சூளகிரி
சூளகிரி | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 12°39′50″N 78°00′43″E / 12.664°N 78.012°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி மாவட்டம் |
மொழிகள் | |
• ஆட்சி மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே 5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635 117 |
தொலைபேசி குறியீட்டெண் | 04344 |
சூளகிரி (Shoolagiri) (கன்னடத்தில் ಶೂಲಗಿರಿ) தமிழ் நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராகும். இது சூளகிரி வட்டம் மற்றும் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமாகவும் உள்ளது. சூளகிரி நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
சூளகிரி ஒன்றியத்தில் 42 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஏழாம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சூளகிரி, ஓசூரிலிருந்து 25 கி.மீ., கிருஷ்ணகிரியிலிருந்து 27 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பெயர்க் காரணம்
[தொகு]இவ்வூர் சூலகிரி என்ற மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இம்மலை பார்ப்பதற்கு மூன்று முகடுகளுடன் திரிசூலம்போல் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது. இம்மலையின் பெயரே இவ்வூருக்கு பெயரானது ஆனால் சூளகிரி என்று பிழையாக எழுதப்பட்டுவருகிறது.
மக்கள் வகைபாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 9,530 ஆகும். இதில் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,218 உள்ளது. இது கிராமத்தின் மக்கள் தொகையில் 12.78% ஆகும். கிராமத்தில் எழுத்தறிவு பெற்றவர்கள் விகிதம் 77.03% ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[1]
சிறப்புகள்
[தொகு]கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாரம் அடர்ந்த வனப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது அதிக அளவில் கொத்தமல்லி, புதினா, முட்டைக்கோஸ், தக்காளி, கீரைவகைகள் பயிரிடப்படுகின்றன. இப்பகுதியில் விளையும் காய்கறிகள் அனைத்து மாநில, மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிக வனப்பகுதி ஊர் என்பதால் அடிக்கடி யானைகள், மான்கள், காட்டுப்பன்றிகள் விவசாய நிலத்தில் சேதம் ஏற்படுத்தி வருகிறது. சூளகிரி அருகே காமராஜரால் கட்டப்பட்ட சூளகிரி - சின்னாறு அணை உள்ளது. அணையின் உபரி நீரில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் அதிக அளவில் உள்ளன.
மேலும் சூளகிரியில் பல கிரானைட் தொழிற்சாலைகளும், கல்குவாரிகளும் உள்ளன. சூளகிரியில் தமிழ், கன்னடம், தெலுங்கு, உருது, ஆங்கிலம், இந்தி பேசும் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது சூளகிரி ஒரு தாலுகாவாக உள்ளது. மேலும் கனமழை மற்றும் பருவ மழை பெய்யும் காலத்தில் அனைத்து இடங்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல காட்டாறுகளும், ஊற்றுகளும் பெருக்கெடுத்து ஓடுவதைக் காண முடியும்.
பெருங்கற்காலச் சின்னங்கள்
[தொகு]சூளகிரியின் வடக்குப்புற மலைப் பகுதியில் பெருங்கற்கால ஈமச் சின்னங்களான கல்வட்டங்கள் சுமார் 25 உள்ளன.[2]
ஊரில் உள்ள கோயில்கள்
[தொகு]- காசி விஸ்வநாதசாமி கோயில்
- மலை முனீஸ்வரர் கோயில்
- ஆதிபராசக்தி கோயில்
- அமிர்த லிங்கேசுவரர் திருக்கோயில்
- பெருமாள் மலைக்கோயில்
- ஶ்ரீ ஐயப்பன் கோயில்
குறிப்புகள்
[தொகு]- ↑ "Shoolagiri Population - Krishnagiri, Tamil Nadu". Census2011. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
- ↑ த. பார்திபன், தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி-II சங்க காலம். ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறகட்டளை, தருமபுரி. 2010 ஏப்ரல். p. 139.
{{cite book}}
: Check date values in:|year=
(help)