உள்ளடக்கத்துக்குச் செல்

சுரவானா கோயில், கிழக்கு ஜாவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனரமைக்கப்பட்ட சுரவானா கோயிலின் தளம்.

சுரவானா கோயில் (Surawana) (இந்தோனேசிய மொழி: Candi Surawana சில நேரங்களில் Candi Surowono எனவும் அழைக்கப்படுகிறது) இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயில் கிழக்கு ஜாவாவில் பரே மாவட்டத்திற்கு அருகில் கெதிரி என்னுமிடத்தில் உள்ள காங்கு என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. கி.பி 1390 ஆம் ஆண்டில் வெங்கர் இளவரசரான விஜயராஜாசாவின் நினைவாக இக்கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி கோயில் முழுமையாக அப்படியே இல்லை. கோயிலின் அடிப்பகுதி மட்டுமே அதன் அசல் வடிவ நிலைக்கு மீட்டு அமைக்கப்பட்டுள்ளது, மேலும் பல செங்கற்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டிய நிலையில் கட்டடப் பகுதியில் தயாராக உள்ளன.

வரலாறு

[தொகு]

சுரவானா கோயில் கி.பி. 1390 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, ஆனால் 1400 ஆம் ஆண்டில் துவங்கும் வரை அக் கோயிலின் கட்டுமானப்பணி "அதிகாரப்பூர்வமாக" முடிக்கப்படவில்லை. இது வெங்கர் இளவரசர் விஜயராஜாசாவின் நினைவாக கட்டப்பட்டது. திருமணத்தின் பந்தம் காரணமாக ராஜசநகரத்தின் மாமாவாக இருந்த அவர் அதிகாரத்தில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தார். இது இளவரசனின் நினைவுச்சின்னமாகத் தொடங்கவில்லை என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் அவர் உண்டாக்கி வைத்த ஒரு கட்டட அமைப்பாக மட்டுமே அது இருந்தது. அதனால்தான் அது கட்டி முடிக்கப்பட்ட நாள் குறித்த விவரங்கள் வேறுபட்ட நிலையில் அமைந்துள்ளன. ஒரு இறுதிச்சடங்கு என்று அழைக்கப்படுகின்ற ஸ்ரத்தா விழா 1400 ஆம் ஆண்டில் நடைபெற்றது, அதனால்தான் சிலர் அது உண்மையான நிறைவு நாளாக இருக்கும் என்று ஊகிக்கின்றனர். அதற்குப் பிந்தைய வரலாற்றினைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. அதுபோலவே அது எவ்வாறு அகற்றப்பட்டது என்பதைப் பற்றியும் யாரும் தெரிந்திருக்கவில்லை.ஆனால் தற்போது அது பரேவுக்கு வெளியே கெதிரி மாவட்டத்தில் உள்ள காங்கு என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது. இப்போதைக்கு நிபுணர்கள் அதன் தளத்தை அதன் அசல் நிலைக்கு மீட்டமைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

வடிவமைப்பு

[தொகு]

சுரவானா கோயில் 7.8 சதுர மீட்டர் அடித்தளம் மற்றும் 4.6 மீட்டர் உயரமும் கொண்ட ஒரு மிதமான அளவில் அமைந்த கோயிலாகும். கட்டமைப்பில் தற்போது எஞ்சியிருப்பது கால் அல்லது பாதப்பகுதி மட்டுமே ஆகும். அடிவாரத்தில் ஒரு துருத்திய நிலையில் உள்ள அமைப்பு காணப்படுகிறது. அது செல்லாவிற்குச் செல்கின்ற படிகளைப் பிடித்த வண்ணம் அமைந்துள்ளது. இது கோயிலின் உள் அறையாக இருந்திருக்கும். பெரும்பாலான கிழக்கு ஜாவானிய கோயில்களின் அமைப்பினைப் போலவே மேற்கு திசையை நோக்கி எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சுரவானா பலவிதமான புடைப்புச் சிற்பங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பல முழு கட்டிடத்தையும் சுற்றி நீண்டு அமைந்துள்ளன. சுவர்களில் சித்தரிக்கப்பட்டுள்ள கதைகள் அவர்கள் எதிர்கொள்ளும் திசையை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, அர்ஜுனாவிவாஹா கதை கிழக்கு நோக்கிய சுவரில் தொடங்குகிறது. பின்னர் நின்றுவிடுகிறது. மறுபடியும் வடகிழக்கினை எதிர்கொள்ளும் சுவரில் இருந்து தொடங்குகிறது. பின்னர் அது வடக்குச் சுவரில் தொடர ஆரம்பிக்கிறது. மற்றும் கிழக்குப் பகுதியைத் தவிர்த்துவிட்டு தெற்கே சென்று எதிர் திசையில் மேற்கு நோக்கி தொடர்கிறது. இந்த புடைப்புச் சிற்பங்கள் அனைத்துமே திசையுடன் தொடர்பு கொண்டவையாகவே அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கி அமைந்துள்ள சிற்பங்கள் உதயமாகும் சூரியனின் திசையையும் புனிதமான மலையும் உணர்த்துகிறது. அதிகமான மதக் காட்சிகளைக் கொண்ட கதைகளின் பகுதிகள். மேற்கு நோக்கிய செதுக்கல்களில் காணப்படுகின்றன. அவற்றில் பேய்கள், அரக்கர்கள், போர்கள் மற்றும் மரணத்துடன் தொடர்புடையவை அடங்கும். அர்ஜுனாவிவாஹா என்பது பலவிதமான பிரேம்களைக் கொண்ட தொடர்ச்சியான கதையாகத் தொடர்ந்து வருகிறது. ஆனால் சில கட்டங்களில் அதற்குக் குறுக்கீடாக ஸ்ரீ தஞ்சங் மற்றும் புபுக்ஷா கதைகள், மூலைப் பகுதிகளில் செங்குத்து கோணங்களில் காட்சியளிக்கின்றன. 1939ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்படும் வரையில் அது அசல் கதையின் மூலப்பகுதி எனக் கருதப்பட்டு வந்தது.

அலங்காரம்

[தொகு]

கோயிலின் மேற்பரப்பு பல சிற்பங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் கோயிலின் பக்கங்களிலும் கணங்கள் காணப்படுகின்றன. அந்த கணங்கள் சிவனுக்கு சேவை செய்வதற்காக கணேசரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் நீட்டப்பட்ட கரங்களால் கட்டிடத்தை உயர்த்திப் தாங்கிப் பிடித்த நிலையில் உள்ளனர். அவை ஜாவி கோயிலில் உள்ள கட்டமைப்புகளில் காட்டப்பட்டுள்ள புள்ளிவிவரங்களுடன் ஒத்து வருகின்றன. கணங்களைச் சுற்றி சிற்பங்கள் உள்ளன. அந்த சிற்பங்கள் காதணிகள், மார்பில் அணியும் அணிகலன், நெக்லஸ், நகைகள் கொண்ட இடுப்பு பெல்ட், காப்பு, அம்புகள் மற்றும் சிலம்பு போன்றவை காணப்படுகின்றன. மயாபாகித்து பேரரசு வளர்ந்து செழித்த நிலையில் இருந்தபோது சமகால அழகியல் பாணியின் பிரதிநிதித்துவங்களாக இவை அமைந்திருந்தன..

.

குறிப்புகள்

[தொகு]