ஜார்ஜ் இவானோவ்
ஜார்ஜ் இவானோவ் | |
---|---|
வடக்கு மாசிடோனியாவின் குடியரசு தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 மே 2009 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 மே 1960 வாலன்டோவோ |
தேசியம் | மாசிடோனியர் |
துணைவர் | மஜா இவனோவா |
கையெழுத்து | |
இணையத்தளம் | Official website |
ஜார்ஜ் இவானோவ் (Gjorge Ivanov) மாசிடோனியா (வடக்கு மாசிடோனியா) நாட்டில் உள்ள அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது அந்நாட்டின் குடியரசு தலைவராக 2009 முதல் உள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]ஜார்ஜ் இவனோவ் 2 மே 1960 இல் வாலன்டோவோவில் பிறந்தார்.[1] அவர் தனது சொந்த ஊரில் முதன்மை மற்றும் உயர்நிலை கல்வியை முடித்தார்.[1] அவர் தனது 27 ஆம் வயது வரை வாலன்டோவிலேயே இருந்தார், பின்பு மாசிடோனியாவின் தலைநகரான ஸ்கோப்ஜேக்கு குடிப்பெயர்ந்தார்.இவானோவ் மஜா இவனோவா என்பவரை மணந்தார்.
அரசியல் மற்றும் சமுதாய செயற்பாடு
[தொகு]யூகோஸ்லாவிய சகாப்தத்தில் இருந்து இவனோவ் அரசியல் ரீதியாக தீவிரமாக செயல்பட்டு வருகிறார், அவர் இந்நாட்டை அரசியல் பன்முகத்தன்மை மற்றும் சந்தைப் பொருளாதாரத்திற்கு நகர்த்தினார். 1990 வரை அவர் யூகோஸ்லாவியாவின் சோசலிச இளைஞர் கழகத்தின் ஒரு செயலராக இருந்தார், மற்றும் இந்த அமைப்பின் கடைசி தலைமை உறுப்பினர் ஆவார்.அங்கு அரசியல் அமைப்பு முறையை சீர்திருத்துவது, அரசியல் பன்முகத்தன்மை மற்றும் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அவர் பணியாற்றினார்.அவர் மாசிடோனியன் அரசியல் அறிவியல் சங்கத்தின் நிறுவனர் மற்றும் கௌரவ தலைவர் ஆவார்.
வடக்கு மாசிடோனியாவின் குடியரசுத்தலைவர்
[தொகு]பிரச்சாரம் மற்றும் தேர்தல்
[தொகு]2009 ஜனவரி 25 ம் தேதி, மாசிடோனிய பாராளுமன்றத்தின் வலிமையான கட்சியாக இருந்த VMRO-DPMNE கட்சி ஜார்ஜ் இவானோவை 2009 பாராளுமன்றத் தேர்தலில், தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தியது. அவர் VMRO-DPMNE இன் வேட்பாளராக முன்மொழியப்பட்டாலும்[2], அவர் கட்சி உறுப்பினராக இல்லை.தனது பிரச்சாரத்தின் போது, இவனோவ் அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், "மாசிடோனியா குடியரசின் ஜனாதிபதியும் கிரேக்க குடியரசின் ஜனாதிபதிக்கும் இடையே ஒரு கூட்டத்தை வலியுறுத்துவேன்" என்று அறிவித்தார் மற்றும் அவரது முக்கியக் குறிக்கோளானது கிரேக்கத்துக்கும் மாசிடோனியாவுக்கும் இடையே உள்ள நீண்டக்கால பிரச்சனையை தீர்த்துவைப்பதாக கூறினார். 2009 மாசிடோனிய ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் மாசிடோனியாவின் 343,374 (35.06%) குடிமக்கள் இவானோவ்விற்கு வாக்களித்தனர். அவரை எதிர்த்து போட்டியிட்ட சமூக ஜனநாயகவாதி கட்சியைச் சார்ந்தவர் 20.45% வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார். ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றில் இவானோவ் 453,616 வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்தார். எதிர்க்கட்சி வேட்பாளர் 264,828 வாக்குகளைப் பெற்று தோல்வியை அடைந்தார். ஏப்ரல் 16 அன்று, ஒரு விழாவில் இவானோவ் நாட்டின் தேர்தல் ஆணையத்திடமிருந்து ஜனாதிபதி சான்றிதழைப் பெற்றார்.
பதவியேற்பு
[தொகு]இவானோவ் மே 12, 2009 இல் பதவியேற்றார். பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட பின், மாசிடோனிய பாராளுமன்றத்தில் தனது உரையை ஆரம்பித்தார். தனது உரையில் தனது முக்கிய வேளைகளாகக் குறிப்பிட்டது - மாசிடோனியாவை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் உறுப்பினராக மாற்றுவது,அண்டை நாடுகளுடன் நல்ல உறவுகளைக் கொள்வது குறிப்பாக கிரீஸ் நாட்டுடன் நல்லுறவை கொள்வது மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Biography". www.president.mk. Archived from the original on 2019-04-17. பார்க்கப்பட்ட நாள் 2019-04-17.
- ↑ https://www.britannica.com/biography/Gjorge-Ivanov
- ↑ "Archived copy". Archived from the original on 2011-09-28. பார்க்கப்பட்ட நாள் 2009-08-06.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)