உள்ளடக்கத்துக்குச் செல்

சுசான்னி இம்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசான்னி இம்பர்
Suzanne Imber
பணியிடங்கள்இலைசெசுட்டர் பல்கலைக்கழகம்
கோடார்டு விண்வெளிப் பறப்பு மையம்
கல்வி கற்ற இடங்கள்இலண்டன் இம்பீரியல் கல்லூரி
ஆய்வேடுவடப்புறக் கோளிடையில் காந்தப் புல இடைவெளிகளில் அமையும் காந்தக் கடப்பு மீளிணைவு சார்ந்த அந்தியொளி, மின்னணு மண்டில பாய்வு அளவீடுகள்

சுசான்னி (சுசீ) இம்பர் (Suzanne (Suzie) Imber) (பிறப்பு: மே 1983) இலைசெசுட்டர் பலகலைக்கழக்க் கோள் அறிவியலாளர் ஆவார். இவர் 2017 இல் பிரித்தானிய அலைவரிசை-2 இன் Astronauts, Do You Have What It Takes? எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியினை வென்றார்.

கல்வி

[தொகு]

இம்பர் பக்கிங்காம்சயரில் உள்ள அய்லேசுபரியில் பிறந்தார்.[1] இவர் எர்ட்போர்டுசயரில் உள்ள பெர்க்காம்சுடெடு பள்ளியில் படித்தார். அப்போது அண்டார்க்டிக்கின் 20 ஆம் நூற்றாண்டுத் தேட்டக் கதைகள் மிகவும் கவர்ந்துள்ளன.[2] இவர் 2000 இல் இலாக்ரோசி தகைமையை வென்றார்.[3] இவர் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் இயRபியல் படித்து 2005 இல் பட்டம் பெற்றார்.[2] She captained the Imperial College London Lacrosse team and went on to play for the England under-21s.[1] இவர் தன் முனைவர் பட்டத்தை 2008 இல் இலைசெசுட்டர் பல்கலைக்கழகத்தில் முடித்தார். இவரது ஆய்வுரை, வடப்புறக் கோளிடையில் காந்தப் புல இடைவெளிகளில் அமையும் காந்தக் கடப்பு மீளிணைவு சார்ந்த அந்தியொளி, மின்னணு மண்டில பாய்வு அளவீடுகள் (Auroral and Ionospheric Flow Measurements of Magnetopause Reconnection during Intervals of Northward Interplanetary Magnetic Field) என்பதாகும்.[4]

ஆராய்ச்சியும் பணியும்

[தொகு]

இம்பர் நாசா ஆராய்ச்சி அறிவியலாளராக 2008 இல் கோடார்டு விண்வெளிப் பறப்பு மையத்தில் சேர்ந்தார்.[5] இங்கு இவர் எப்படி சூரியக் காற்ரின் ஆற்றலும் உந்தமும் புவியின் காந்தப் புலங்களுக்கு கடத்தப்படுகின்றன என்பதை ஆய்வு செய்தார்.[5] இவரது மேற்பார்வையாளரும் வழிகாடியுமாக ஜிம் சுலாவின் விளங்கினார். அவரும் அறிவன் மெசெஞ்சர் இலக்குத் திட்டத்தில் ஈடுபட்டவர் ஆவார்[1]

இவர் 2011 இல் இலைசெசுட்டர் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பிவந்து முதுமுனைவர் ஆராய்ச்சி உதவியாளராகச் சேர்ந்தார்.[2] இவருக்கு 2014 இல் இலிவர்குல்மே அறக்கட்டளையின் ஆய்வுநல்கை, "கடுங்காற்றுகள் அறிவன் கோள் காந்தக் கோளத்தையும் அதிரச் செய்கின்றன (Rough Winds do Shake the Magnetosphere of Mercury)" எனும் தலைப்பில் ஆய்வு செய்ய வழங்கப்பட்டது.[6] இவர் 2018 அக்தோபரில் ஏவப்படவுள்ள, ஐரோப்பிய விண்வெளி முகமையின் அடுத்த பெபிகொலம்போ எனும் அறிவன் இலக்குத் திட்டக் கருவி வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளார்.[7] இவர் அறிவன் (புதன்) கோளின் காந்தக் கோளத்தையும் ஆய்வு செய்கிறார்.[8]

