டைகுளோரோ அசிட்டைல் குளோரைடு
இனங்காட்டிகள் | |
---|---|
79-36-7 | |
Beilstein Reference
|
1209426 |
ChEBI | CHEBI:34688 |
ChEMBL | ChEMBL449486 |
ChemSpider | 21106100 |
EC number | 201-199-9 |
Gmelin Reference
|
430743 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C14867 |
பப்கெம் | 6593 |
வே.ந.வி.ப எண் | AO6650000 |
| |
UNII | 52O60099FY |
UN number | 1765 |
பண்புகள் | |
C2HCl3O | |
வாய்ப்பாட்டு எடை | 147.38 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற புகையும் நீர்மம் |
அடர்த்தி | 1.5315 கி/செ.மீ3 |
கொதிநிலை | 107 °C (225 °F; 380 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டைகுளோரோ அசிட்டைல் குளோரைடு (Dichloroacetyl chloride) என்பது CHCl2COCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் அசைல் குளோரைடு வகைச் சேர்மமாகும். டைகுளோரோ அசிட்டிக் அமிலத்தினுடைய அசைல் குளோரைடு டைகுளோரோ அசிட்டைல் குளோரைடு எனக் கருதப்படுகிறது [1]. நிறமற்ற நீர்மமான இச்சேர்மத்தை அசைலேற்ற வினைகளில் பயன்படுத்துகிறார்கள் [2][3].
தயாரிப்பு
[தொகு]குறிப்பிடத்தக்க சில அமிலக் குளோரைடுகளைப் போல அல்லாமல் டைகுளோரோ அசிட்டைல் குளோரைடு அமிலங்களில் இருந்து தயாரிக்கப்படுவதில்லை. 1,1,2-டிரைகுளோரோயீத்தேனை ஆக்சிசனேற்றுதல், பென்டாகுளோரோயீத்தேனை நீராற்பகுத்தல், குளோரோஃபார்மை கார்பாக்சிலேற்றம் செய்தல் போன்ற தொழிற்துறை முறை தயாரிப்பு வழிமுறைகளும் டைகுளோரோ அசிட்டைல் குளோரைடு தயாரிக்கப் பயன்படுகின்றன :[4].
- CHCl2CH2Cl O2 → CHCl2COCl H2O
- CHCl2CCl3 H2O → CHCl2COCl 2 HCl
- CHCl3 CO2 → CHCl2COCl 1/2 O2
பயன்கள்
[தொகு]டைகுளோரோ அசிட்டைல் குளோரைடை நீராற்பகுப்புக்கு உட்படுத்தினால் டைகுளோரோ அசிட்டிக் அமிலம் உருவாகிறது. குளோராம்பெனிக்கால் உள்ளிட்ட நுண்ணுயிர் கொல்லிகள் தயாரிப்பதற்கு உதவும் முன்னோடிகளில் இதுவும் ஒன்றாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pubchem". Pubchem. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
- ↑ Richard P. Pohanish; Stanley A. Greene (25 August 2009). Wiley Guide to Chemical Incompatibilities. John Wiley & Sons. pp. 327–8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-52330-8.
- ↑ Science of Synthesis: Houben-Weyl Methods of Molecular Transformations Vol. 26: Ketones. Georg Thieme Verlag. 14 May 2014. pp. 759–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-13-172011-5.
- ↑ Koenig, G.; Lohmar, E.; Rupprich, N. (2005), "Chloroacetic Acids", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a06_537
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link)