டெஸ்ஸி தாமஸ்
டெஸ்ஸி தாமஸ் [Missile Woman] | |
---|---|
பிறப்பு | 1963 ஆலப்புழை, கேரளா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | B.Tech.ஏவுகணைத் தொழில்நுட்பம், திருச்சூர் அரசுப் பொறியியல் கல்லூரி, முதுகலைப்பட்டம் (M.Tech) |
பணி | அறிவியலாளர், இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
செயற்பாட்டுக் காலம் | 1988 முதல் இதுவரை |
பட்டம் | அறிவியலாளர் |
வாழ்க்கைத் துணை | சரோஜ்குமார் படேல் |
பிள்ளைகள் | தேஜஸ் |
முனைவர் டெஸ்ஸி தாமஸ் (Tessy Thomas, பிறப்பு: 1963) அல்லது டெசி தாமசு ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் அக்னி-5 ஏவுகணைக்கான திட்டப்பணி இயக்குனர். இந்தியாவில் ஏவுகணை திட்டப்பணி ஒன்றிற்கு தலைமை தாங்கும் முதல் பெண் அறிவியலாளர் என்ற பெருமை கொண்டவர்.[1]
இளமையும் கல்வியும்
[தொகு]டெசி கேரளாவின் ஆலப்புழையைச் சேர்ந்தவர்.[2] திருச்சூரில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் புனேயில் உள்ள படைக்கலன் தொழில்நுட்பக் கழகத்தில் (தற்போது மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான பாதுகாப்பு கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது) வழிப்படுத்திய ஏவுகணைக் கல்வியில் தொழில்நுட்ப முதுகலைப் பட்டம் பெற்றார்.[3]
பணிவாழ்வு
[தொகு]3000 கிமீ வீச்சுள்ள அக்னி-3 ஏவுகணைத் திட்டப்பணியில் டெசி இணை திட்டப்பணி இயக்குநராகப் பணியாற்றினார்.[1] தொடர்ந்து 2011இல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட அக்னி-4 ஏவுகணையின் திட்டப்பணியில் இயக்குநராகப் பணியாற்றினார்.[4] 5000 கிமீ வீச்சுள்ள அக்னி-5 திட்டப்பணிக்கு திட்ட இயக்குநராக 2009ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஐதராபாத்தில் உள்ள மேம்பட்ட அமைப்புகள் ஆய்வகத்திலிருந்து செயலாற்றினார்.[5]. ஏப்ரல் 2012இல் இந்த ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.[6]
தனி வாழ்க்கை
[தொகு]கடற்படையில் ஓர் உயர் இயக்குநரான சரோஜ் பட்டேலை மணந்துள்ள இவருக்கு தேஜஸ் என்ற மகன் உள்ளார்.[3]
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Dr Tessy Thomas is first woman scientist to head missile project". Archived from the original on 2012-04-22. பார்க்கப்பட்ட நாள் 2012-04-20.
- ↑ "Profile of Dr.Tessy Thomas". Archived from the original on 2012-04-22. பார்க்கப்பட்ட நாள் 2012-04-20.
- ↑ 3.0 3.1 "Meet India's “Missile Woman”.". IWSA Newsletter 34 (3). September 2008. http://www.iwsa.net/BullJan09final.pdf. பார்த்த நாள்: 19 April 2012.
- ↑ "'Agni Putri' Tessy Thomas breaks glass ceiling". Archived from the original on 2012-04-19. பார்க்கப்பட்ட நாள் 2012-04-20.
- ↑ Tessy Thomas is Agni V project head
- ↑ Agni-V successfully test-fired