இவர் 2017 இல் பிரித்தானிய அலைவரிசை-2 இன் Astronauts, Do You Have What It Takes? எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.[9][10][11][12] இவர பல அறைகூவல்களைச் சந்தித்துள்ளார். இவற்றில் ஒன்று, ஐந்து மடங்கு ஈர்ப்பில் உள்ள மையவிலக்கியில் உருசிய மொழியைப் பேசியுள்ளார்; அடுத்து கடலடிப் பயிற்சி ஏந்தமைப்பின் நெருக்கடிநிலை செயல்முறைகளில் கலந்துகொண்டுள்ளார். மேலும் இவர் தன் குருதிப் பதக்கூறுகளை தனே எடுத்துள்ளார்.[13] இவர் போட்டியில் வெற்றிபெற்று ஐரோப்பிய விண்வெளி முகமையில் சேர கிறிசு ஏடுபீல்டின் பரிந்துரையைப் பெற்றுள்ளார்.[14] வெற்றி பெற்றதும், இம்பர் பல மக்கள் பரப்புரைகளில் ஈடுபட்டு அவர்களுக்கு விண்வெளி அறிவியலில் விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் மேம்படுத்தியுள்ளார்.[7][15][16][17][18][19][20]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Interview with Suzie Imber" (in en). Times Higher Education (THE). 2017-10-12. https://www.timeshighereducation.com/people/interview-suzie-imber. 
  2. 2.0 2.1 2.2 si88. "Dr Suzanne Imber — University of Leicester". www2.le.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-09.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  3. "Former pupil Suzie Imber wins BBC astronaut series - Berkhamsted" (in en-GB). Berkhamsted. 2017-10-03 இம் மூலத்தில் இருந்து 2018-04-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180410072008/https://www.berkhamstedschool.org/former-pupil-suzie-imber-wins-bbc-astronaut-series/. 
  4. (in en) Auroral and Ionospheric Flow Measurements of Magnetopause Reconnection During Intervals of Northward Interplanetary Magnetic Field. Milan, Steve, Lester, Mark. 2008-11-12. https://lra.le.ac.uk/handle/2381/8466. பார்த்த நாள்: 2018-09-09. 
  5. 5.0 5.1 "NASA - Fire and Ice: A Profile of Space Scientist Suzie Imber". www.nasa.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-09.
  6. "Applications - University of Leicester". University of Leicester. பார்க்கப்பட்ட நாள் 2018-04-09. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  7. 7.0 7.1 "An Evening with Dr Suzie Imber | The Wildlife Trusts". www.wildlifetrusts.org (in ஆங்கிலம்). Archived from the original on 2018-04-10. பார்க்கப்பட்ட நாள் 2018-04-09.
  8. "Astronauts: Do You Have What It Takes? - Suzie, 33 - BBC Two". BBC (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-09.
  9. University of Leicester (2017-10-01), Dr Suzie Imber - Astronauts: Do you have what it takes?, பார்க்கப்பட்ட நாள் 2018-04-09
  10. ap507. "Space scientist makes giant leap towards becoming an astronaut — University of Leicester". www2.le.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-09.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  11. ew205. "Leicester scientist reaches the final of BBC Astronauts competition — University of Leicester". www2.le.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-09.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  12. er134. "Leicester space scientist proves she has what it takes to become an astronaut — University of Leicester". www2.le.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-09.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  13. Profile, Specialist Speakers. "Suzie Imber Speaker Profile". Specialist Speakers Speaker Bureau. http://www.specialistspeakers.com/?p=9303. 
  14. "Space scientist wins BBC astronaut show" (in en-GB). BBC News. 2017-10-01. https://www.bbc.co.uk/news/uk-england-leicestershire-41460122. 
  15. "Suzie Imber – AndesExpedition.co.uk". andesexpedition.co.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2022-01-27. பார்க்கப்பட்ட நாள் 2018-04-09.
  16. Development, PodBean. "BBC Astronauts winner Dr Suzie Imber and Gravitational Waves" (in en). https://loveandscience.podbean.com/e/bbc-astronauts-winner-dr-suzie-imber-and-gravitational-waves/. 
  17. "‘Astronauts: Do You Have What It Takes?’ winner visits the North East with IOP – The Institute of Physics blog" (in en-gb). The Institute of Physics blog. http://www.iopblog.org/astronauts-do-you-have-what-it-takes-winner-visits-the-north-east-with-iop/. 
  18. "200 invalid-request". www.uppinghamcollege.org.uk. Archived from the original on 2018-04-09. பார்க்கப்பட்ட நாள் 2018-04-09.
  19. "SuperDARN scientist Suzie Imber wins UK Astronaut contest". vt.superdarn.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-09.
  20. "Astronauts: Have you got what it takes? | Physics and Astronomy | University of Southampton". www.phys.soton.ac.uk (in ஆங்கிலம்). Archived from the original on 2018-04-10. பார்க்கப்பட்ட நாள் 2018-04-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசான்னி_இம்பர்&oldid=3959704" இலிருந்து மீள்விக்கப்பட்டது