சோக்ரா திருவிழா
சோக்ரா Sogra | |
---|---|
வகை | நாட்டுப்புற கலை |
காலப்பகுதி | ஒவ்வோர் ஆண்டும் |
அமைவிடம்(கள்) | மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம், அசாம் & ரி-போய் மாவட்டம், மேகாலயா, இந்தியா |
பரப்பு | அசாம் மற்றும் மேகாலயா, இந்தியா |
புரவலர்கள் | திவா இனக்குழு |
சோக்ரா திருவிழா (Sogra Festival) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் திவா [1] இனக்குழு மக்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். இத்திருவிழா சாகுபடி பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. [2] திருவிழாவின் போது கிராம பூசாரி அல்லது லோரோ, மிந்தாய் லெகேவா என்ற ஒரு சடங்கு செய்கிறார். இந்த சடங்கில், லோரோ பல்வேறு தெய்வங்களின் பெயர்களையும், கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளையும் பாடுகிறார். இந்நிகழ்வு பல மணிநேரங்களுக்குத் தொடரலாம். பாராயண விழா நள்ளிரவில் லோரோவின் இல்லத்தில் பிசை எனப்படும் கிராமப் பெரியவர்கள் மற்றும் பந்தை கேல் எனப்படும் இளைஞர் குழு முன்னிலையில் நடைபெறுகிறது.
திருவிழா நேரம்
[தொகு]சோக்ரா திருவிழா மார்ச்சு மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இது ஆம்கா, அம்சாய், அம்ரி, மர்சோங் மற்றும் உலும்புய் போன்ற கிராமங்களில் கொண்டாடப்படும் வசந்த விழா என்றும் அழைக்கப்படுகிறது. [3] இவை சோக்ரா திருவிழாவைக் கொண்டாடும் பாரம்பரியத்தை பராமரிக்கும் நான்கு வேர் கிராமங்களாகும். பொதுவாக இது புதன்கிழமை தொடங்கி திங்கள் வரை தொடர்கிறது. இந்த நாட்களில் இளைஞர்கள் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.
வரலாறு
[தொகு]சோக்ரா திருவிழாவின் தோற்றம் குறித்து திவா மக்களிடத்தில் தற்போதுள்ள ஒரு புராணக்கதையின் இரண்டு வெவ்வேறு பதிப்புகள் உள்ளன. [4] அம்சாய் கிராமத்துடன் தொடர்புடைய ஒரு பதிப்பின் படி, இந்த திருவிழா மசிபோர் சாக்ரா என்ற அனாதை சிறுவனால் அறிமுகப்படுத்தப்பட்டது. கதையின்படி, ஒரு நாள் மசிபோர் மலைகளில் சுற்றித் திரிந்தபோது, பனியைப் போன்ற சில அசாதாரண வெள்ளைப் பூக்களைக் கண்டார். கிராமத்து பெரியவர்கள் பூக்களை பற்றி அறிந்ததும், இது கடவுளின் பரிசு என்று நினைத்து, அதை ஒரு மத விழாவாக கொண்டாட முடிவு செய்தனர். அந்தச் சிறுவன் சாக்ரா குலத்தைச் சேர்ந்தவன் ஆதலால் அவனுடைய குலத்தின் பெயரால் இந்த விழாவுக்குப் பெயரிடப்பட்டது. மார்சோங்கு குழுவுடன் தொடர்புடையதாகும். கதையின் மற்றொரு பதிப்பில் ஒரு நாள் சாரிபகாய், தாலியா, தோக்ரியா மற்றும் பலகோங்கோர் போன்ற மற்ற கடவுள்களுடன் ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்தபோது, வானத்திலிருந்து ஒரு கொத்து மலர்கள் விழுந்தன என்று கூறுகிறது. பூக்கள் மிகவும் அழகாக இருந்தன, எனவே தாலியா அவற்றை தன்னுடன் எடுத்துச் சென்று தனது கிராமத்து சிறுவர்களுக்கு கொடுத்தார். நடனமாடத் தொடங்கிய குழந்தைகளை மலர்கள் வெகுவாகக் கவர்ந்தன. அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு தேவர்கள் விழாவைக் கொண்டாட முடிவு செய்தனர். சோக்ரா திருவிழா முதலில் அம்சையில் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Expert, NE Travel (2020-04-19). "THE TIWA TRIBE". NE Tribe (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-10-23. பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
- ↑ "SOGRA MISAWA BEING CELEBRATED BY THE TIWA COMMUNITY - INSIDE NE" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
- ↑ "Tiwa Community Festivals Issues and analysis @ abhipedia Powered by ABHIMANU IAS". abhipedia.abhimanu.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
- ↑ Patar, Raktim (2021-02-14). The Tiwa Ethnohistory (in ஆங்கிலம்). Notion Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-63745-518-0.