செல்லூர் (மதுரை)
செல்லூர் (மதுரை)
Sellur (Madurai) திருவாப்பனூர் | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 9°56′03.1″N 78°07′05.9″E / 9.934194°N 78.118306°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 159 m (522 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே 5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625 002 |
தொலைபேசி குறியீடு | 0452 |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, சிம்மக்கல், தல்லாகுளம், கோரிப்பாளையம், செனாய் நகர், யானைக்கல், நெல்பேட்டை, கீழவாசல், ஆரப்பாளையம் |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் | செல்லூர் கே. ராஜூ |
செல்லூர் (Sellur) என்ற புறநகர்ப் பகுதி, இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே செல்லூர் உள்ளதால், செல்லூரிலிருக்கும் பக்தர்கள் தினமும் கோயிலுக்குச் சென்று வருகின்றனர். செல்லூர், கோரிப்பாளையம் சந்திக்கும் இடத்தில், அழகர்கோயில் சாலை, பனகல் சாலை, ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் சாலை, கல்பாலம் சாலை, பாலம் ஸ்டேசன் சாலை, செல்லூர் சாலை சந்திப்பில், இந்த நூற்றாண்டின் அரசியல் தலைவர்களில் ஒருவரான, 'அரசியல் மற்றும் ஆன்மீகம் எனது இரண்டு கண்கள்' என்று வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவ ஐம்பொன் சிலை ஒன்று உள்ளது. அரசியல் தலைவர்கள் அனைவரும் மரியாதை செலுத்துவது வழக்கம்.[1][2]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 159 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள செல்லூர் புறநகர்ப் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள்: 9°56'03.1"N78°07'05.9"E (அதாவது, 9.9342°N,78.1183°E) ஆகும்.
போக்குவரத்து
[தொகு]சாலைப் போக்குவரத்து
[தொகு]அதிக நெரிசல் மிகுந்த பகுதியான செல்லூரில் சாலைப் போக்குவரத்து எப்போதும் சிறிது கடினமானதாக இருக்கும். கோரிப்பாளையத்திலிருந்து தத்தனேரி செல்லும் பாதையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, புதிய கூடுதல் இணைப்புப் பாலம் ஒன்று, ரூ. 9.5 கோடிக்கு, நிர்வாக அனுமதியுடன், 320 மீ நீளமும் 7.5 மீ அகலமும் கொண்டதாக அமைய, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.[3]
தொடருந்து போக்குவரத்து
[தொகு]செல்லூரிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலுள்ள மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், வெளியூர் பயணத் தொடர்புக்கு ஏற்றவாறு, மாநகரப் பேருந்துகள் மூலம் சென்று வர சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது.
வான்வழிப் போக்குவரத்து
[தொகு]இங்கிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலுள்ள மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம், வெளிநாட்டிலிருந்தும் ஜவுளித்துறை வியாபாரிகள் மற்றும் முகவர்கள், செல்லூரில் இயங்கும் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிற்சாலைகள் மூலம் ஜவுளிகள் மொத்த கொள்முதல் பெற, வந்து செல்ல வசதியாக உள்ளது.
அருகிலுள்ள ஊர்கள்
[தொகு]மதுரை, கோரிப்பாளையம், தத்தனேரி, நரிமேடு, பி. பி. குளம், சின்ன சொக்கிகுளம், தல்லாகுளம், செனாய் நகர், நெல்பேட்டை, சிம்மக்கல், யானைக்கல், ஆரப்பாளையம் ஆகியவை செல்லூருக்கு அருகிலுள்ள ஊர்கள்.
செல்லூர் ஏரி
[தொகு]பரந்து விரிந்து காணப்படும் செல்லூர் கண்மாய் என்னும் செல்லூர் ஏரியை, நவீன மதுரை உருவாக்கம் திட்டத்தின் கீழ், பொது பயன்பாட்டு இடமாக, பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.[4]
கல்வி
[தொகு]பள்ளிகள்
[தொகு]செல்லூருக்கு மிக அருகிலுள்ள நரிமேட்டில் அமைந்துள்ள ஓ.சி.பி.எம். (O.C.P.M.) மேல்நிலைப் பள்ளி மற்றும் நோயஸ் (Noyes) மெட்ரிக் பள்ளி ஆகியவை முக்கியமான பள்ளிகள். இப்பள்ளிகளில் நடக்கும் அறிவியல் சார்ந்த கண்காட்சிகள் அகில இந்திய அளவில் ஈர்க்கப்பட்டு வருகின்றன.
கல்லூரிகள்
[தொகு]அருகிலுள்ள கோரிப்பாளையம் தன்னகத்தே கொண்டுள்ள அமெரிக்கன் கல்லூரி, மதுரை மற்றும் மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மூலம் செல்லூரைச் சுற்றியுள்ள மாணவ, மாணவிகளும் பயன் பெறுகின்றனர். இரண்டு கி.மீ. தொலைவிலேயே மதுரை மருத்துவக் கல்லூரி ஒன்றும் உள்ளது.
தொழில்
[தொகு]செல்லூர் நெசவுத் தொழிலுக்குப் பிரசித்தி பெற்ற ஊர். கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிற்சாலைகள் அதிகம் கொண்டிருந்து, அதன் மூலம் சுற்றியுள்ள ஊர்களுக்கும் வேலை வாய்ப்புகள் அதிகம் உருவாக்கித் தந்த செல்லூர், அந்தத் தொழிலில் ஏற்பட்ட நசிவால் குறைந்த அளவிலேயே தொழிலாளர்களைக் கொண்டு, தற்போது வேறு சில தொழில்களில் மக்கள் ஈடுபட வழிவகுத்துள்ளது.
அரசியல்
[தொகு]செல்லூர் பகுதியானது, மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[5] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் மு. பூமிநாதன் ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார். முந்தைய தமிழக அமைச்சரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சரான, தற்போதைய மதுரை (மேற்கு) சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான செல்லூர் கே. ராஜூ, செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்.
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]திருவாப்புடையார் கோயில்
[தொகு]மதுரை திருவாப்புடையார் கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில், செல்லூர் நகரின் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள தெருவில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் இது இரண்டாவது ஆகும்.[6] மதுரையிலுள்ள பூத தலங்களில் இது நீர்த் தலமாகும். மாசி மகம் அன்று இங்கு பிரம்மோற்சவம். மூலவர் ஆப்புடையார் என்றும் ஆப்பனூர் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் குந்தளாம்பிகை என்றும் குரவங்கழ் குழலி என்றும் அழைக்கப்படுகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை". DailyThanthi. https://www.dailythanthi.com/News/State/2021/10/30082035/chiefMinister-evening-wear-and-homage-to-the-Devar.vpf.
- ↑ "தலைவர்கள் அறிவோம்: முத்துராமலிங்கத் தேவர்". Dinamani. https://www.dinamani.com/specials/kalvimani/2014/feb/21/தலைவர்கள்-அறிவோம்-முத்துர-844798.html.
- ↑ "செல்லூர் பாலத்தில் புதிய இணைப்பு பால பணி துவக்கம்". Dinamalar. https://m.dinamalar.com/detail.php?id=3132771.
- ↑ "சங்க கால மதுரையை நவீன மதுரையாக உருவாக்கியது திமுக அரசு: முதல்வர் ஸ்டாலின்". Dinamani. https://www.dinamani.com/tamilnadu/2022/jan/21/created-by-the-dmk-government-as-the-modern-madurai-stalin-3777543.html.
- ↑ "மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-13.
- ↑ "திருவாப்புடையார் - Tiru Aappudayar - Sellur - temple". Dinamalar.