உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெலுத்தோங் (P050)
மலேசிய மக்களவைத் தொகுதி
பினாங்கு
Jelutong (P050)
Federal Constituency in Penang
பினாங்கு மாநிலத்தில்
ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதி

(மஞ்சள் வண்ணத்தில்)
மாவட்டம்வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்
பினாங்கு
வாக்காளர்களின் எண்ணிக்கை94,313 (2023)[1]
வாக்காளர் தொகுதிஜெலுத்தோங் தொகுதி[2]
முக்கிய நகரங்கள்ஜார்ஜ் டவுன், பினாங்கு; ஜெலுத்தோங், பத்து பெரிங்கி, தஞ்சோங் பூங்கா, தஞ்சோங் தொக்கோங், பத்து லஞ்சாங், பாயா தெருபோங்
பரப்பளவு10 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி பாக்காத்தான்
மக்களவை உறுப்பினர்ஆர். எஸ். என். ராயர்
(Sanisvara Nethaji Rayer Rajaji Rayer)
மக்கள் தொகை113,725 (2020) [4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (21.1%)
  சீனர் (63.1%)
  இதர இனத்தவர் (0.9%)

ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bayan Baru; ஆங்கிலம்: Bayan Baru Federal Constituency; சீனம்: 峇央峇鲁国会议席) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் (Northeast Penang District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P050) ஆகும்.[6]

ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

ஜெலுத்தோங்

[தொகு]

பினாங்கு மாநிலத்தில் ஜார்ஜ் டவுன் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர் குடியிருப்புப் பகுதி; முன்பு காலத்தில் இங்கு தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். 1980-ஆம் ஆண்டுகளில் நகரமயமாக்கல், இந்தப் பகுதியைப் பெருநகரப் புறநகர்ப் பகுதியாக மாற்றி அமைத்தது.

ஒரு காலத்தில் இங்கு டயரா கோசதுலாட்டா (Dyera Costulata) எனும் ஒரு வகையான ஜெலுத்தோங் மரங்கள் அதிகமாக இருந்ததாக நம்பப்படுகிறது. அந்த மரnக்களின் நினைவாக ஜெலுத்தோங் என்று இந்த இடத்திற்குப் பெயரிடப்பட்டது. மலேசியாவின் பிரபல வழக்கறிஞரான கர்பால் சிங் (Karpal Singh), ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதியில்தான் முதன்முதலில் தேசிய அரசியல் அரங்கில் காலடி எடுத்து வைத்தார்.

31 சூலை 1978 தொடங்கி 29 நவம்பர் 1999 வரையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவியில் இருந்தார். இவர் 'ஜெலுத்தோங் புலி' (Tiger of Jelutong) எனும் புனைப் பெயரைப் பெற்றார்.[7]

ஜெலுத்தோங் புறநகர்ப் பகுதிகள்

[தொகு]

ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதி

[தொகு]
ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1974-ஆம் ஆண்டில் டத்தோ கிராமட் மக்களவைத் தொகுதியில் இருந்து
ஜெலுத்தோங் தொகுதி உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை P043 1974–1978 ராசையா ராஜசிங்கம்
(Rasiah Rajasingam)
பாரிசான் நேசனல்
(கெராக்கான்)
5-ஆவது மக்களவை 1978–1982 கர்பால் சிங்
(Karpal Singh)
ஜனநாயக செயல் கட்சி
6-ஆவது மக்களவை 1982–1986
7-ஆவது மக்களவை P046 1986–1990
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P049 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004 லீ கா சூன்
(Lee Kah Choon)
பாரிசான் நேசனல்
(கெராக்கான்)
11-ஆவது மக்களவை P050 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013 ஜெப் ஊய்
(Jeff Ooi)
பாக்காத்தான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2022 ஆர். எஸ். என். ராயர்
(Sanisvara Nethaji Rayer)
பாக்காத்தான்
(ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

ஜெலுத்தோங் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
93,989
வாக்களித்தவர்கள்
(Turnout)
71,753 75.23% - 8.67%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
70,707 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
188
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
858
பெரும்பான்மை
(Majority)
38,604 54.60% - 5.36
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
மலேசிய அரசாங்க அதிகாரப்பூர்வ அரசிதழ் (P.U. (B) 613);
[8]சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[9]

ஜெலுத்தோங் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
ஆர். எஸ். என். ராயர்
(Sanisvara Nethaji Rayer Rajaji Rayer)
பாக்காத்தான் 70,707 50,369 71.24% - 8.39%
பல்ஜிட் சிங் சிகிரி சிங்
(Baljit Singh Jigiri Singh)
பெரிக்காத்தான் - 11,765 16.64% 16.64% Increase
லோகநாதன் துரைசாமி
(Loganathan Thoraisamy)
பாரிசான் - 7,387 10.45% - 9.22%
யாக்கோப் நூர்
(Yaacab Noor)
சுயேச்சை - 480 0.68% 0.68% Increase
லிம் குவாட் போ
(Lim Huat Poh)
சபா வாரிசான் - 440 0.49% 0.49% Increase
கோ சுவீ யோங்
(Koh Swe Yong)
மலேசிய மக்கள் கட்சி - 264 0.37 % 0.37 % Increase

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 31 மே 2024.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  7. "Forest Research Institute Malaysia".
  8. {{https://lom.agc.gov.my/ilims/upload/portal/akta/outputp/1753273/PUB609 (2022).pdf}}
  9. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]