக் வழக்கத்தின்படி ஒரு வெள்ளை தலிட் செப்பாடிக் வழக்கத்தின்படி ஒரு வெள்ளை தலிட்
செப்பாடிக் வழக்கத்தின்படி ஒரு வெள்ளை தலிட்
அஸ்கெனாசி வழக்கின்படி கருப்புக் கோடுகளுடன் ஒரு வெள்ளை தலிட்

தலிட் அல்லது டலிட் (tallit, எபிரேயம்: טַלִּית) (டலெட்[1] என செப்பாடிக் எபியேம் மற்றும் லடினோ) (தலிஸ்,[2] என அஸ்கெனாசி எபிரேயத்திலும் இத்திய மொழியிலும்) பன்மை. தலிடொட் (தலீசிம்,[3] தலிசிம்,[4] அஸ்கெனாசியிலும் இத்திய மொழியிலும்) என்பது யூதர்கள் வேண்டுதற் போர்வையாகும். தலிட் காலையில் வேண்டுதல் செய்யும்போதும், யோம் கிப்பூரின் போதும் உடைகளுக்கு மேலாக அணியப்படும்[5]. தலிட் சிறப்பான நூலினால் நூர்க்கப்பட்டு டிஸிசிட் எனப்படும் தொங்களினால் முடிச்சு போடப்பட்டு, தலிட்டின் நான்கு மூலைகளிலும் இணைக்கப்பட்டிருக்கும். அநேகமான பாரம்பரிய தலிட்டுகள் கம்பளியினால் உருவாக்கப்பட்டிருக்கும். இவை சிறு வயதில் பிள்ளைகள் அவர்கள் சட்டங்களை கடைப்பிடிக்கும் நிலை வந்த விழாவில் முதன் முதலில் அணிந்து கொள்வார்கள். பழமைக்கோட்பாடு சார்ந்த யூதம் மற்றும் அஸ்கெனாசி வட்டாரத்தில், வரதட்சணையின் ஒரு பகுதியாக மணமகனுக்கு தலிட் வழங்கப்படுவது ஓர் வழக்காகும்.

குறிப்புகள்

[தொகு]
  1. Jacob Rader Marcus. This I Believe: Documents of American Jewish Life. p. 269. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87668-782-6.
  2. Jennifer Heath (2008). The Veil: Women Writers on its History, Lore, and Politics. University of California Press. p. 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-25040-0.
  3. Ilana M. Blumberg (2009). Houses of Study: A Jewish Woman Among Books. University of Nebraska Press. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8032-2449-4.
  4. Joseph Leftwich (1974). An Anthology of Modern Yiddish Literature. Walter de Gruyter. p. 338. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-279-3001-5.
  5. Rabbi Daniel Kohn. "My Jewish Learning — Prayer Services". Archived from the original on செப்டம்பர் 22, 2008. பார்க்கப்பட்ட நாள் September 28, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலிட்&oldid=3766026" இலிருந்து மீள்விக்கப்பட்டது