சூறாவளி ஈசாக்கு (2012)
Appearance
Category 1 hurricane (SSHWS/NWS) | |
ஈசாக்கு வகை I சூறாவளி - ஆகஸ்டு 28, 2012 | |
தொடக்கம் | August 21, 2012 |
---|---|
மறைவு | August 31, 2012 |
உயர் காற்று | 1-நிமிட நீடிப்பு: 80 mph (130 கிமீ/ம) |
தாழ் அமுக்கம் | 968 பார் (hPa); 28.59 inHg |
இறப்புகள் | 38 நேரடி, 3 மறைமுக |
சேதம் | $3 பில்லியன் (2012 US$) |
பாதிப்புப் பகுதிகள் | லீவாட் தீவுகள், புவேர்ட்டோ ரிக்கோ, லா எசுப்பானியோலா, கூபா, பகாமாசு, தென்னாசிய அமெரிக்கா |
சூறாவளி ஈசாக்கு (Hurricane Isaac) என்பது மேற்கு புளோரிடா பன்கன்டல், அலபாமா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்ட அமெரிக்காவின் தென் குடா கரையினை தாக்கிய புயல் தாழமுக்கமாகும். 2012 அத்திலாந்திக் சூறாவளி காலநிலையில் ஒன்பதாவது சூறாவளியும், ஒன்பதாவது பெயரிடப்பட்ட புயலுமாகிய ஈசாக்கு ஆகஸ்டு 21 கிழக்கு சிறிய அண்டிலிசுலிருந்து சூறாவளி அலைகளினால் உருவாகி, பின்னர் அடுத்த நாள் சூறாவளி புயலாக உருவாகியது. இச்சூறாவளி லா எசுப்பானியோலா, கூபா ஆகிய இடங்களை பெரும் சூறாவளிப் புயலாகக் கடந்து, மெக்சிகோ வளைகுடாவினை அடைந்ததும் குறைந்தது 29 பேரைக் கொன்றது. ஈசாக்கு 28 ஆகஸ்து காலையில் சூறாவளி நிலையை அடைந்தது.