உள்ளடக்கத்துக்குச் செல்

செம்பவாங் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செம்பவாங் பூங்கா, சிங்கப்பூரில் உள்ள கடலோர பூங்காவாகும். 15 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பூங்கா சிங்கப்பூரின் வடக்கில் மலேசியாவின் ஜோஹோர் மாநிலத்தை பார்த்தவாறு அமைந்துள்ளது. செம்பவாங் சாலையின் இறுதியில் இந்த பூங்கா அமைந்து இருக்கிறது.

பொழுது போக்கு அம்சங்கள்

[தொகு]

இங்கு மக்களை கவரும் பல இடங்கள் இருக்கின்றது.சிங்கபூர் கடற்படை அருங்காட்சியகம், செம்பவாங் கடற்கரை, செம்பவாங் பயணிகள் கப்பல் தளம், இரண்டாம் உலகப்போர் நினைவிடங்கள் போன்றவை இங்கு உள்ளன. இந்த பூங்காவில் உள்ள நாகலிங்க பூ மரங்கள் மக்களை கவனத மற்றொரு அம்சமாகும்.

இங்கு செல்ல

[தொகு]

செம்பவாங் பூங்கா மற்றும் கடற்கரைக்கு செல்ல எஸ்.எம்.ஆர்.டி போக்குவரத்து கழகத்தின் சேவை எண் 882, 167 ஆகிய பேருந்துகளில் பயணிக்கலாம். இந்த பேருந்துகளை எடுப்போர் செம்பவாங் பேருந்து நிலையம் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.

மேலும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பவாங்_பூங்கா&oldid=3623934" இலிருந்து மீள்விக்கப்பட்டது