செஞ்சி ஆறு
Appearance
செஞ்சி ஆறு விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி போன்ற வட தமிழகப் பகுதிகளில் பாயும் சங்கராபரணி ஆற்றின் கிளையாறு ஆகும். புதுச்சேரி காரைக்கால் பகுதியில் வடமேற்கிலிருந்து தென்கிழக்காக இந்த ஆறு பாய்கிறது. காரைக்காலின் குடிநீர் ஆதாரங்களுள் ஒன்றாகும். மலையனூர் மலைப்பகுதிகளில் உருவாகி 79 கி.மீ. பாய்கிறது. பருவக்காலங்களுக்கேற்ப இந்த ஆற்றுத் தண்ணீர் வரத்தும் இருக்கும். அக்டோபர்-டிசம்பர் போன்ற மழைக்காலத்தில் நீரோட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.